கண்ணபிரான் ரவிசங்கர் (KRS / கரச)
கே.ஆர்.எஸ் என்று பதிவுலகில்/ சமூக ஊடகவெளியில் பரவலாக அறியப்படும் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர், தமிழ்
மொழியின் பால் நனிவளர் பெருங்காதல் ஆராது கொண்டவர்; மொழியின் தொன்மத்திலும் தொடர்ச்சியிலும், அறிவியல் பாதை சார்ந்த தமிழ்
இயக்கத்திலும், பங்களிப்பு செய்து வரும் இளைஞர்.
தமிழ் மட்டுமன்றி வடமொழியும் (சம்ஸ்கிருதம்) பயின்றமையால், இருவேறு மரபியல் நுனித்து வேறுபடுத்திக் காட்ட வல்லவர்; சாம வேதம்/ சாந்தோக்ய உபநிடதப் பாடம் வல்லார்; சமணம், பெளத்தம், கிறித்துவம், இசுலாம் உள்ளடக்கிய தமிழின் பக்தி இலக்கியத்தை ஆழ வாசித்து, ஆழ்வார் அருளிச்செயலும், நாயன்மார் நற்றமிழ்த் தேவாரங்களும், இராமானுச மரபுகளும், திராவிட/ தமிழ் இயக்க வரலாறும் நனி பயின்றவர்.
New Updates
Online Book Launch
Live book launch on Thursday, 8th October 2020 with the Author – Mr. Eric Orsenna, Publisher – Amutharasan Paulraj, Translator – Prof. Vengada Soupraya Nayagar, along with Dr. Srinivas Kaveri, the director of CNRS, India, Literary Critic Ms. Jaya Bhattachariya Rose and Dr. Christine Cornet
ஆச்சரிய நூல்
நவீன மொழியாகக் கருதப்படும் பிரெஞ்சில், இந்த நூல் மாறுபட்ட வகையில் எழுதப்பட்டுள்ளது. சுருக்கமான அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் லூயி பஸ்தேரின் வாழ்க்கைக் காட்சிகளின் படப்பிடிப்புபோல் அமைந்துள்ளன. அதேநேரம் இந்த நூல் பஸ்தேரை முழுமையாகச் சித்தரிப்பதற்குப் பெரிதும் மெனக்கெட்டுள்ளது. எடுத்துக்காட்டுக்கு, தோல் பதனிடுதல் நடைமுறையில் அடங்கியுள்ள பல்வேறு அம்சங்கள் விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பஸ்தேரின் வாழ்க்கை முழுக்கத் துணையாக இருந்த நுண்ணோக்கிகளின் வரலாறு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இப்படியாக, நூலின் நாயகனைப் பற்றி மட்டுமில்லாமல், துணைக் கதாபாத்திரங்களையும் இந்த நூல் சிறப்புறக் காட்சிப்படுத்தியுள்ளது.
இந்த நூலை எழுதிய எரிக் ஒர்சேனா பொருளாதார நிபுணர், எழுத்தாளர். இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்த வெங்கட சுப்புராய நாயகர் பிரெஞ்சு பேராசிரியர். நேரடியாக அறிவியலுக்குத் தொடர்பில்லாத இவர்கள் இருவருடைய முயற்சியில், ஓர் அறிவியல் அறிஞரின் வாழ்க்கை வரலாற்று நூல் மேம்பட்ட வகையில் உருப்பெற்றுள்ளது. அறிவியல் துறையில் அனுபவமற்றவர்களும், இந்த நூலை எளிதாக வாசிக்க முடியும்.
https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/583796-louis-pasteur-125-5.html