பலுனில் அடைப்பட்ட காற்றாய்
உள்ளம் வெடிக்க காத்திருகிறது
விழிகளில் அழுத்தம் கூடும் போதெல்லாம்
நீயே மிதக்கிறாய்
காலவிரையமென கருதும்போதே
அருகாமையின் எதிர்பார்பில்
கரும்பாகி போனது
உன்னை நினைத்தவுடன்
தோன்றும் பலவும்
எழுதுகோல் நுனிக்கு வரமறுக்கிறது
பேருந்தும் தொடர்வண்டியுமாய்
மாறிமாறிப் பயணித்து
முகம் பார்க்க விரைகிறேன்
மீண்டும் தொடங்கும் பணிகளுக்கிடையே
வார இறுதி நாட்களும் நீயும்
மாறி மாறித் தெரிய
நிலையாமை உணர்கிறேன்
உன்னை அணைக்கும் தருணங்களில்
நிலையாமையை உடைக்கிறேன்.