"வாழ்க்கை நல்ல நிலைக்கு வந்தபிறகுதான் பலராலும் பாரட்டபெற்ற சிறந்த கதைகளாக...."
காலையிலிருந்தே பல்வேறு காட்சிபடிமங்களாக ஜி. ராம் பிரசாத்துக்கு விழுந்து கொண்டேயிருந்தன.கதைகள் கிளைகதைகள் என அவன் எழுதப்போகும் நாவலின் வடிவம் குறித்து பலதரப்பட்ட யோசனைகள் வந்து கொண்டிருந்தன. இத்த்னை நாள் பீடை போல அவனை பற்றிக்கொண்டிருந்த சோர்வு முழுவதுமாக மறைந்திருந்தது. உள்ளங்கைகளை தேய்த்து வெப்பமாக்கிக்கொண்டான் சந்திரகுண்சேகரன் வீட்டுக்கு வந்து ஞாயிறு,திங்கள் என முழுவதுமாய் இரண்டுநாட்கள் கடந்துவிட்டது.ஆனாலும் அன்றைய இரவு அவன் சொன்ன அந்த சம்பவம் அந்த செய்தியின் தாக்கத்திலிருந்து இன்னமும் அவனால் முழுமையாக வெளியே வரமுடியவில்லை. இப்படியெல்லாம் ஒருசம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறதா என ஆச்சர்யப்பட்டான். நீரூற்று இயந்திர பொறியாளன்”.இந்த பேரை மனதுக்குள் சொல்லும் போதே அவனுக்குள் பலவிதமான வாசனை உடலெங்கும் பரவுவது போலிருந்தது. அவன் சொன்ன செய்தியை மட்டுமே வைத்து முழுநாவலை எழுதி விடமுடியுமா என்பது சந்தேகமே. குறைந்தது இரண்டு வாரமாவது அந்த நகரத்துக்குள் சென்று பலரையும் சந்தித்து பலசெய்திகளை சேகரித்தால்தான் நாவலை முழ்மையான் வடிவத்துக்கு கொண்டுவரமுடியும் என் தோன்றியது. முதன் முறையாக அந்த புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தபோதே சந்திரகுணசேகரனிடம் ஒரு ஈர்ப்பு இருந்ததை ராம்பிரசாத் கண்டு கொண்டிருந்தான் . முதல் சிறுகதை வெளியானதிலிருந்தே இவனும் பல வாசகர்களை சந்தித்துவிட்டான். இத்தனை தீவிரமான ஒரு வாசகனை அவன் பர்ர்த்தில்லை. தன் கதைகளின் கவனத்துக்குடபடாத அதன் ரகசிய இடங்களை எப்படி அவனால துல்லியமாக கணிக்க முடிந்ததோ தெரியவில்லை. தனது ரயில் கதையில் வரும் வரிகளை சந்திர குணசேகரன் மனப்பாடமாக ஒப்பிக்கதுவங்கிய போது ராம்பிராசத் வாயை மூடிக்கொண்டு நின்றபடி வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
வாழ்வின் பல இருண்மைகளை தன் பள்ளிகாலத்திலிருந்தே கடந்துவந்துவிட்டிருந்தவன் ராம்பிரசாத்.கதைகள் எழுததுவங்கியதிலிருந்துதான் ஓரளவுக்காவது அவனால் நல்ல காற்றை ரசிக்க முடிந்தது.திருமுருகன் வீரபாகு என்ற அவனது அசல்பெயரில் முதல் இரண்டுகதைகளை எழுதியபோது ஒருநாள் கவிஞர் பிரமிளை பழைய புத்த்க கடை ஒன்றில் சந்திக்க நேரிட்டது.அவர் அவனது பெயரை கேட்டு ஒருமுறை அதிசயமாக பார்த்தார். பின் கணக்குகளை போட்டு இந்தபெயரில் இருந்தால் எவ்வளதான் சிறப்பாக எழுதினாலும் அத்ற்கு சமூகத்தில் மதிப்பு பெறாது.மேலும் உனக்கு மனரீதியான உளைச்சல்கள் வர வாய்ப்பிருக்கிரது அதனால் நான் ஒரு பெயரை தருகிறேன் எனக்கூறி இந்த பெயரை தாளில் எழுதிதந்தார். அதுதான் பத்து வருடங்களுக்கு முன் திருமுருகன் வீரபாகு ஜி..ராம்பிரசாத் ஆன கதை.
ஜி. ராம்பிரசாத் என பெயர் மாற்றியகையுடன் அதிசயம் போலத்தான் அடுத்த ஆறுமாதத்திலிருந்து அவனது வாழ்வில் மாற்றங்கள் நிகழதுவங்கியது. சென்னையில் கெமிஸ்டாக ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் வேலை.தொடர்ந்து முதல் சிறுகதை தொகுப்பு,அந்தவருடமே கதாவிருது என அடுத்த ஐந்துவருடங்களில் வாழ்வின் உச்சிக்கு சடசடவென ஏறிக்கொண்டிருந்தான். எல்லோரும் வறுமையில் கஷ்டப்படும் போதுதான் நல்ல படைப்புகள் எழுதுவார்கள் என்பது பொதுவாக இலக்கிய சூழலில் எழுதப்படாத விதி.. ஆனால் ஜி. ராம் பிரசாத்துக்கோ இவ்விஷ்யத்தில் தலைகீழ். வாழ்க்கை நல்ல நிலைக்கு வந்தபிறகுதான் பலராலும் பாரட்டபெற்ற சிறந்த கதைகளாக எழுதிதள்ளினான்.அவனிடம் எழுதுவத்ற்கானசிறுவயது அனுபவங்கள் சந்தித்த நிகழ்வுகள் மனிதர்கள் என ஏகப்பட்ட விஷ்யம் கொட்டிக்கிடந்தது.அத்ன் பிறகு சக அலுவலகதோழியுடன் இலக்கியமாக ஒருகாதல் முளைவிட்டது.. பால்யத்தில் எல்லோரிடமும் கடந்துபோன வாழ்க்கையின் சில எச்சங்கள்தான் அவனது கதைகள் என ச்ரளா கவித்துவமாய் ஒரு பேருந்துப்யணத்தினூடே சொல்லப்போக ஜி. ராம்பிரசாத் அவ்ளது விரல்களை இறுக்கமாக பற்றிக்கொண்டான்.அதே இணைபிரியாத விரல்களுடன் ,பெசண்ட் நகர் பீச் மகாபலிபுரமென சுற்றினான்.மோகமுள் பாபு யமுனா போல நினைத்தப்டி காஞ்சீபுரத்துக்கும் பட்டு வேட்டி பட்டு புடவை சகிதம் சென்றுவந்தான் ஆறுமாதத்தில் திரும்ணபத்திரிக்கையுடன் இருவரும் ஒன்றாக அலுவலகத்திற்கு வந்தபோது அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர்.
பரவாயில்லை பிரமிள் சொன்னபடியே தன் வாழ்க்கை ராம்பிரசாத் எனும் பேரால் நாலே வருடத்தில் நல்லநிலைமைக்கு வந்துவிட்டது என நெட்டிமுறிதத தருணத்தில்தான் ஒருநாள் சரளா ஒரு சரவணாஸ்டோர் கேரி பேக்கில் கையில் கிடைத்த புடவை ஜாக்கட்டுகளை வாரிதிணித்துக்கொண்டு தன் அம்மாவீட்டுக்கு குழந்தையுடன் சென்ற சம்பவம் நிகழ்ந்தது.அப்படி அவள் திடீரென புறப்பட்டு செல்வதற்கு அவனால் வெளியே சொல்ல முடியாத பலகாரணங்கள் அதற்கு பின்னால் இருந்தன. உடன் சில அற்பத்தனமான காரணங்களும் இருந்தன. உதாரணத்துக்கு அவன் கதை பிரசுரமாகி இரண்டு மாதம் ஆகியும் அவள் அதனை படித்துவிட்டு கருத்து எதுவும் கூறவில்லை. எப்போதாவது படிக்க நேரம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் கோணங்கியின் ”உப்புகத்தியில் மறையும் சிறுத்தை” எனும் சிறுகதை தொகுப்பை எடுத்துவைத்துக்கொண்டு தீவிரமாக வாசிப்பாள். அவள் அதை புரிந்துதான் படிக்கிறாளா?அல்லது வேண்டுமென்றே தன்னை வெறுப்பேற்ற பாவனை செய்கிறாளா என இவனுக்குள் கேள்வி எழும். இந்த மாதிரி ப்ரச்னைகள் எல்லாம் வரும் என அறிந்துதான் திருமணம் செய்தால் .ஒருவாசிப்பனுபவமே இல்லாத ஒருபெண்ணாக பார்த்துதான் திருமணம் செய்ய வேண்டும் என நினைத்திருந்தான் .ஆனால் காதல் இதையெல்லாம் யோசித்து வருவதில்லை.
இப்படியான அவனது படைப்பு மனோபாவத்துக்கும் அவளது வாசிப்பனுபவத்துக்குமான இடைவெளிதான் கொஞ்சம்கொஞ்சமாக அதிகமாகி மிகபெரியவிலகலை உருவாக்கிவிட்டது. இத்த்னைக்கும் அவ்ளுக்கு தீவிர இலக்கியபரிச்சயமே பிரசாத்துடனான திருமணத்துக்கு பிறகுதான் ஆனாலும் எடுத்தஎடுப்பிலேயே அவ்ள் குட்டி இளவரசன், விசரணை போன்ற நாவல்களை வாசித்துதன்னை வேறுவாசிப்புக்கு த்யார்படுத்திக்கொண்டாள்.அவ்ள் எழுதிய சில கவிதைகள் நன்றாக இருப்பதாக ஒரு புகழ்பெற்ற பெண் கவிஞர் கவிஞர் பெருமையும் உவகையுமாக பிரசாத்திடம் கூற அங்கிருந்துதான் துவங்கியது ப்ரச்னை. வீட்டுக்குவந்ததும் ஏன் என்னிடம் இதுவரை அதுகுறித்து காண்பிக்க வில்லை என பிரசாத்கேட்க பதிலுக்கு அவள் ஒன்று அமைதிகாத்திருக்கலாம் உங்களால் அதை அத்ன் சரியான் அர்தத்தில் புரிந்து கொள்ள முடியுமா என சந்தேகப்பட்டதாகவும் அதுதான் காரணமென்றும் கூற இவனுக்கு உண்மையில் வலித்தது. பின் அன்றிலிருந்து வீடு சுத்தமாக இல்லை, ஏன் ஆளில்லாமல் அறையில் பேன் ஓடுகிறது, உனக்கு வர்வர குடும்பத்தின்ன்மீதான் கவனமே இல்லை. என்பது போன்ற குற்றச்சாட்டுகளை மனைவி மேல் சுமத்திக்கொண்டிருந்தான்.வ்ழக்கம் போல இது போன்ற ப்ரசனைகளை அவன் பெரிதாக்குகிற போது அவள் எதுவும் பேசாமல் கோணங்கியின் அந்த புத்த்கத்தை எடுத்து மடியில் கிடத்திக்கொள்வாள். சில நாட்கள் பேசாதிருந்து பின் கடமைக்காக பேசதுவங்கி அப்படியே இருவருக்குள்ளும் விலகல் ஆரம்பித்து பின் ஒரு புழுக்கம் நிறைந்த இரவுபொழுதின்றில் குழந்தையுடன் அவனை விட்டு பிரிந்தாள்
அவ்ள் பிரிந்த இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் அவன் எழுதிய முதல் நாவல் வெளியாகியது.காய்கறிமார்க்கட்டில் மூட்டை சுமக்கும் சிறுவனாக துவங்கி வெல்ல மண்டி சீனிவாசனாக வளர்ந்து பின் எம் எல் ஏ வாக உயர்ந்த ஒருமனிதன் தன் இறுதிக்காலத்தில் பால்யங்களையும் கடந்துவந்த வாழ்வையும் நினைவுகூறுவதாக அந் நாவல் எழுதப்படிருந்தது. அந்த நாவலின் வெளியீட்டுவிழாவிலேயே ஜி. ராம்பிரசாத் சற்றும் எதிர்பாராத படு மோசமான விமர்சனத்தை சந்திக்க வேண்டியிருந்தது. நாவலை வெளியிட்டவரே அத்னை படிக்க முடியவில்லை சுய புலம்பல் அதிகம் என்பது போல்கூற அப்போதே மேடையில் இவன் அருகில் அம்ர்ந்திருந்த பதிப்பாளர் இதுக்குதான் இந்த ஆளைகூப்பிடாதீங்கன்னு சொன்னேன் என பல்லை கடித்தார்.நேரடியான் சம்பவங்களை அடுக்கிக்கொண்டு செல்லும் சத்தில்லாத் நாவல் என இடைநிலைஇதழ் ஒன்று விமர்சனத்தை எழுதி நாவலின் கொஞ்ச நஞ்ச மதிப்பையும் முழுவதுமாக முடிந்தது.அதே இதழில் சரளவின் கவிதை ஒன்றும் பிரசுரமாகியிருந்தது.
இச்சூழலில்தான் ஒரு சனிக்கிழமையில் சந்திரகுணசேகரன் ராம்பிரசாத்திடம் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டான்.தொடர்ந்து ஆறு சனிக்கிழமைகளாக் இருவரும் சந்தித்த்னர்.மூன்ராவது சனிக்கிழமை சந்திப்பின் போதுதான் தீர்த்தவாரி நடந்தது. இருவரும் ஒன்றாக சேர்ந்து அருகிலிருந்த டாஸ்மாக் ஏ.சி பார் ஒன்றுக்குள் நுழைந்த அன்று ஜி.ராம்பிர்சாத் மிகவும் உடைந்து குலுங்கி குலுங்கி அழுதான்.தனது மனைவியின் உன்னதாமன குணங்களாக பட்டியலிட்டுகொண்டே இருந்தவன் ஒருகட்டத்தில் குபக்................. சந்திரகுண்சேகரன் அன்று மிகவும் நிதானமாக அவரது சட்டையிலிருந்த வாந்தியை எல்லாம் துடைத்து கழுவிவிட்டு சோடாவை வாங்கி வாய் கொப்பளிக்க வைத்து ஆட்டோவில் ஏற்றிவந்து வீட்டில்படுக்க வைத்தான்.அத்ன் பிறகு இருவருக்குள்ளும் பலவிதமான சர்ச்சைகள் . இல்லகியத்தின் நவீன போக்கு குறித்து.சந்திரகுணசேகரன் கையில் ஒரு நாள் தடிமானன புத்த்கம். கோணங்கி எழுதியிருக்கும் புது நாவல் என சந்திர குணசேகரன் பெருமையுடன் கூற ஜி.ராம்பிராசாத் படித்துவிட்டுதருவதாக வாங்கிவைத்துக்கொண்டன் .
இதன் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக கடந்த சனியன்று மாலை நல்ல பீர்வாசத்துடன் வந்திறங்கியவன் சற்ரு நேரம் கட்டிலில் கிடந்தெழுந்துவிட்டு பின் ஜி,ராம்பிராசாத்துடன் தீவிரமாக பேசத்துவங்கினான். அடுத்த நாவலை இதிலிருந்து உருவாக்குங்கள் என்றவன் தான் செய்தி சேகரிக்க வெளியூர் சென்ற போது கேள்விப்ப்ட்ட ஒரு உன்னதமான ஊரைபற்றி அதிசயமான சிலதகவல்களை அடுக்கி ஒருகதையாக எடுத்துகூறினான் தான் சொன்ன் செய்தியின் மைய பொருளாக இருந்த ஒரு கதாபாத்திரத்தை பற்றி விரிவாக சந்திரகுணசேகரன் வியந்து சொல்ல சொல்ல ஜி. ராம்பிரசாத்தின் உள்ளுக்குள் மரங்கள் காற்றில் அசைய துவங்கின. .பறவைகளின் இனியகீதத்தை கேட்பதை போல உணர்ந்தான்
முழ்வதுமாக சந்திரகுணசேகரன் சொல்லி முடித்ததும் கைகள் இரண்டையும் உயர்த்தி ”நீரூற்று இயந்திர பொறியாளன்“ என சந்திரகுணசேகரன் உரக்க கூவ
சட்டென ராம் பிரசாத் அருலிலிருந்த காகித்த்தை எடுத்து எழுதி பார்த்தான் “நீரூற்று இயந்திர பொறியாளன் “...ஒரு அதி .நாவ்ல் ...
(தொடரும்...)