"வாழ்வை தீர்மானிக்கும் எதிர்பாரா சம்பவங்கள் ஒருவனுக்கு எதன் அடிப்படையில் நிகழ்கிறது என்பது கேள்விக்குறியே. "
சந்திர குணசேகரனின் மனபதட்டத்திற்கு பல காரணங்கள் இருந்தன.அவனுக்குள் உண்டாகியிருக்கும் வலி வித்தியாசமானது.அதை வேறு யாராவது புரிந்து கொள்ள முடியுமா ம் ஹூம் முடியவே முடியாது.
நெடுநாளாக குழந்தை இப்போது வேண்டாம் என தள்ளிபோட்டுக்கொண்டே வந்த ஒருத்திக்கு பின்னொருநாளில் தான் ஒரு மலடி என்பது தெரியவருகிற போது ஏற்படும் அதிர்ச்சியும் வலியும் இருக்கிறதல்லாவா அத்ற்கு ஈடானதாக இதனை சொல்லலாம். உலகின் தலை சிறந்த படைப்புகள் ஓவ்வொன்றை படித்து முடிக்கிறபோதும் தனக்குள் ஏற்படுகிற மனவெழுச்சியை அது தன்னுள் தன் அனுபவத்தில் ஏற்படுத்துகிற மாறுதல்களை எல்லாம் அவதானித்து அது எப்படி உருவாகிறது அதன் முடிச்சுகளின் மூலாதாரம் என்ன என அனைத்தையும் கண்டுணர்ந்து அத்ற்கு தக்கன தன் கற்பனையை சீர்துக்கி பார்த்து தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்ட அவனுக்கு தான் ஒரு மகத்தான் எழுத்தாளனாக ஒருகாலத்தில் பரிணமிக்க முடியும் என்பதில் மாற்று கருத்தே இல்லாதிருந்தது.
ஒவ்வொரு இலக்கிய கூட்டங்களுக்கு செல்கிறபோதும் தன் அளவுகோலினால்சீர்துக்கி பார்த்து ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தனக்குமான இடைவெளி என்ன என தன்னுடைய நிலை எப்படி இருக்கிறது என்றெல்லாம் யோசிக்காமலே அவனுள் ஒரு கணக்கு ஓடிக்கொண்டிருக்கும் .
இப்படியெல்லாம் தன்னை அதீதமாக கற்பனை செய்து கொண்டிருந்தவனுக்கு பத்துவரிகூட தன்னால் முழுமையாக எழுத முடியவில்லை என் அறிந்த போது ஏற்பட்ட தோல்வி இருக்கிறதல்லவா அது பயங்கரமானது.அதனை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.சட்டென அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு தோன்றியவுடன் ஆத்மநாமின் கவிதைகளை எடுத்து தீவிரமாக வாசிக்க துவங்கினான்.தனக்கு ப்ரச்னை ஏற்படும் ஓவ்வொரு சமயத்திலும் பைபிளை புரட்டும் தூய கிறித்துவனை போல அவன் அந்த கவிதைகளை நம்பினான்
உண்மையில் பத்தாம் வகுப்பு பள்ளி விடுமுறைக்காலங்களில் தனது நோட்டு புத்தகத்தின் எழுதப்படாத தாள்களை எல்லாம் கிழித்து ஒன்றாக டொய்ன் நூலால் தைத்து ஒரு சிறு நோட்டாக மாற்றி தன் முதல் கதையை எழுத ஆரம்பித்தவன் சந்திரன்.கரடி பங்களா எனும் அந்த கதையை படித்த அவனது சக வகுப்புத்தோழன் விநாயகம் அதனை தன் அப்பா(தமிழ் வாத்தியார்) விடம் படித்துகாண்பிக்க அவர்தான் இது நன்றாக இருக்கிறது என சர்டிபிகேட்தந்தவர். அவர் சாண்டில்யன் கதை ரசிகர். நீ கதை எழுதுவதாக இருந்தால் வெறும் சந்திரன் எடுபடாது உன் அப்பா பெயரான குணசேகரனையும் சேர்த்துக்கொள் என அறிவுறுத்தியவர். அதன் பிறகு அவன் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எழுதிக்கொண்டிருந்தவன் இனி எழுதவே கூடாது என தந்தையின் மரணத்திற்கு பிறகுதான் எறும்பு இழுத்துசெல்லும் வெல்லக்கட்டியாக இலக்கியத்தின் நுண்ணிய கரங்களில் தன் வாழ்க்கை எதார்த்த்தை விட்டு விலகிக்கொண்டிருப்பதையும் குடும்பம் தன் சம்பாத்தியத்தை எதிர்நோக்கியிருப்பதையும் உணர்ந்தான். இனி வீட்டின் சுமைகளையெல்லாம் தீர்த்தபின்தான் நாம் எழுதவேண்டும் என முடிவெடுத்திருந்தான். அதுவரை எழுதிய அனைத்தையும் ஒரு ஆவேசத்தில் எரித்தன்.உள்ளுணர்வில் ஏதோ தவறுசெய்கிறோம் என்ற எச்சரிக்கை மணி அடித்தாலும் அதனை பொருட்படுத்தாது அக்காரியத்தை செய்து முடித்தான் .பிறகு துவங்கியது வேலை தேடும்படலம் .அப்படி இப்படி என கிடைத்தவேலைகளில் சேர்ந்தான் இறுதியாக அவன் சற்றும் எதிர்பாராமல் நண்பர் ஒருவர் மூலமாக இந்த பத்திரிக்கை வேலையும் கிடைக்க மிகவும் வசதியாக போனது. அடுத்த ஒருவருடத்திற்கு அவன் படிக்ககூட செய்யவில்லை. அதன் பிறகு ஒருமுறை அவனுக்கு மிகவும் பிடித்த மாண்டோவின் சிறுகதை ஒன்றை படித்த மாத்திரத்தில் தானும் அது போல் ஒன்றை எழுத நினைத்து குளித்துவிட்டு வந்து அமர்ந்தான்.
முதல்வரி எழுதும்போது யாரோ கையை பிடித்து இழுப்பது போன்ற உணர்வு.மண்டை விண்ணெண்று வலிக்க துவங்க அப்படியே தரையில் சரிந்து படுத்த்வன் அவனே அறியாமல் தூங்கிவிட்டிருந்தான் .அதன் பிறகு எழுதும் எண்ணம் வரும் போதெல்லாம் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு மகத்தான நாவலை ஈடுசெய்துவிடலாம் என எண்ணியிருந்தான்.
ஜி.ராம்பிராசத்தின் வீட்டில் அவன் அன்று நீரூற்று இயந்திர பொறியாளன் கதையை விவரிக்கிற போதுதான் தானே ஏன் இதை எழுதக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அதன் பிறகு அன்று தன் மனைவி தன்னோடு அந்த நாவலை எழுததுவங்கியபின் ஏதோ தான் மட்டுமே இதனை யோசித்த்து போல ஜி.ராம்பிரசாத் பேசிய விதம் இவனை மிகவும் நோகடித்த்து. நமது புத்திசாலித்தனத்தையும் நல்ல மனதையும் காட்டுவதற்காகத்தான் அவரிடம் இந்த கதையை சொன்னோமா என்று கூட அவன் வருத்தப்பட்டான். அவர் மனைவிஅவரோடு திரும்பி இணைந்ததற்காக சந்தோஷப்படுவதில் கால்வாசிகூட அவர் நாவலின் ஐடியாவை சொன்ன தற்காக தன் மேல் நன்றியுணர்ச்சியை காட்டவில்லை என்பதுதான் சந்திர குணசேகரனின் கோபம். அந்த கோபத்தோடு வேகமாக வந்து எழுத துவங்கிய பிறகுதான் தனது உண்மையான ஆளுமை என்ன என்பது அவனுக்கே தெரியவந்தது.
தன்னை முழு நிர்வாணத்துடன் பார்க்க இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்தார்போல் அதனை உணர்ந்தான்
கையில் வைத்திருந்த காகிதங்களை அவன் பார்த்தான் . அவன் எழுதிஎழுதி அழித்த வரிகள். எதுதன்னை எழுதவிடாமல் தடுக்கிறது என்பதை அவனால் முழுமையாக கண்டுணர முடியவில்லை. முதல் நாலுவரி எழுததுவங்கியதும் ஏதோ ஒன்று தன்னை தடுப்பதை அவனால உணர முடிந்தது. உடலெலாம் பெரும் அசதியில் விழுந்தது. மேலும் எழுதிய வரிகளை வைத்து பார்க்கும் போது தான் சொல்லவந்தததை வெளிப்படுத்தக்கூடிய சரியான வார்த்தைகள் தன்னிடம் இல்லை என்பதை அவனால் உணரமுடிந்தது.
இந்த அதிர்ச்சியிலிருந்து அவனால் மீளமுடியவில்லை அலுவலகத்தில் புதிய பொறுப்புகளின் வேலை வேறு சேர்ந்து கொண்டது. புதிதாக துவங்க இருக்கும் பெண்கள் இதழுக்கு மாதிரி டம்மி செய்யச்சொல்லியிருந்தார் முதலாளி..இது குறித்துஅவன் யோசிக்கும் வேளையில் இடையிடையே அவன் உள்மனது இதற்குத்தான் நீ லாயக்கு என்பது போல் கேலி செய்தது. இதனிடையே ஜி.ராம் பிராசாத் வேறு அவனை இரண்டு முறை அழைத்திருந்தார் .அவன் தொலைபேசியை எடுக்கவில்லை.
இன்றுகாலை அவர் மீண்டும் அழைத்தபோது வெறுப்புடன் போனை எடுத்தான் பேசாமல் அப்படியே அமைதியாக டேபிளின் மேல் கவிழ்த்துவைத்துவிட்டான். மறுமுனையில் அவர் ஹலோ ஹலோ என கூக்குரலிடுவது சன்னமாய் கேட்டது .அதன் பிறகு இணைப்பு முழுவதுமாய் துண்டிக்க பட்டபின் மீண்டும் தொலைபேசியை எடுத்துபாக்கெட்டில் போட்டுக்கொண்டான் .
நான்கு வாரங்கள் கழிந்தன வேலை மும்ம்ரமாக அவனை இழுத்துக்கொண்டது புதிய பெண்கள் இதழின் கள ஆய்வு செய்தி சேகரிப்பு விளம்பரவேலைகள் மற்றும் லேஅவுட்டில் தீவிரமாக விழுந்துவிட்டிருந்தான் .வழ்க்கமான எம்ப்ராய்டரி,சமையல் டாகட்ர் பதில் குழந்தைவளர்ப்பு இதழாக இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான் குறைந்தபடசம் வுமன்ஸ் இரா அளவுக்காவது இருக்கவேண்டும் என நினைத்தான் . மர்க்கட் சர்வே அவனுக்கு நிறைய்யவே கற்று தந்தது.எதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என நினைத்தானோ அவையனைத்தும் அவனையும் மீறி தவிர்க்கவே முடியாமல் ஆளுக்கொருபக்கத்தை எடுத்துக்கொண்டன .லெனி ரெவிண்டால், லீ வுல்மன் போன்ற அவர்களை இதழுக்கு ஒருவராக அறிமுகப்படுத்த வேண்டும் என எண்ணியிருந்தான் முதலாளி தூக்கியது அந்த பக்கங்களைத்தான் .பிந்தான் வழக்காமன கட்டத்துக்குள் புதுவிதமாக விளையாடுவது என்ற முடிவுடன் தலைப்பு லெஅவுட் மற்றும் எழுத்துநடை ஆகிவற்றில் கவனம் செலுத்த முடிவெடுத்தான் . முதல் இத்ழில் நடிகை ஒருவரின் பேட்டியில் புகைப்படங்களுக்கு பிராதன முக்கியத்துவம் கொடுத்திருந்தான் ..புகைப்பட்மெடுக்கிறபோது இவனே சென்று நைட்டியில் துளசிமாடத்தின் அருகே வைத்து தலையில் ஈரத்துண்டை கட்டிக்கொள்ள வைத்து புகைப்படம் எடுக்கசெய்தான். இதழின் ஹைலைட்டே அவ்ளுடய பேட்டியாக களைகட்டிவிட்டது. முதலாளி இம்பிரிண்டில் தன் பெயரை எப்படி போடப்போகிறார் என ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தான். இணை ஆசிரியர் என போடுவார் என்றுதான் எதிர்பார்த்தான் ஆனால் பொறுபாசிரியர் என போட்டு தனக்கு இப்படி ஒரு முக்கியத்துவத்தை தருவார் என அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அந்த சந்தோஷத்தில் அனைத்தையும் மற்ந்திருந்தான் புத்த்கம் அச்சகத்தில் பிரிண்டாகிக்கொண்டிருந்தபோது திருவல்லிக்கேணியில் அச்சகத்துக்கு அருகிலிருக்கும் ஒருகடையில் டீசாப்பிட போயிருந்தான் .அப்போதுதான் தொலைபேசி ஒலித்த்து.
எடுக்கபோனவனுக்கு அதிர்ச்சி ஜி.ராம்பிரசாத் அத்ற்குள் தோளை விரல் தொட திரும்பியவனுக்கு அதைவிட அதிர்ச்சியாக மனைவியுடன் ஜி.ராம்பிரசாத்தே நின்றிருந்தார்.
என்னப்பா போனை போட்டா எடுக்கவே மட்டேங்கிற
தோளை உரிமையுடன் தட்டி ராம் ப்ரசாத்மனைவியிடம் திரும்பி இவந்தாம்மா நான் சொல்லலை அந்த ரீடர்.நீ இல்லாதப்ப இவந்தான் எனக்கு க்ளோஸ் சரளா அட்க்கமாக சிரித்தாள்.முதல் பார்வையிலேயே அவள் விஷ்யமானவள் என்பதை சந்திரகுணசேகரனால் புரிந்துகொள்ள முடிந்தது.
நடுவுல நிரைய்ய வேலை புதுசா ஒரு மேகசின்........ வுமன் மெகசின்......நான் தான் எடிட்டர் அதான் ,......சாரி..
பரவாயில்லை பரவயில்லை...இங்கியாஆபீசு.....வெறெங்கியோ.........சொன்னாமாதிரியில்ல இருக்கு.
இல்ல இங்கதான் பிரிண்டிங் மேகசின் அச்சாகிகிட்டுருக்கு.நீங்க எங்க
என்றதும் ஜி,ராம் பிராசாத் சட்டென உணர்ச்சிவசப்பட்டவன் சரளா நீ இங்க இரு .....எனக்கூறி கடையில் இவளுக்கு டீகொடுக்க சொல்லி உத்தரவிட்டான் சரளா இருவரையும் வினோதமாக பார்த்தாள்
நான் நாவலை முழுசா முடிச்சுட்டேன்
ஜி.ராம்பிரசாத் இத்னை சொன்னதும் சந்திர குணசேகரன் அதிர்ந்து விட்டான்
எப்படி இதுக்குள்ள ஒரு மாசம் தான் ஆயிருக்கும்
ஆமாம் ஒருமாசமும் எனக்கு இதுதான் வேலை. நீ அந்த சம்பவம் எங்க நடந்ததுன்னு சொல்வேன்னு எதிர்பாத்துக்கிட்டிருந்தேன் கடைசியில எனக்குள்ள பலசம்பவங்கள் அதுவா உருவாக ஆர்ம்பிச்சிடுச்சி அதவைச்சு நானே கற்பனையா எழுத ஆரம்பிச்சு முடிச்சுட்டேன் பக்கத்துலதான் டி.டிபிக்கு கொடுத்துருக்கேன். முடிஞ்சுடுச்சி ப்ருப் போட்டு கொடுத்துருக்கேன் நடுவுல டீ சாப்பிடலாமென்னு வெளியவந்தேன்
சந்திர குணசேகரன் ஆச்சர்யத்துடன் பார்த்தான்
நாவல் உண்மையிலயே நான் எழுதல ஏதோ ஒரு பேய்தான் என்னை எழுத வைச்சாமாதிரி இருந்தது .நீ சொன்ன விஷ்யங்கள்தான் அதைஅப்படிய்யே என் கற்பனையோடசேத்து மூழ் வடிவத்துக்கு கொண்டாந்துருக்கேன் எனக்கே ஆச்சரயமா இருக்கு என்னால நம்பவே முடியலை.
சந்திர குணசேகரனுக்குள் மனது என்னவாகவோ பிசைந்தது
எனக்கு இப்ப நீ ரெண்டு உதவி செய்யணும்
ஒண்ணு இப்ப கையோட உன் கிட்ட ஸ்கிரிப்டை கொடுக்கறேன் படிச்சுட்டு நீதான் எப்படிவந்துருக்கு இல்ல வேற என்ன பண்ணலாம்னு சொல்லணும்
ரெண்டாவது எந்த காரணத்தை கொண்டும் இந்த நாவலோட ஐடியாவை கதை சுருக்கத்தை உண்மைசம்பவத்தை நீதான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிடக்கூடாது குறிப்ப என் மனைவிக்கு தெரியக்கூடாது அப்புரம் இன்னொன்னு நீ கடசிவரைக்கும் இது எந்தௌஉர்ல நடந்ததுன்னு சொல்லவே இல்ல அதை சொன்னன்னா கடைசியா ஒருதடவை போய்வந்துட்டா கரைக்ஷன் லாம் போடறதுக்கு வசதியா இருக்கும்
இதற்குள் குழந்த அழுக சரளாவும் அருகில் வந்துவிட்டாள்
மூவரும் டீக்கடையில் காசு கொடுத்துவிட்டு புறப்பட்டனர்.பக்கத்தில்தான் இருந்தது அந்த டி,டி.பி செண்டர்
கடைக்காரன் தயாராக பிரிண்ட் போட்டு வைத்திருந்தான்
மொத்தம் 200 பக்கம் இருக்கும். ஜி.ராம்பிரசாத் நாவலைகையில் வாங்கி அதனை பயபக்தியுடன் சந்திர குணசேகரனிடம் தந்தான்
சட்டென அதுவரை இருந்த கசப்பு போய் நாவலை தொட்டதும் ஒரு நெகிழ்ச்சி சந்திரகுணசேகரனிடம் கூடி நின்றது
முதல்பக்கத்தில் நீரூற்று இயந்திர பொறியாளன் ...நாவல் என கொட்டையாக அச்சிடப்பட்டிருந்தது கீழே ஜிராம்பிராசாத் என சற்றே சிறிய எழுத்தில் பதிவாகி இருந்தது .
ஜி,ராம்பிராசாத் இது அப்படியே இன்னொருகாப்பி வேணுமே என கடைக்காரரிடம் கேட்க சாரிசார் டயம் ஆயிடுச்சி இன்னும் கவர்மண்ட் வேலை நிரைய்ய இருக்கு .நாளைக்கு கொண்டுவாங்க போட்டுறேன் என்றார்.
சரி பரவாயில்லை நீபத்திரமாபாத்துக்க இப்ப இஅத நீதான் வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போவப்போற என்ற
ஜி.ராம்பிரசாத் பர்ஸை எடுத்து கடைக்காரருக்கு பண்ம்கொடுத்தபோது "எங்க அந்த லேடி டி,டி.பி ஆபரெட்டர் ஆளைகாணோம் முழுசா அடிச்சுட்டு எப்படி இரூக்குன்னு சொல்றேன்னு சொன்னங்க ?
தெரியலை ரெண்டு நாளா ஆளையே காணாம்
சட்டென அங்கு ஜெராக்ஸ் மிஷினை இயக்கிக்கொண்டிருந்த இன்னொருபெண் சார் அக்காவுக்கு மேரேஜ் பிகஸ் ஆகியிருக்காம் கொஞ்சநேரத்துக்கு முன்னாடிதான் போன் பண்ணி வரமாடேன்னு சொல்ல சொன்னாங்க மற்ந்துட்டேன் என்றாள்
அப்படியா நல்ல விஷ்யம்தான ஒருவார்த்தை நேராவந்து சொன்ன என்னவாம் தேஞ்சாபோயிடும்
நல்லா வருதுங்க நமக்குன்னே....ம்ம்,...எந்த ஊராம் மாப்புளை
தெரியலை சார் ....அந்த பெண் மீண்டும் மிஷினில் தீவிரமாக இருந்தாள் அவள் உதடு கடை முதலாளியை திட்டும்விதமாக அசைந்து கொண்டிருந்தது.
மூவரும் கடையை விட்டு வெளியில்வந்தனர்
ஜி,ராம்பிரசாத் வண்டியின் கிக்கரை உதைத்தான். சரளா குழந்தையின் கையை அசைத்து டட்டா காண்பித்தாள். வண்டி புறப்பட்டு நகர்ந்தது .சரளா சந்திரகுணசேகரனை பார்த்து சிரித்துக்கொண்டே ந்சென்றாள்.அதில் நிறைய்ய விஷ்யமிருந்தது.
சந்திர குணசேகரன் உறையிலிருந்து நாவலை வெளியே எடுத்தான் புத்தம் புதுசாக இருந்தது அதன் முதல்ப்பக்கத்தை புரட்டியவுடன் மூலையில் சிறு நட்சத்திர குறி போட்டு இரண்டு வரி எழுதப்படிருந்தது .
அன்புடன் எழுத்தாள்ர் ஜி.ராம்பிரசாத் அவர்களுக்கு.உங்கள் நாவலை டைப் செய்த காயத்ரி எழுதுவது. உங்களின் கதை டைப் செய்யும் போதே என் உணர்வில் பல மாறுதல்களை உண்டாக்கியது .நேர்று எனது கலயாணம் பத்துவருட போரடத்துக்கு பின் நேற்றுதான் உறுதியானது.எல்லாம் வற்றுக்கும் காரணம் நீரூற்று இயந்திர பொறியாளனே என கருதுகிறேன்
இன்னும் எத்த்னையோபேருக்கு நன்மை செய்ய போகும் நீரூற்று இயந்திர பொறியாளனுக்கு என் முதல்வாழ்த்துக்கள் நன்றி. பின்குறிப்பு உங்களது படைப்பின் ஒரு மூலையை என் சொந்த நலனுக்காக பயன்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறேன்... இப்படிக்கு மீனாட்சி என எழுதப்படிருந்தது
சந்திர குணசேகரன் சற்று தடுமாறினான்கயிலிருந்த நாவல் அவனை உடனே வீட்டுக்குசெல்லும்படி அழைத்துக்கொண்டிருந்தது.
(தொடரும்...)