நாவல் : நீரூற்று இயந்திர பொறியாளன்...
பாகம் ஏழு : பீர் கோப்பைகளுடன் அரங்கேறியது எழுதப்படாத ஒப்பந்தம்.

அஜயன்பாலா [ஓவியம் - மருது ]

"...அவனை கற்பனை உலகின் மந்திர சக்திக்குள் இழுத்துச்சென்றுவிட்டன."


அழுக்கான கல்கத்தா நகர வீதியொன்றின் பிளாட்பாரத்தில் குப்பை கூளங்களுக்கு நடுவில் ஒரு கோஸ் மூட்டையின் மீது மல்லாக்காக படுத்துகிடப்பதை போல சந்திர குணசேகரன் தன்னை உணர்ந்தான். சுற்றிலும் அனாதை சிறுவர்கள் தன் உடையை பிடித்திழுத்து விளையாடிக் கொண்டிருப்பதாகவும் அதனை சட்டையே செய்யாமல் படுத்துக்கிடப்பதாகவும் ஒருகாட்சி திரைப்படமாய் அவன் கண்னில் விரிந்து கொண்டிருந்தது.

மனிதர்களால் மிகவும் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு புனிதனின் மனோ நிலை அவனை அழுத்தியிருந்தது. உணமையில் அப்போது அவன் தன் அறையில் கட்டிலில் உத்தரத்தை பார்த்தவாறு படுத்துக்கொண்டிருந்தான்.அவனது இந்த காட்சி அனுபவத்துக்கு காரணம் நேற்று ஜி.ராம்பிராசாத்திடமிருந்து வாங்கிவந்த நீரூற்று இயந்திர பொறியாளன் நாவல் . அதன் பத்தாம் பாகம்வரை ஒரேமூச்சில் படித்துவிட்டு நாயகனை போல தானும் பெரும் துன்பநிலை அடைந்தவனாய் அப்படியே கட்டிலில்சரிந்தான் அவன் அருகில் பாதிபிரிக்கப்பட்ட நிலையில் நாவல் கவிழ்ந்து கிடந்தது. கன்னங்களில் சற்று முன் வழிந்த நீரி தடம் அப்படியே இருந்தது.

நாவலின் சிலவரிகள் அவனை கற்பனை உலகின் மந்திர சக்திக்குள் இழுத்துச்சென்றுவிட்டன.

அறை முழுக்க புறாக்கள் ஸ்லோமோஷனில் நடனமாட அவ்ற்றினூடே அவன் ஆடையற்று அங்குமிங்குமாய் கைகளை விரித்தபடி கற்பனையில் பற்ந்து கொண்டிருந்தான். இது போன்ற உணர்வு அவனுக்குள் எப்போதும் நிகழ்ந்ததில்லை. பஞ்சு போல எடையற்றதாக ஆகிப்போன தனது உடலில் ஒருவித ஆவி போன்ற வெண்ணிற சக்தி நிரம்பிக்கிடப்பதை அவனால் உணர முடிந்தது. ஒருவேளை அதிகமான கண்ணீர் தன்னுடலிலிருந்து வெளியேறியதன் காரணமாக கூட இப்படியாகியிருக்கலாம்.

இப்படியான் உனர்வெழுச்சியை அவன் புத்துயிர்ப்பு நாவலை வாசிக்கும் போது அடைந்திருக்கிறான். தவிர சார்லி சாப்ளினின் திரைப்படமொன்றினை பார்த்தபோதும் ,பாரஸ்ட் கம்ப் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய போதும் அவனுக்குள் அப்படிபட்டதொரு உணர்வெழுச்சி இதற்குமுன் ஏற்பட்டிருக்கிறது. ஆதீத க்ற்பனையும் உனர்வெழுச்சியும் ஒன்றுடன் ஒன்று கலந்த நிலை. .நாவலின் ஒன்பதாவது பகுதியில் முதல் இயந்திரத்தின் பழுதடைந்த பகுதியை சரிபார்க்க துவங்கும் வரை நாவல் எதிர்பார்க்க முடியாத பல சம்பவங்களை கடந்து வந்திருந்தாலும் பத்தாவ்து பகுதியில் தன்னை பலர் முன்னிலையில் அவமானப்படுத்திய பெண்ணின் திருமண்ம் பாதியில் நின்ற போது நீரூற்று பொறியாளன் நிகழ்த்திய அந்த மழை சம்பவத்தை வாசித்த பிறகுதான் அவனுக்குள் பலவித உணர்வெழுச்சிகள் தோன்ற துவங்கின .கலயாணம் முடிந்து பந்தியில் அமரபோன நீரூற்று பொறியாளனுக்கு ஏற்பட்ட அவமானம் சற்றும் எதிர் பாராதது.ஜி. ராம் பிரசாத்தால் எப்படி இப்படி யாரும் எதிர்பார்க்க முடியாத கற்பனையின் கதவுகளை உடைக்க முடிந்தது. இதெல்லாம் தான் அவனிடம் சொன்ன கதையில் இல்லை என்பதை யோசித்த போது ஜி.ராம்பிராசாத்தை குறைத்து மதிப்பிட்ட தனது அறீவீனத்தை எண்ணி வெட்கப்பட நேர்ந்தது.

திறந்து கிடந்த நாவலில், பாதியில் விட்ட பத்தாம் பாகத்தில் அடையாளமாக அருகிலிருந்த பேனாவை பக்கங்களுக்கு இடையில் வைத்துவிட்டு எழுந்து லுங்கியை சரி செய்து கொண்டான் வெளியில் வந்து முகத்தை கழ்வியபிறகுதான் மனம் திரும்ப பழைய நிலைக்கு திரும்பியது.தான் ஒரு ந்ரூற்று இயந்திர பொறியாளனாக இருந்தால் எப்படி நடந்து கொள்வோம் என யோசிக்கும் போதே மனது லேசாகி குளிர்ச்சியாகிவிட்டிருந்தது. . வெளியில் வந்து துண்டால் முகத்தை அழுத்திதுடைத்துக்கொண்டபோது .வாசலில் யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்த கோமு சட்டென பதட்டத்துடன் அப்புறம் பேசுவதாக கூறிவிட்டு வீட்டினுள் சமயலறைக்குள் வேகமாக சென்றாள். சில நிமிடங்கள் கழித்து கையில் காபியுடன் வந்தாள்.
"எக்ஸாம்லாம் முடிஞ்சுடுத்தாடா கோமு"
தனது அண்ணன் தன்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்ட்தும் கோமுவால் பதட்ட்த்தை கட்டுபடுத்த முடியவில்லை. இரண்டு வருடமாக எதைக்கெட்டாலும் கோபமாக ஆமாம் இல்லை என வேண்டாவெறுப்பாக பேசிக்கொண்டிருந்த அண்ணன் இப்படி திடீரென தன்னிடம் பேசியதும் அவ்ளுக்கு சரியாக பேசக்கூட வரவில்லை. ஆமாம்ன்னா இன்னும்.... ரெண்டு எக்ஸாம் இருக்கு ..இருக்குன்னா

சட்டென சமயலறைக்குள் போன கோமு காரணமே இல்லாமல் தேம்பி தேம்பி அழத்தொடங்கினாள்.

சந்திர குண்சேகரன் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் வந்தான் உடல் முழ்க்க மின்சாரம் போல ஒரு ஆற்றல் பிரவாகமெடுப்பதை உணர்ந்தான். நீரூற்று இயந்திர பொறியாளனை போலவே தன்னிடமிருந்த முழ்வதும் நீள்மான கோடு போட்ட சட்டையை அணிந்து கொண்டுவெளியே வந்தான். நாவல் தங்கையோடு தன்னிடம் இதுநாள் வரை இருந்த அசூயை கலைத்தது நீரூற்று இயந்திர பொறியாளனே என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான்

வேகமாக வெளியே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தவன் காம்பவுண்டுக்கு வெளியே வந்து காலால் இரும்பு கதவை தள்ளி திற்ந்து கொண்டு வெளியே பாய்ந்தான். அவனதுமனம் அவனைக்காட்டிலும் பறந்துகொண்டிருந்தது. மனம் நீரூற்று இயந்திர பொறியாளனுக்குள்ளேயே விழுந்து கிடந்தது. தான் வாய்வழியாக சொன்ன கதைக்கு கற்பனையின் மூலம் ஒரு வடிவம் கொடுத்து இப்படி ஒரு சிறந்த நாவலாக ஜி.ராம்பிராசாத் இதனை உருவாக்குவார் என்பதை சந்திர குணசேகரன் எதிர்பார்க்கவில்லை

இது வரை அவன் பத்தே பாகத்தைத்தான் முடித்திருந்தான் ஆனாலும் அத்ற்குள்ளாக நாவல் த்ன் உயர்ந்ததரத்தை எழுத்திலும் கதை நகர்த்தலிலும் காட்சி விவரிப்பிலும் த்க்கவைத்துக்கொண்டிருந்ததுதான் சந்திர குண்சேகரனின் ஆச்சர்யத்துக்கு காரணம். நீரூற்று இயந்திர பொறியாளன் எனும் பாத்திரம் தன்மூலமாக தனது கனவில் உதித்த பாத்திரம் ஆனால் அதற்கு ஜி.ராம்பிராசாத் உள்ளும் புறமுமாக் நாவலில் கொடுத்த் வ்டிவமும் நகராட்சியினுள் முதன் முதலாக ஒப்பந்ததில் கையெழுத்திட வரும் காட்சி விவரணையும் தனது கனவை அப்படியே பிரதி எடுத்தார் போலலவா எழுதியிருக்கிறார்.. மிருணாளினியின் குட்டி குட்டி காதல்கள் போன்ற பகுதிகள் அவரிடம் தான் சொல்லாதது .உண்மையில் ஜி.ராம்பிரசாத்தின் கற்பனை எத்த்னை அசாத்தியமானது என்பதை உலகுக்கு நிரூபிக்க போகும் பகுதி அது.

அதேசமயம் இன்னொருபக்கம் சந்திரகுணசேகரனின் எழுத்தாள மனது மீண்டும் விழித்துக்கொண்டது .இந்த நாவலில் தனக்கும் உரிமை இருக்கிறது.தான் மட்டும் அந்த கனவை உண்மைசம்பவம் என கூறாவிட்டால் இப்படி ஒருநாவல் உருவாக சாத்தியமே இல்லை.இதனை ஈடுகட்டும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தவன் முண்டாக்கண்ணி அம்மன் கோவில் பக்கமாக வண்டியை செலுத்தினான். வீட்டுமுன் வரலட்சுமியை காணவில்லை பின் நேர வழக்கமாக செல்லும் அந்த டீக்கடை முன் வண்டியை நிறுத்திவிட்டு கடைக்குள் நுழைந்தான்.டீ க்கு சொல்லிவிட்டு சிகரட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டான் . ஐந்தாறு இளைஞர்கள் கால்பந்து ஆடிவிட்டு மைதானத்திலிருந்து வந்திருப்பார்கள் போல தெரிந்தது.கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் சிலநிமிடங்களில் அங்கிருந்து கூட்டமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இப்போது கடையில் இவன் மட்டுமே அமர்ந்திருந்தான் . மனதில் தான் எதையோ ஆழமாக யோசித்து பாதியில் விட்ட வலியின் பாதிப்பு அதிகமாக இருந்தது. சட்டென அந்த வலிக்கு காரணம் எதுவாக இருக்கும் என அவனால் நினைவுக்குள் கொண்டு வர முடியவில்லை. சிலநொடிகள் பின்னோக்கிய நிமிடங்களில் மனதை அலையவிட்டபின் நாவலின் மையக்க்ரு தன்னுடையதல்லாவா என அவன் யோசித்துக் கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. உடன் நீரூற்று இயந்திர பொறியாளன் மையக்கரு சந்திர குணசேகரன் வடிவம் ஜி. ராம் பிராசாத் என அத்ன் முதல்பக்கத்தை கற்பனை செய்துபார்த்தான் . இப்படி கேட்டால் ஜி.ராம்பிராசாத் ந்ன செய்வார். கோபப்படுவாரா.ஆனால் கதை தன்னுடையதுதானே அதை அவரால் மறுக்க முடியாதல்லாவா. சந்திரகுணசேகரன் பதட்டமானன்.இப்படி கேட்பது இத்த்னைநாள் தான் வசித்த நம்பிய இலக்கியத்துக்கு நேர்மையாக இல்லையே என்றும் மனசாட்சி இன்னொருபக்கம் இழுதது. அப்படியானால் ஜி.ராம்பிரசாத் செய்வதும் நியாயமில்லையே....சரி ஆனால் நாம் உண்மை சம்பவம் என்று சொல்லித்தானெ கதையை சொன்னோம் அதில்லாமல் முழுகதையும் கனவில் உதிததுதானே என தனக்கு சாதகமாகவும் எதிராகவும் அவனே பேசி நியாயங்களை அலசிக்கொண்டான் .

எப்படிதான் அவன் தன்னைதானே சமாதான்படுத்திக்கொண்டாலும்அவனுக்கு மீண்டும் மீண்டும் இந்நாவலில் தன்பங்கு எதுவும் இல்லாமல் வெளிவருவதில் பெரும் குற்றம் அல்லது இழப்பு இருப்பதாக மனசாட்சி அறிவுறுத்தியது. பேசாமல் இதுகுறித்து ஜி.ராம்பிராசாத்திடமே நேரடிஒயாக பேசிவிடுவது என முடிவெடுத்தவன் .சற்றும் தயக்கமில்லாமல் அவரது எண்ணை தட்டினான். அவர் போனை எடுத்தவுடன் உடனே அவரை பார்க்க வேண்டும் என்றும் இங்கு வரமுடியுமா என இடத்தை குறிப்பிட்டு கெட்டான் . பின் இருவரும் முன்புசந்தித்த அந்த வழக்காமான துளசி பாரில் பீர்குடித்துக்கொண்டே சந்திப்பது என முடிவானது.

சந்திர குணசேகரன் அந்த பாரின் கதவை திறந்து இருட்டில் தேடுவதற்கு முன் ஜி.ராம் பிரசாத் தனது செல்போனை திறந்து வெளிச்சத்தை காண்பித்து பேரை மவுன ராகம் படத்தில் கார்த்திக் கூப்பிடுவது போல மிஸ்டர் சந்திரகுணசேகரன் மிஸ்டர் சந்திரன் என மாறி மாறி பெயர் சொல்லி அழைத்தார். குரலில் அளவற்ற உற்சாகம் .

சந்திர குணசெகரன் வந்து உடகாருவதற்கு முன்பே என்ன ஆர்டர் பண்ணட்டும் என கேட்டுக்கொண்டே நாவலை இதற்குள் முடித்துவிட்டீர்களா ஆச்சர்யமாக இருக்கிறது என ஆர்வத்துடன் கேட்டு சந்திர குணசேகரனின் முகத்தைபார்த்தார். அமைதியாக இருந்த சந்திரன் முன்சிலநிமிடங்களில் கோப்பையில் பீர் ஊற்றப்பட்டு நுரைந்து வழிந்தது.

சந்திர குணசேகரன் முதல் குவளையை எடுத்து நிதானாமாக குடித்து முடித்து வாயிலிருந்த ஈரத்தை துடைத்துக்கொண்டு நிதானமாக பேசத்துவங்கினான்.நாவல் எழுதப்பட்டிருக்கும் விதத்தில் தனக்கு எந்த விமர்சனமும் இல்லை என்றவன் நேரடியாக தனக்குள் இருக்கும் கேள்வியை வெளிப்படுத்தினான். இந்த உண்மை சம்பவத்தை நான் கூறியதானால்தான் இந்த நாவலே உருவாகியிருக்கிறது ...இப்படி நான் சொல்வதில் உங்களுக்கு ஆட்சேபம் எதுவும் இருக்காதுஎன்று நினைக்கிறேன் என்ற சந்திர குணசேகரன் ஜி.ராம்பிராசாத்தின் முகத்தையே கூர்ந்து கவனித்தான் . ஆமாம் அதை நான் எப்படி மறுக்க முடியும் . என கொஞ்சமும் மாற்றமில்லாத அதே மகிழ்ச்சியுடன் ஜி,ராம் பிராசாத் பதிலை தெரிவித்தான் .

அப்படியானால் எனக்கு இந்த நாவலில் என்ன பலன்

ஜி,ராம் பிராசாத்துக்கு ஒரு நிமிடம் புரியவில்லை. சந்திர குணசேகரன் தொடர்ந்தான் . இதோ பாருங்கள் ராம் பிரசாத் இப்படிநான் உங்களிடம் கெட்பது சற்றும் நாகரீகமான செயல் அல்ல என்பதை நான் மூழ்வதும் உணர்கிறேன் . ஆனால் இது எனது உளவியல் சார்ந்த ப்ர்ச்னையாக இருப்பதால் கூடுமானவரை அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். இதன் மூலக்கதைக்கு காரண்ம் நான்தான் என்றாலும் இத்னை நாவலாக எழுதியமைக்காக இது உங்கள் பெயரில் வரப்போகிறது.அப்படியாக வருகிறபோது நான் எதியோ இழந்தவனாக உணர்கிறேன் .மட்டுமல்லாமல் நாவல் முழ்மையாக உங்களுக்கு சொந்தமில்லாத சூழலில் உங்கள் பெயருடன் வெளிவருவது ஒருவகையில் உங்களின் தரப்பிலிருந்து பார்த்தால் இது அநாகரீகமில்லையா?.

இத்னை நான் கண்டுகொள்ளாமல் இருந்தால் ஒரு அநாகரீகத்துக்கு நானும் துணை போனது போலல்லவா ஆகிவிடும் என் சந்திர குணசேகரன் சொல்ல ஜி.ராம்பிரசாத்துக்கு சர்வமும் உறைந்து நின்றுவிட்டது போலிருந்தது.

இதுதான் ப்ரச்னை மற்றபடி உங்களிடம் கதை என பேரயும் போடு என்றெல்லாம் கேட்ககூடிய அநாகரீக மனிதன் நானில்லை.

சில நிமிடம் மவுனமாக இருந்த ஜி.ராம் பிரசாத் மெதுவாக பேச துவங்கினான் . உங்களின் ப்ரச்னை எனக்கு தெரிகிறது. இப்படியாக இந்த கோணத்திலெல்லாம் இதை பார்பீர்கள் என நினைக்கவில்லை. நாவல் வந்த பின் பேசாமல் வருவதற்கு முன் பேசியது மகிழ்ச்சியே.

உணமையில் நீங்கள் சொன்ன போது எனக்கு துளியும் வருத்தமோகோபமோ எழவில்லை. காரணம் இந்த நாவலை பொறுத்தவரை என்னை மீறிய ஒரு சக்தியால்தான் மூழ்வதும் எழுத தூண்டப்பெற்றேன். மேலும் இந்த நாவலை எழுதி முடித்த பிறகு நான் ஆனமீக ரீதியாக பல விதங்களில் மாற்றமடைந்துவிட்டேன் . இதனை இப்படியே உங்கள் பெயரில் வெளியிட்டால் கூட எனக்கு சம்மதமே உங்களால் எனக்கு தரப்பட்ட நீரூற்று இயந்திர பொறியாளன் அந்த அளவு எனக்குள் ஊடுருவிவிட்டான். உணமையில் அவனுடைய குணங்களில்பாதியை ஏற்கனவே என்னுள் உருவேற்றிக்கொண்டேன்.நாவல் அச்சாகிவந்தபின் நானும் ஒரு நீரூற்று இயந்திர பொறியாளானாக மூழ்வதுமாக மாறிவிடக்கூட வாய்ப்பிருக்கிறது என மகிழ்ச்சியின் அளவை சற்றும்குறைக்காமல் ஜி.ராம் பிரசாத் அவனிடம் அது ”பார்” என்றும் பாராமல் சத்தாமாக கூறிக்கொண்டிருந்தார்.

ஆனால் ஏற்கனவே தெளிவாக முடிவெடுத்தவனை போல சந்திர குணசேகரன் நிதானமாக இன்னொரு குவளை பீரை முழுவதுமாக வயிற்றில் இறக்கியபடி , நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன் உண்மைதான் நான் சொன்ன கதையை உங்களின் அபார கற்பனையால் பிரமாதமாக் வலுப்படுத்தியிருக்கிறீர்கள் .அதுவும் நகராட்சி மன்ற த்லைவர் ம.நா.பெரியசாமி யின் மகள் அங்கயற்கண்ணி தங்க மலர் பாத்திரம் நான் சொன்ன சம்பவத்தில் இல்லவே இல்லை. அத்னை நீங்களாகவே கற்பனையில் சிறப்பாக வடித்துள்ளீர்கள் மற்ரும் காட்சி சித்தரிப்பு பின் புலம் இவைகள் அனைத்திலும் உங்களது உழைப்பும் கற்பனையும் அபாரமானது. ஆனால் அது பிரச்னையில்லை

நான் முன்னமே சொன்னது போல இதனுள் மறைந்திருக்கும் ஒரு அரூபமான மன அவ்ஸ்தயை உங்களை போன்ற எழுத்தாளர்களால் என்னை காட்டிலும் அதிகமாகவே பகுத்துணர முடியும் .தயவு செய்து உங்களுடைய உன்னததனமையை என்மீது சுமத்தி குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுத்த வேண்டாம் என்னை மனநோயாளியாகவாவது பார்த்து இந்த ப்ரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லவெண்டும்

சந்திர குணசேகரனுக்கு போதை அவனை மிகவும் ஆழமாக பேசவைத்துக்கொண்டிருந்தது. தன் வாழ்நாளில் ஒரு மனோரீதியான ப்ர்ச்னையை இத்த்னை துல்லியமாக இதற்கு முன் ஒரு போதும் தான் வெளிப்படுத்தியதில்லை என்பதும் அவனது கவனத்தில் வந்து போனது.

சற்றொரு நிமிடங்கள் இருவருமே மவுனமாக இருந்தனர் . ஜி.ராம் பிராசாத் சந்திர குணசேகரனின் நியாயத்தை முழுவதுமாக புரிந்து கொண்டவராக ஆழமாக யோசித்தபடி தலைகுனிந்திருந்தார்..அவர் முன் வைக்கப்படிருந்த பீர் குவளை அப்படியே இருந்தது.

சரியாக இரண்டு மணி நேரம் கழித்து இருவரும் சற்று தள்ளாடியபடியே பாரை விட்டு வெளியேவந்தனர்.இருவரது முகத்திலும் ஒரு முடிவுக்கு வந்த அறிகுறியை அவர்களின்ன் முகத்தில்ம படர்ந்திருந்த மகிழ்ச்சி காட்டிக்கொடுத்தது.

அவரவரது இரு சக்கரவாகனங்களின் அருகே வந்துநின்றனர். காவலாளி ஒருவன் அருகில் வந்து சல்யூட் அடித்துவிட்டு விலகி நின்றான். ஜி.ராம்பிராசாத் அவனுக்கு சில்லறை கொடுக்க பாக்கெட்டை துழாவ அத்ற்குள் சந்திர குணசேகரன் தன் பர்ஸை திற்ண்டு இரண்டு ரூபாய் நாணயத்தை தந்தான் .

ஜி.ராம் பிரசாத் சந்திர குணசேகரனிடம் ஒன்று சொல்லட்டுமா?

என்ன?

இந்த அருமையான மாலை பொழுதை நீரூற்று இயந்திர பொறியாளனுக்கு சமர்ப்பனம் செய்வோம்

என ஜி.ராம் பிராசாத் உரக்க கூவியபடி கையை உயர்த்த சந்திரகுணசேகரனும் அதனை நான் ஆமோதிக்கிறேன் எனக்கூறி கையை உயர்த்தி அவனது கையோடு கோர்த்துக்கொண்டான் --------தொடரும்
அஜயன்பாலா - எழுத்தாளர்.
தற்போது நடிகராகவும் இயக்குனராகவும் பரிணமித்துவரும் அஜயன்பாலா அடிப்படையில் ஒரு சிறுகதை எழுத்தாளர். 2002ல் தி வீக் வார இதழ் இவரை அந்த் ஆண்டின் சிறந்த வளரும் எழுத்தாளராக தேர்ந்தெடுத்து கவுரவித்த்து.

"நீரூற்று இயந்திர பொறியாளன்" இவரது முதல் நாவல்.




இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5