ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள்

இத்தொகுப்பில் உள்ள ஏதாவது ஒரு கதையினை உங்கள் விருப்பப்படி எடுத்து வாசித்துப் பாருங்கள். வாசகத் தோழமை நிறைந்த அவரது நடை, தனித்துவமான வாசிப்பு அனுபவம் ஏற்படுத்துவதை உணர்வீர்கள். சில இடங்களில் மகிழ்வீர்கள், சில இடங்களில் நெகிழ்வீர்கள். சிலர் மீது பரிவு ஏற்படும், சில அமைப்புகள் மீது சீற்றம் எழும். ஆம், காட்சிகள் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் செக்காவ் நம்மையும் அந்த நிகழ்வில் பங்கேற்கச் செய்து விடுகிறார்.

100.00

காலத்தை வென்றக் கதைவேந்தர்

இலக்கிய உலகில் உள்ள பெரும்பான்மையினரைக் கவர்ந்தப் பெருமைக்குரியவர் ஆன்டன் செக்காவ். படைப்பாளர்கள் மட்டுமின்றி கதைகளைச் சுவைக்கும் எவரையும் எளிதில் ஈர்க்கும் ஆற்றலுடைய எழுத்துக்கலை வித்தகர்.  ரஷ்யாவில் பிறந்தவராயினும், மொழித்தடை கடந்து, கால இடைவெளியினை வென்று, பண்பாட்டு வேறுபாடுகளை மீறி ,உலகளவில் அதிக வாசகர்களைப் பெற்ற எழுத்தாளராக விளங்க அவருடையக் கதைகளில் மிளிரும் எதார்த்தம், மனிதம் ஆகியவை முக்கியக் காரணமாகும்.

எளிமையானத் தோற்றத்தில் இருக்கும் செக்காவின் கதைகள் தாம் விவரித்துச் செல்லும் சமூகக்காட்சிகள் முலம் அவற்றை  வலிமையான முறையில் சாடும் திறனையுடையவை. ஒரு சில மாற்றங்கள் செய்து பார்த்தால், அவற்றில் இடம் பெற்றுள்ள கதை மாந்தர்களில் பலர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். ஓரிரு இயல்புகள் நம்மிடமே இருப்பதைக் கண்டு வியப்போம்.

நகைச்சுவை இழையோடும் அவருடையக் கதைகள் சமூக அவலங்களைச் சாடவும் தயங்குவதில்லை. கதை வெளியாகி நூற்றைம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், இன்றளவும் தொடரும் அத்தகையச் சமூகக்கேடுகள் தான் அவருடையக் கதைகளை நவீனத் தன்மையுடன் எம்மொழியிலும் உலாவர உதவுகின்றன என்பதோர் அவல முரணாகும்.

செக்காவின் கதையினை வாசிப்பதோடு நிறைவடையாமல் அதன் பின் நண்பர்களுடன் பகிர்ந்து அது குறித்து விவாதித்துப் பாருங்கள்.  ஒவ்வொரு கதையிலும் அதில் புதைந்துள்ள பொருள் பொதிந்த பல செய்திகள் விளங்கும். மனித நேயம் ததும்பும் தன் கதைகள் மூலம் இதயத்தைத் தொடும் செக்காவ் தமிழ் வாசகர்களுக்கும் பலச் செய்திகளைத் தருகிறார்.

பதிப்பு

2019, முதற் பதிப்பு

அட்டை வகை

காகித அட்டை

மொழிபெயர்ப்பாளர்

Author

சு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர்

Publisher

தடாகம் பதிப்பகம்