வாழ்வு.. இறப்பு.. வாழ்வு..

ஆய்வுப்பணிகளில் தான் சந்திக்க நேர்ந்த பல்வேறு தடைகளைத் தாண்டி மானுடத்திற்கு லூயி பஸ்தேர் அளித்த அறிவியல் கொடைகள் பல.

“நுண்ணுயிரியலின் தந்தை” என்று கொண்டாடப்படும் பஸ்தேர் அவர்களின் ஆய்வின் பலனாகவே பாலுக்குப் பாதுகாப்பளிக்கும் “பாஸ்டராக்கம்” அறிமுகமானது.

பெப்ரீன் நோயின் பாதிப்பிலிருந்து பட்டு உற்பத்தி மீட்கப்பட்டது. வெறிநாய்க்கடிக்கான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. இவையெல்லாம் பஸ்தேரின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

ஆய்வுக்கே தன் வாழ்க்கையினை அர்ப்பணித்த இத்தகைய அற்புத மனிதரின் வாழ்க்கையினை ஆய்வு செய்துள்ளார் எரிக் ஒர்சேனா.

180.00

அறிவியல் அற்புதம் பஸ்தேருடன் வாழ்வோம்:

அறிவியல் மேதை லூயி பஸ்தேர் அவர்களை அறியாதவரே இல்லை எனலாம்.

(இதுவரை லூயி பாஸ்டர் என ஆங்கில முறையில் உச்சரித்திருந்தால், பிரஞ்சு அறிவியல் அறிஞரானப் பஸ்தேரை இனி பிரஞ்சு முறையிலேயே அழைத்துப் பழகுவோம்) ஆய்வுப்பணிகளில் தான் சந்திக்க நேர்ந்த பல்வேறு தடைகளைத் தாண்டி மானுடத்திற்குப் பஸ்தேர் அளித்த அறிவியல் கொடைகள் பல. நொதிப்புத்தன்மைக்கான நுண்ணுயிர்க் கொள்கையை வெளியிட்டதன் பலனாகப் பாலுக்குப் பாதுகாப்பளிக்கும் “பாஸ்டராக்கம்” அறிமுகமாகி இன்றும் பயனளித்து வருகிறது. “நுண்ணுயிரியலின்தந்தை” என்று கொண்டாடப்படும் பஸ்தேர், பெப்ரீன் நோயின் பாதிப்பிலிருந்து பட்டு உற்பத்தியை மீட்ட பெருமைக்குரியவர். வெறிநாய்க்கடிக்கானத் தடுப்பு ஊசியைக் கண்டுபிடித்துப் பல்லாயிரக்கணக்கான மனிதர்களைக் காத்தவர்.

இவ்வாறாக, நம் அன்றாட வாழ்வில் ஏதோ ஒருவகையில் பஸ்தேரின் ஆய்வு நமக்கு உதவிவருகிறது.

இத்தகைய அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்புகளை நமக்கு அளித்துள்ள அவருடைய வாழ்க்கை, உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும்விதமாக அமைந்ததாகும்.

பிரான்ஸின் தென்கோடியில், டோல் என்னும் சிறிய நகரில் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுவந்த ழொசேஃப் என்ற எளிய மனிதரின் மகனாக 1822 ஆம்ஆண்டு பஸ்தேர் பிறந்தார். பள்ளிப் படிப்பின் போது அதிக மதிப்பெண் பெறத் தவறிய பஸ்தேர்,   அறிவியல் உலகில் பல இலக்குகளை எட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியத் திறனை எவ்வாறு பெற்றார் என்பதை விளக்கும் ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது.

அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வகத்துக்குள்ளேயே முடங்கிவிடாமல், சிக்கலுக்குரியக் களங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அவற்றுக்கானத் தீர்வினைக்கண்ட பஸ்தேரின் பாணி ஆய்வுலகப் புரட்சியாகப் போற்றப்படுகிறது.

ஆய்வுக்கே தன் வாழ்க்கையினை அர்ப்பணித்த இத்தகைய அற்புத மனிதரின் வாழ்க்கையினை ஆய்வு செய்துள்ளார் எரிக் ஒர்சேனா. பெருமைக்குரியப் பிரஞ்சு அகாதமியின் நிகழ்கால உறுப்பினரான எரிக் ஒர்சேனா பல புதினங்களை வெளியிட்டவர்.   ஆய்வுத்திலகமான பஸ்தேருடைய வாழ்வின் சுவாரசியங்களை அறிய விரும்பும் எவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. வியத்தகுமனிதரானபஸ்தேரின்மேதமை, முனைப்பு, உழைப்பு என அவரது நல் இயல்புகளைப் போற்றுவதோடு நிறைவடையாமல், அவரிடம்காணப்படும்குறைகள், பலவீனங்கள் போன்றவற்றையும் அவர் மீது பொறாமை கொண்டவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள், கூற்றுகள், முறையீடுகள் ஆகியவற்றையும் நடுநிலையோடு பதிவுசெய்கிறது இந்நூல்.

பஸ்தேரை உருவாக்கியப் பெற்றோர், அவர் தம் ஆய்வுப்பணியில் அயராது துணைநின்ற தியாக வடிவான மனைவி மரி, இளமையிலேயே நோயின் தாக்குதலுக்கு இரையான அவருடைய மகள்கள், ஆயிரம் கருத்துவேற்றுமை இருப்பினும் பஸ்தேரின் திட்டங்களை நிறைவேற்ற உதவிய அறிவார்ந்த உதவியாளர்கள் எனப் பலர் இந்நூலில் இடம் பெற்றுள்ளனர். வாழ்க்கை வரலாற்று நூலினையும் அனைவரும் விரும்பி வாசிக்கும்வண்ணம் சுவைபட எழுதமுடியும் என எரிக் ஒர்சேனா நிறுவியுள்ளார்.

பஸ்தேர் என்ற மாமேதையின் வாழ்க்கையினை விவரிக்கும் எரிக்ஒர்சேனா, தேவையான புவியியல் தகவல்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் தனக்கேயுரிய நடையில் இணைத்துவிடுகிறார். இதன்மூலம், நம்மை பஸ்தேர் வாழ்ந்த காலத்துக்குக் கொண்டு செல்கிறார்.

பஸ்தேரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமானக் கட்டங்களை அறியும் ஆர்வமுடன் நூலை வாசிக்கத்தொடங்கிய நான்,  இறுதியில் அந்த மாமேதையுடன் சில நாட்கள் வாழ்ந்த அனுபவத்தைப் பெற்ற நிறைவை அடைந்தேன்.  நீங்களும் வாழ்ந்து பாருங்கள்.

புத்தக வெளியீட்டு விழாவில், பேரா. ச. பாலுசாமி அவரிகளின் உரை

 

அட்டை வகை

காகித அட்டை

பதிப்பு

முதற் பதிப்பு – ஜனவரி 2020

பக்கங்கள்

184

மொழிபெயர்ப்பாளர்

வெளியான ஆண்டு

2020

Author

சு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர்

Publisher

தடாகம் பதிப்பகம்