இந்தா பிடி மந்திரி பதவி...

கற்பனை : உத்தம புத்திரன்

"பிரதமர் பதவி கேட்டிருந்தேனே... என்னாச்சி....? "
(கலைஞர் டெல்லியில் சோனியா, மன்மோகன் சிங்கை சந்தித்து விடடு சென்னை கோபாலபுரம் வீட்டுக்குள் வந்து அமர்ந்ததும் ஒட்டு மொத்த குடும்பமும் அவரைச் சூழ்ந்து கொள்கின்றனர்.)

ஸ்டாலின் : என்ன தலைவரே.. டெல்லிக்கு போன காரியம் என்னாச்சி? எல்லா அமைச்சர் பதவியும் நமக்குத்தானே..?

கலைஞர் : பின்ன... அள்ளு அள்ளுன்னு அள்ளிக்கிட்டு வந்துள்டேன்.

தயாநிதி : இங்க பாருங்க.. வரிசைல வந்து தாத்தா கொடுக்கிற மந்திரி பதவியை வாங்கிட்டுப் போங்க.. தாத்தா முதல்ல எனக்கு.

கலைஞர் : இந்தா மறுபடியும் தொலைதொடர்பு இலாக்கா (அனைவருக்கும் கைத்தட்டி விசிலடிக்க, ஜே.கே. நித்தீஸ் ஒரு அந்தர் பல்டி அடித்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளாய் அள்ளி வீசுகிறார்.

கலைஞர் : இந்தாப்பா டி.ஆர்.பாலு உனக்கு முன்ன மாதிரியே கப்பல் போக்குவரத்து துறை வாங்கிட்டு வந்துட்டேன். அப்புறம் சென்னை துறைமுகம்ங்கற பேரை மாத்தி கலைஞர் துறைமுகம்னு வெச்சின்னா துரைமுருகன் ரொம்ப சந்தோஷப்படுவார்.

டீ.ஆர்.பாலு : சேது சமுத்திர திட்டத்தையே கலைஞர் சமுத்திர திட்டமே தானே வைக்கப்பேறேன்.

கனிமொழி : அப்பா... எனக்கு ஒண்ணுமே கெடையாதா...?

கலைஞர் : ஏன் இல்லை... மயிலாட்லாம், குயிலாட்டம், பம்பையாட்டம், பாம்பாட்டம், கோலாட்டம், குத்தாட்டம், வரைக்கும் மொத்த குத்தகை உனக்குத்தான். இந்தியாவை ஒரு கலக்கு கலக்கிடு.

கனிமொழி : அப்படியே... தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் ஒரு துறை கொடுங்கப்பா.... அவங்க எனகு ரொம்ப பிரண்டு.

கலைஞர் : ம்.... விவசாயத்துறையை எடுத்துக்கச் சொல்லு.

தயாளு அம்மாள் : என்னங்க.... புள்ள பாவம் ரொம்ப நேரமா தாத்தா எதாச்சும் தருவாருன்னு பார்த்துகிட்டு இருக்க.

கலைஞர் : யாரும்மா....?

தயாளு : நம்ம அழகிரி பொண்ணு கயழ்விழி

கலைஞர் : எந்த தொகுதியில் ஜெயிச்சாங்க...? நான் சீட்டே தரலையே...

ஸ்டாலின் : ஜெயிக்கலேன்னா என்ன தலைவரே... நம்ம குடும்பத்துக்கு பதவி கொடுத்தா யார் என்ன சொல்ல முடியும்.

கலைஞர் : சரி இங்க வாம்மா... அழாத கண்ணத் துடைச்சிக்கோ... இந்தா கிராமப்புற வளர்ச்சி திட்ட அமைச்சர் பதவி... வெச்சிக்கோ

கயல்விழி : (கலைஞர் காதில்) தாத்தா சம்பாதிக்க முடியுமில்ல...?

கலைஞர் : இல்லேன்னா கொடுப்பானா... வெத்துவேட்டு துறைன்னா வேற யாருக்காச்சுமில்ல கொடுத்திருப்பேன்.

ஸ்டாலின் : அப்பா.... எம் பையன் உதயநிதி ரொம்ப ஆசைப்படறான், அவனுக்கொரு மந்திரி பதவி.

கலைஞர் : கடைசியில மீமிருந்தா தர்றேன்னு சொல்லு... அப்புறம் நம்ம ஆ. ராசாவ கூப்பிடு.

ஆ.ராசா : உங்க காலடியிலதான் தரைவரே விழுந்து கெடக்கறேன் (என்று எழுகிறார்)

கலைஞர் : எம் மேல நீ விசுவாசமா இருக்கறதால வன விலங்கு துறை உனக்கு... வெச்சிக்கோ இதல ஸ்பெக்ரம் பிரச்சனை எல்லாம் வராது. பயப்படாதே. அப்புறம் பல்டி அடிச்சாரே. ரிச்தீஸ் அவரு எங்க காணோம்...

ஸ்டாலின் : அவர் முதுகுலதான் தலைவரே இப்ப உட்காந்துகிட்டு இருக்கீங்க...

கலைஞர் : அப்படியா... வெளிய வாப்பா... உனக்கென்ன துறை வேணும்...?

ரித்தீஸ் : பணம் அச்சடிப்பு இலாக்கா கொடுத்தீங்கனா வசதியா இருக்கும்.

கலைஞர் : (பெருமூச்சுவிட்டபடி)ம்..... அப்படி மட்டும் ஒரு இலாக்கா இருந்திருந்தா (அப்போது போனில் திரமாவளவன் பேசுகிறார்)

திமா : தலைவரே.... தமிழ்வளர்ச்சி துறை எனக்கு கொடுங்க... அப்பதான் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியும்.

கலைஞர் : அதை ஏற்கனவே கொடுத்துட்டேன் நீ வேனா ரெயிலை வெச்சிக்கிறியா...?

திருமா : என்னது மயிலை வெச்சிக்கவா....?

கலைஞர் : மயிலு இல்லப்பா.... ரெயிலு.... ரெயிலு.... அதுதான் இப்ப ஆளில்லாம அலைமோச்சே.

திருமா : லாலு.... வெச்சிருந்ததுதானே.... ஒகே... ஓகே... தலைவா ஸாரி ஓகேன்னு இங்கிஸ்ல சொல்லிட்டேன். நன்றி நன்றி தலைவா (அப்போது ஒருவார் வேகமாக வந்து கலைஞர் காலில் விழுந்து எழுகிறார்)

கலைஞர் : யாருப்பா நீ என்ன வேணும்?

வந்தவர் : திருகுவளைலேர்ந்து வர்றேன். உங்க ஒன்றுவிட்ட சித்தப்பாவோட தாய்மாமா, அவரோட ரெண்டாவது சம்சாரத்து... தமிபியோட மச்சினன் கொழுந்தியாவோட அண்ணன் நான்.

கலைஞர் : அதெல்லாம் இருக்கட்டும்... எதுக்கய்யா வந்த அதை சொல்லு...?

வந்தவர் : நீங்க நம்ம சொந்தகாரங்களுக்கெல்லாம் மத்திய மந்திரி பதவி கொடுக்கறதா கேள்விப்பட்டேன் அதான்... நானும் ஒண்ணு வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்.

(என்றதும் கலைஞர் வீரபாண்டி ஆறுமுகத்தை கோபமாக பார்க்க, அவர் வந்த ஆணை தூக்கிகொண்டு உள் அறைக்கு செல்கிறார்.

கலைஞர் : அப்புறம்... இன்னும் யாருக்காச்சும் பதவி வரணுமாப்பா...? பின்னாடி என் குடும்பத்துக்கு வரல உன் குடும்பத்துக்கு வரலன்னு டார்ச்சர் பண்ணக்கூடாது.

தயாளு அம்மாள் : (பதறியபடி) ஐயய்யோ என்னங்க எவ்வளவு பெரிய தப்பு பண்ண பாத்தீங்க.

கலைஞர் : என்னம்மா... சொல்ற...?

தயாளு அம்மாள் : நம்ம மு.க.அழகிரிக்கு எங்கங்க பதவி...?

கலைஞர் : அச்சச்சோ நல்ல வேளை ஞாபகப்படுத்தின... எவ்வளவு பெரிய வம்ச வரலாற்றுப் பிழை செய்ய இருந்தேன் ஐயகோ... ஆமா எங்க அழகிரி...?

(என்றபோது அழகிரி ஒரு தூணில் முட்டிக்கொண்டு அதை கோபமுடன் குத்திக் கொண்டிருக்கிறார்)

கலைஞர் : வாப்பா... அழகிரி .... ஸாரி.... என்ன துறை வேணுமோ கேளு.... நிதி வேணுமா....? கப்பல் வேணுமா....? ராணுவம் வேணுமா...?

அழகிரி : அதெல்லாம் வேண்டாம்... நீங்க டெல்லி போகும் போதும் என்ன சொல்லி அனுப்பிச்சேன்.

கலைஞர் : மறந்துட்டம்பா.... அப்பாவுக்கு வயசாயிடுச்சில்ல... என்ன பதவி கேட்டே...? இப்ப சொல்லு வாங்கித்தர்ரேன்.

அழகிரி : பிரதமர் பதவி கேட்டிருந்தேனே... என்னாச்சி....?

(என்று கேட்டதும் கலைஞர் உட்பட, மொத்த பேரும் அதிர்ச்சியுடன் ஸ்டாப் பிளாக்கில் காணாமல் போகின்றனர்).



இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5