டாக்டர் பட்டம் போடுங்க சாமி...
கற்பனை : உத்தம புத்திரன்
(வடிவேலு அலுவலகத்தில் மயில்சாமி, முத்துக்காளை, போண்டாமணி, சிங்கமுத்து
ஆகியோர் டென்ஷனுடன் அமர்ந்திருக்க, வடிவேலு வேகமாக உள்ளே
வருகிறார்...)
வடிவேலு: டேய் ... எவண்டாவன்... உடனே வா..ன்னு போன் செஞ்சது..
மயில்சாமி : நான்தாண்ணே... ரொம்ப முக்கியமான விஷயம்.
வடிவேலு: ரொம்ப முக்கியம்னு ஆட்டைய போட ஆள் கூட்டிட்டு வந்திருக்கீங்களா?
முத்துக்காளை: அதில்லேண்ணே நேத்து குப்புறப்படுத்து குனிஞ்ச மாதரி எந்திருச்சப்பதான் எனக்கு....ஒரு யோசனை வந்துச்சு.
வடிவேலு: என்னன்னு...?
சிங்கமுத்து: யார்.. யாருக்கோ...டாக்டர் பட்டம் குடுக்கும்போது உங்களுக்கும் ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கக்கூடாதான்னு...?
போண்டாமணி:உங்களுக்கு ஊசி போடத் தெரியாதா... கட்டுப்போட வராதா?
மயில்சாமி : டெலஸ்கோப்பை காதுல வெச்சி தொட்டுப் பார்க்கத் தெரியாதா...?
முத்துக்காளை: இல்ல... ஆப்பரேஷன்தான் பண்ணத் தெரியாதா...?
நீங்க எத்தனை படத்துல டாக்டரா நடிச்சிருப்பீங்க...
வடிவேலு: என்னடா ஆபரேஷன்... ஊசி... போஸ்ட்மார்டம்னு ஏதேதோ சொல்றீங்க...
சிங்கமுத்து: என்ன தம்பி இது கூடவா தெரியாது. கோடு போட்டு கிழிச்சா ஆபரேஷன்...
குத்து மதிப்பா கிழிச்சா போஸ்ட் மார்ட்டம்...
வடிவேலு: அதுக்கெல்லாம் நெறையா படிக்கணுமே...
மயில்சாமி: நீங்க சும்மா இருங்கண்ணே... விஜய் ரொம்ப பெரிய படிப்பு படிச்சாரா...
ஸ்டாலின் தான் நிறையப் படிச்சாரா... அவங்கெல்லாம் டாக்டர் பட்டம் வாங்கலை.
அது மாதரிதாண்ணே நீங்களும்!
வடிவேலு: அதுக்கு... இப்ப என்னடா செய்யச் சொல்றீங்க...?
சிங்கமுத்து: உங்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கச் சொல்லி கேப்போம்.. தரலேன்னா...
ஒவ்வொரு பிரசவ ஆஸ்பத்திரி வாசல்லயும் போராட்டம் பண்ணுவோம்.
வடிவேலு: பிரசவ ஆஸ்பத்திரிக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்...
மயில்சாமி : நீங்க ஒண்ணும் தெரியாத பச்ச மண்ணு. நீங்க சும்மா... பந்தல்ல பப்பரக்கான்னு படுத்திருங்க... மத்ததை நாங்க பாத்துக்கறோம்.
(அடுத்த நாள். சென்னை பொது மருத்துவமனை வாசலில் வடிவேலு பந்தல் போட்டு
அமர்ந்திருக்க, அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் காரி துப்பியபடி
செல்கின்றனர்)
வடிவேலு: என்னடா... போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தருவாங்கன்னு சொன்னீங்க...இப்ப... காரித்துப்பிட்டு போறாங்க...
சிங்கமுத்து: நம்மளப்பாத்து இல்ல தம்பி ... ஆஸ்பத்திரி பெனாயில் வாட ஒத்துக்காம துப்புறாங்க..
வடிவேலு: ஆமா...டாக்டர் பட்டம் எவ்வளவு பெரிசாடா இருக்கும்?
முத்துக்காளை: எப்படியும் நாலஞ்சு கிலோ தேறும் ..
மயில்சாமி : அப்புறம், இன்னொரு முக்கியமான விஷயம். நீங்க டாக்டராகி விட்டீங்கன்னா...நயன்தாராவ நர்ஸா போடுங்க... நான் கம்பவுண்டர் வேலைய எடுத்துக்கறேன்...
போண்டாமணி :அதெல்லாம் முடியாது அசின்தான் நர்ஸ், அப்படித்தான் ஆசைய வளர்த்திருக்கேன்.
முத்துக்காளை: நான் ஒத்துக்க மாட்டேன்... போராட்டத்துல நான் கலந்துகிட்டதுக்கு காரணமே நமீதாவ நர்ஸாக்கணும்னுதான். இல்லேன்னா போராட்டத்தைக் கலைங்கடா...
வடிவேலு: டேய் ... டேய் ... இருங்கடா... முதல்ல எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கட்டும்.
அதுக்குள்ள நர்ஸு யாருன்னு நாக்கத் தொடங்க போட்டுக்கிட்டு அடிச்சிக்கிறீங்க.
(அப்போது ஒரு கருங்கல் வடிவேல் மண்டையில் விழுகிறது)
வடிவேலு: (தலையை பிடித்துக்கொண்டு) டேய்... எவண்டாவன்... கல்லக் கொண்டு
அடிக்கிறவன், கஞ்சியில உப்புப்போட்டு குடிக்கறவனா இருந்தா நெஞ்ச
நிமுத்திகிட்டு நேரா வாடா பாப்போம்...
(அப்போது போண்டாமணி தலையில் இன்னொரு கல் வந்து விழுகிறது)
போண்டாமணி:ஐயோ... அம்மா... அண்ணே... யாரோ திட்டம் போட்டு இந்த வேலை
பாக்குறாங்கண்ணே..விவேக் ஆளுங்க தான் போரமைல இப்படி பண்ணுறாங்கனு நினைகிறேன் ... எங்கிருந்து எறியறாணுங்கன்னு தெரியல... ஆனா குறி
தவறாம அடிக்கிறானுங்க..
முத்துக்காளை: அண்ணே எனக்குத் தெரிஞ்சுப் போச்சின்னே... கேப்டன் விஜயகாந்தோட
ஆளுங்க தான் கல்லைக் கொண்டு எறியறாங்க..
மயில்சாமி: ஆமா பாஸ்... கல்லு நல்லா உருண்டையா, கருப்பா இருக்கும்போதே
நெனைச்சேன். ஆனாலும், இந்த போராட்டத்துல இருந்து நாம பின்வாங்கக் கூடாது,
நீங்க தொடர்ந்து நடத்துங்க... என் மச்சான் ஊருக்குப் போறான்னு மெசேஜ்
வந்துருக்கு .. அனுப்பிவிட்டு வந்துறேன்....
வடிவேலு: (மயில்சாமிசட்டையைப் நிடித்து) பண்ணாட பரதேசிப் பயலே... ஒரு அடி எடுத்து வெச்ச, உன்னோட கெரண்டை காலை வெட்டிப்புடுவேன்... சும்மா செவனேன்னு
ரோட்ல போயிட்டிருந்தவன பட்டம் அது இதுன்னு முஞ்சந்தியில நிக்க வெச்சி
மண்டையப் பொளந்து, வடிவேல... அடிவேலாக்கிப்புட்டீங்களேடா ...
(அப்போது ஒரு போலீஸ் ஜீப் வந்து நிற்க , அதிலிருந்து சில போலீஸ்காரர்கள்
இறங்குகிறார்கள்)
இன்ஸ்பெக்டர்: டேய் ... யார்டா இந்த கேங்குக்கு லிடர்
சிங்கமுத்து: (வடிவேலுவைக் காட்டி) இவருதாங்க...
இன்ஸ்பெக்டர்: ஏண்டா... ஆஸ்பத்திரிக்கு வர பொண்ணுங்களை வாசல்ல நின்னு ஈவ் டீசிங்கா பண்றீங்க...
வடிவேலு: ஐயா... சாமி அதில்லிங்க... டாக்டர்... பட்டம்...
இன்ஸ்பெக்டர்:: என்னது... டாக்டரா... போலி டாக்டரா... என்ன தைரியம் இருந்தா... டாக்டர்னு பொய் சொல்லி வாசல்ல வைத்தியம் பாத்து... காசக் கறப்பே... மிதிங்கையா...
இவன மிதிச்சி ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிட்டு வாங்க.
வடிவேலு: இப்ப சந்தோஷமாடா உங்களுக்கு... ம்... என்னா வேடிக்கை.. அடிக்க ஆரம்நிங்க..
(என்று வடிவேலு குனிந்து கொள்ள , அவரை போலீஸ்காரர்கள் அடிக்க, மற்றவர்கள்
பயந்து ஓடுகின்றனர்)