அரசியல் காய்ச்சல் !

கற்பனை : உத்தம புத்திரன்



(போயஸ் கார்டனில் அடுத்து என்ன போராட்டம் அறிவிக்கலாம் என்று குழம்பிப்போய் கோபத்துடன் குறுக்கும் நெடுக்குமாக அல்லாடிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா.அவர் எதை சொன்னாலும் கைத்தட்ட கட்சி பிரமுகர்கள் அவரையே பார்த்தபடி இருக்கின்றனர் ) .

ஜெயலலிதா : யாராச்சும் என்ன பண்ணலாம்னு சொல்லுங்க ... போராட்டம் அறிவிக்காம உடம்பு உதறல் எடுக்குது. ஆளுங்கட்சி அடி மட்டத் தொண்டன் கூட நிம்மதியா இருக்கக்கூடாது.

ஓ,பன்னீர் : அவங்க கட்டுன எல்லா பாலத்தையும் இடிக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கலாமா...

ஜெயலலிதா : வேற சொல்லுங்க ... உங்ககிட்ட இன்னும் நெறைய எதிர்பாக்கறேன்.

ஜெயக்குமார் : பட்டாசு விபத்து பாகிஸ்தான் சதி அதுக்கு கலைஞர் உடந்தைன்று குண்டு போடலாமா.?

ஜெயலலிதா : சின்ன குழந்தைங்க கூட.. இதை கேட்டு பிர்ர்ர்..னு வெண்ணீராடை மூர்த்தி மாதிரி சிரிக்கும் வேற நச்சுன்னு சொல்லுங்க.

ஜெயக்குமார் : அம்மா ... பன்றிய நாம கையில எடுக்குக் கிட்டா என்ன. ?

தம்பித்துரை : ஏற்கனவே நாம நாரடிச்சிக்கிட்டுதான இருக்கோம்.

ஜெயலலிதா : [உற்சாகத்துடன் ] கரெக்ட்.. பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத தி.மு.க அரசை கலைச்சொல்லுவோம்.

ஓ.பன்னீர் : காத்துல நோய் பரவுறதால காத்தை எல்லா மாத்திப்புட்டு வேற காத்து கொடுக்கச் சொல்லி பேனை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு பேரணி போவோம்.

ஜெயக்குமார் : நாய் புடிக்கிற வண்டி மாதிரி பன்றி புடிக்க வண்டி வரணும்னு கேட்போம்.

ஜெயலலிதா : அது மட்டுமில்ல பன்றியில இருந்து இந்தநோய் பரவுறதால நாட்டுல இருக்கிற பன்றிங்க எல்லாத்துக்கும் ‘’மாஸ்க்’’ மாட்டச் சொல்லி மாநாடு போடுவோம்.

ஆதி ராஜாராம் : அதோட மட்டும் விடக்கூடாது. பன்றிகாய்சல் பரவுவதுக்கு முக்கிய காரணம் ஆற்காடு வீராசாமிதான்னு அறிக்கை விடுங்கம்மா..

ஜெயலலிதா : ஏன்.. அவரு என்ன செஞ்சாரு...?

ராஜாராம் : அவரை எனக்கு கொஞ்சம் கூடப்பிடிக்காது அதான்.

ஓ.பன்னீர் : வேணாம்மா.. எல்லாத்தையும் வம்புக்கு இழுத்து சந்தி சிரிக்க வைப்போம்.

ஜெயக்குமார் : ஆமாம்மா.. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே பன்றி காய்சலும் வந்துடுதுன்னு கோஷம் போடலாம்.

தம்பித்துரை : அதுமட்டுமில்லாம.. பன்றி பண்ணை வெச்சிருக்கறவங்க எல்லாரும் தி.மு.க. காரங்கதான்னு ஒரு பன்றிய தூக்கி ஸாரி... பழியத் தூக்கிப் போடுவோம். அப்பதான் மக்கள் நம்மை நம்புவாங்க. ..

ஜெயலலிதா : அடேங்கப்பா ... நம்ம கட்சிய ஜெயிக்க வைக்கக் கூட இவ்வளவு நல்ல...நல்ல ஐடியாவெல்லாம் சொன்னதில்லையே இப்ப மட்டும் எப்படி கொட்டுறிங்க .

ஓ. பன்னீர் : அதுவா வருதும்மா....

ஜெயக்குமார் : அப்பதானம்மா .. அடுத்த எலக்ஷன்ல உங்ககிட்ட சீட்டு வாங்க முடியும் . இல்லேன்னா அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்.வி. சேகர் மாதிரி கழுத்தைப் பிடிச்சில்ல தள்ளுவிங்க...

ஜெயலலிதா : அப்படியே.. காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய மாத்திரை இல்லை, சிரஞ்சி இல்லை, ஊசி இல்லை அண்டா இல்லை , அட்டைப்பெட்டி இல்லைன்று கதைய கட்டிவிடுவோம்.

தம்பித்துரை : அதோட பன்றி காய்சல் வந்தவங்க எல்லாருக்கும் இலவச டீ.வி மாதிரி இலவச ஏ,சி மிஷின் கேட்டு கோஷம் போட்டு ரோட்டுல சுட்டமா கும்மியடிப்போம்.

ஜெயக்குமார் : எப்படியோ போராட்டத்துக்கு ஒரு மேட்டர் கெடைச்சிடுச்சி... சும்மாவே வாயே மேல்லுற நமக்கு அவுல் கெடைச்சா சும்மாவா...

[அப்போது தம்பிதுரை லேசாக இரும்முகிறார்]

ஜெயலலிதா : அப்பாடா இதைவெச்சி கொஞ்ச காலம் அரசியல் பண்ணிடலாம் . ஆமா .. என்ன தம்பி இருமுறிங்க ... மூக்குல வேற தண்ணியா கொட்டுது என்னாச்சி...?

தம்பித்துரை : என்னென்று தெரியலம்மா ஓருவாரமா அப்படித்தான் இருக்கு.

ஓ.பன்னீர் : ஐயய்யோ... இது அதோட அறிகுறியாச்சே அம்மா .. வாயப் பொத்திக்கிட்டு எல்லாரும் வேளியப் போங்க .

[என்று அலறியதும் .. தம்பிதுரை தவிற மற்ற அனைவரும் சட்டென்று காணாமல் போகின்றனர்]



உத்தம புத்திரன் அவர்களின் மற்ற படைப்புகள் :


1. இந்தா பிடி மந்திரி பதவி...

2. வானத்தை வாடகைக்கு எடுப்போம்.

3. கவுந்து போனோர் காங்கிரஸ் காரிய கமிட்டி.
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5