டெல்லிக்குப் போறோம் டெல்லிக்குப் போறோம்

கற்பனை : உத்தம புத்திரன்



(நடிகர் விஜய் டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்தித்தார் என்று கேள்விப்பட்டதும், நடிகர்கள் வடிவேல், கருணாஸ், ‘கஞ்சா’ கருப்பு, எம்.எஸ். பாஸ்கர் அனைவரும் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திற்கு செல்கின்றனர்)

வடிவேலு : (வாசலிவ் நின்றபடி) ஐயா, ராகுல் ஐயா ராகுல் சாமி.. பல ஆயிரம் மைல் தூலத்துல இருந்து வர்றேன் சாமி.. எதாச்சும் பதவி இருந்தா போடுங்க.

கருணாஸ் : ஆமாம் ஜி.. அன்டா.. குண்டாவெல்லாம் அடகு வெச்சி காசு தேத்திக்கிட்டு வந்தேன்.

வடிவேலு : (கருணாஸை முறைத்தபடி) ஏன்டா லொடுக்கு அதான் நான் கேட்டுகிட்டு இருக்கேனில்ல.. நீயும் கேக்குற.. ஓவர் டேக் பன்றியாடா பரதேசிப் பயலே..

கருப்பு : ராகுல் தொரை.. உங்க கஞ்சா கருப்பு வந்திருக்கேன் மிச்சம் மீதி பதவி இருந்தா கொடுங்கசாமி.. ஊர்ல பதவிய வெச்சிக்கிட்டு வியாபாரம் பண்ணி பொழப்ப ஒட்டுக்கிடுவேன்.. அரசியல் வியாபாரம் ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு எங்க நாட்டுல.

எம்.எஸ். பாஸ்கர் : (தண்ணியில் தள்ளாடியபடி) ராகுல் ஜி.. மை பெஸ்ட் பிரன்ட், ஐயம் ஸ்டில் இன் அமெரிக்கா அண்ணா புனிவர்சிட்டி.. ஒரே கிளாஸ்மெட், எனக்கு பதவி தராம.. உங்களுக்கு தரப்போறாரா.. உதவிக்கரைங்களா..

வடிவேலு : எளநி தலையா.. வந்தியா.. பதவி கொடுத்தா வாங்கிட்டு போ.. அத விட்டுப்புட்டு ஒரண்டை இழுத்தே. இங்கியே உன் சங்கை கடிச்சி சோளிய முடிச்சிடுவேன். (அப்போ சிங் ஒருவர் வெளியே வருகிறார்)

சிங்க : அரே.. யார்ப்பா.. நீங்க இன்னா வேணும் நிம்ல்கி.

வடிவேலு : ஐ சிங்கு.. சிங்கு ஜி.. ஒரு ‘ஏ’ நோக்கு செல்லேன்.

சிங்க : (கோபமுடன்) ‘ஏ’ ஜோக்? அரே பண்ணாடை.. கஸ்மாலம்.. பரதேசி..

வடிவேலு : ஐயோ.. நீங்க போங்க சிங்கு. சிங்கு அடிக்கடி சென்னைக்கு சுத்திப்பார்க்க வருவார் வோல.. (அப்போது தங்கபாலு அலுவலகத்தில் இருந்து வெளியே வருகிறார்)

தங்கபாலு : அடே.. எதுக்குப்பா.. நீங்கெல்லாம் டெல்லிக்கு வந்தீங்க.. எதாச்சும் ஷுட்டிங்கா..?

கருணாஸ் : விஜய் ராகுலைப் பார்த்துட்டுப் போனாரில்லையா அது மாதிரி நாங்களும் பார்த்து பதவி கேட்டு வாங்கிகிட்டு போக வந்தோம்.

தங்கபாலு : என்னது.. பதவியா..! யோவ்.. இருக்கிற ஆளுங்களே.. பதவி இல்லாம.. பைத்தியமா அலையறோம்.. இதுல உங்களுக்கு வேறயா..

கஞ்சா கருப்பு : அப்படியெல்லாம் பொசுக்குன்னு சொல்லிப் புடாதீங்க சாமி. மனசு பொக்குன்னு போயிடும்.

எம்.எஸ். பாஸ்கர் : ஐ யாம் ராகுல்ஜி பெஸ்ட் பிரன்ட். ஸ்டெடிஸ் இன் அமெரிக்க.. அண்ணா (என்றபடி போதையில் கீழே விழுகிறார்)

வடிவேலு : விஜய்க்கு இளைஞர் அணி பதவி கொடுத்தீங்கனா எனக்கு வயசானவர் வாரியப்பதவி கொடுத்தாக்கூட போதும்.. மனசு வைக்கணும் நீங்க

கருணாஸ் : வேணும்னா.. உங்க மெகா டி.வி.க்கு காமெடி புரோக்கிராம் பண்ணித்தர்றேன். அப்பவாச்சும் பதவி வாங்கித்தருவீங்களா?

தங்கபாலு : அப்படியும் முடியாது. கட்சி niலிடம் சொல்hம என்னால எதுவும் செய்ய முடியாது. எல்லோரும் போங்க உங்க கூட இவ்வளவு நேரம் பேசினதால தமிழ் ஆளுங்களுக்கு சிபாரிசு பண்ணேன்னு என்ன பதவிய விட்டு தூக்கிப்புடுவாங்க.

கருப்பு : அப்படின்னா.. ராகுல் தொரைய கண்ணுலயாச்சும் காமிங்க.. கால தொட்டு கும்புட்டுப்புட்டாவது போறேன்.

கருணாஸ் : (மெதுவாக தங்கபாலு காதில்) பதவி மட்டும் தறேன்னு சொல்லுங்க என் மனைவியும் நானும் ஒரு டான்ஸ் புரோக்கிராம் பண்றோம்.

தங்கபாலு : (அலறியபடி) ஐயய்யோ பதவி வேயாலும் கொடுத்துப்புடறேன்.. இப்படி பயப்படுத்தாதிங்க.. ஸவடிவேலுவிடம்] வைகைப்புயல் உங்களுக்கு வேனா வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் பதவி தர்றேன் வெச்சுக்சிறிங்களா...?

வடிவேலு : (கையெடுத்து கும்பிடும் படி) ஐயோ.. வேணாம்பா அந்த பதவியில நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும் .இனி மேலும் அடிவாங்க உடம்புல தெம்புஇல்ல.ஸஅப்போது ஒரு ரூமிலிருந்து பலர் வேஷ்டி-சட்டைகள்கிழிந்தபடி வெளியே ஓடி வருகின்றனர்].

கருணாஸ் : [பதறியபடி] அச்சச்சோ... என்னாச்சி சார்..எதுக்கு எல்லாரும் வேஷ்டி- சட்டை கிழிஞ்சபடி ஓடி வர்றாங்க...?

தங்கபாலு : ஓ...அதுவா... காங்கிரஸ் காரிய கமிட்டி முடிஞ்சி எல்லாரும் போறாங்க...

வடிவேலு : காரிய கமிட்டி முடிஞ்ச மாதிரி தெரியலையே ஏதோ கலவரம் மாதிரியில்ல இருக்கு.

தங்கபாலு : [புன்னகைத்தபடி] சட்டை கிழிக்காத காரிய கமிட்டி என்னைக்கு முடிஞ்சிருக்கு... இதெல்லாம்தான் எங்களோட அடிப்படை தகுதி.

வடிவேலு : அப்படின்னா மாசாமாசம் டவுசர் கிழியுதுன்று சொல்லுங்க...

தங்கபாலு : இப்ப சொல்லுங்க உங்க யாருக்கெல்லாம் பாதவி வேணும்...?

கருப்பு : ஆiஉசடிளயவந ஐஐ விடுங்கப்பு... மாசாமாசம் வேட்டி கிழிக்க நம்மாள ஆவாச... ஓவ்வொரு நாளைக்கு காரிய கமிட்டி நடந்துச்சுன்ன மானம் டபுள் டைட்டானிக் கப்புல்ல ஏறிடும் .

[அப்போது தங்கபாலு செல் அடிக்க எடுத்துப் பேசிவிட்டு]

தங்கபாலு : ஏம்பா.. இங்க பதவி கேட்டு வந்ததை யார்ட்டயாச்சும் சொன்னிங்களா..

கருப்பு : இல்லியே... ராவோட ராவா.. போத்திக்கிட்டுதான வந்தோம்.

தங்கபாலு : தமிழ்நாட்டில இருந்துதான் போன்.. நீங்க வந்த விஷயத்தை இன்டர்நெட் மூலமா கண்டுப்புடிச்சி உங்க எல்லார் வீட்லயும் ‘ரெய்ட்’ பண்ணப் போறாங்களாம்.

[என்று சொன்னதும் அனைவரும் பதறியபடி ஓடுகின்றனர்]

கருப்பு : ஐயய்யோ.. இப்பத்தான் நாலுகாசு சம்பாதிக்க ஆரம்பிச்சேன் அதுக்குள்ள ரெய்டா [என்ற படி அவரும் ஓடுகின்றார்]



உத்தம புத்திரன் அவர்களின் மற்ற படைப்புகள் :


1. இந்தா பிடி மந்திரி பதவி...

2. வானத்தை வாடகைக்கு எடுப்போம்.

3. கவுந்து போனோர் காங்கிரஸ் காரிய கமிட்டி.
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5