ராகுல்ஜி ஹாவோஜி ! ஹாவோஜி !!

கற்பனை : உத்தம புத்திரன்



[ராகுல் காந்தி சென்னைக்கு வருகிறார் என்றவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பாகிறார்கள். ஒவ்வொரு தலைவர்களும் தங்கள் கோஷ்டிகளுடன் கூட்டம் போடுகின்றனர் ]


ஜி. கே. வாசன் : இங்க பாருங்கப்பா... ராகுல் விமான நிலையத்துல இறங்கினதும் கப்புன்னு நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வந்துடனும். மத்த தங்கபாலு கம்பெனி, ஈ.வி.கே.எஸ் கம்பெனி சிதம்பரம் கம்பெணிகாரங்க யாரு கண்ணுலயும் காட்டாம ராகுலை பொத்துனாப்புல கொண்டு வந்துடுங்க...

கராத்தே தியாகராஜன் : [கழுத்தில் கர்ச்சீப்பும், முகத்தில் வெட்டுக்காயத் தழும்பு மேக்கப்புடன் லுங்கியுடன் வந்து நின்று] ஓகே.. பாஸ்.. காரியத்தை கச்சிதமா முடிச்சிடலாம்...

வாசன் : [பதறியபடி] யோவ்.. தியாகு.. என்னய்யா என்னை கொள்ளை கூட்ட பாஸ் மாதிரி ஆக்கிட்ட.. மேக்கப்பை எடு, எனக்கே பயமா இருக்கு.

தியாகராஜன் : நாம கூப்பிட்டதும் வந்துடுவாரா...?

வாசன் : வரவைக்கணும். அதுக்கு யாராச்சம் ஐடியா கொடுங்க..

தியாகராஜன் : நான் கராத்தேவுல குங்பூ.. யங்பூ.. டங்பூ ன்னு கர்ண கொடூரமா ஸ்டெப் வேச்சேன்னா கராத்தே கத்துக் கொடுக்கச் சொல்லி பின்னாடியே வந்துடுவாரு...

வாசன் : ஆமா.. அப்படியே கூட்டிட்டும் போயி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிய நீ வாங்கிக்கலாம் இல்ல... இந்த சோலா பர்பாமேன்ஸ் பண்றவேலையெல்லாம் அ.தி.மு.க வுல வெச்சிக்க இங்க வேணாம்.

[ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன் கோஷ்டியுடன்]

ஈ.வி.கே. இளங்கோவன் : என்ன பண்ணியாச்சும் ராகுலை ஈ.வி.கே. தான் நிரந்தர காங்கிரஸ் தலைவர், நிரந்தர முதல்வர்னு சொல்ல வெச்சிடனும் , அதோட அவரைத் தூண்டிவிட்டு தி.மு.க ஆட்சியில காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு வேணும்னு கேட்க வெச்சிடனும்.

ஜே.எம்.ஆரூன் : இதை கலைஞர்கிட்டயே கேட்டுப் பார்க்கலாமே...

ஈ.வி.கே : யோவ் வெவரம் புரியாத ஆளா இருக்கியே அப்பப்ப பங்கு வேணும்னு பிட்டு பிட்டாப் போட்டதை எல்லாம் புட்டு.. புட்டில்ல போட்டுடோரு.

ஆருண் : ராகுல் பொதுக் கூட்டத்துக்கு காசு கொடுத்து ஆட்களை கூட்டிட்டுப் போயி அவர் மனசுல இடம் புடிக்கலாம்...என்ன சொல்றிங்க ...?

ஈ.வி.கே. : நல்லாத்தான் இருக்கு. ஆனா... நாமதான் கூட்டத்தை கூட்டி வந்தோம்னு ராகுல்ட்ட எப்படி காட்டறது.

ஆரூண் : பெண்கள்ளை ரெட்டை ஜடை போட்டு சிவப்பு ரிப்பன் கட்டலாம். ஆண்கள்னா தலையில சிவப்பு குல்லா எப்படி..? ராகுல் மயங்கிடுவாருல்ல...

ஈ.வி.கே : நல்லாத்தான் இருக்கு... இந்த விஷயம் மத்த கோஷ்டிக்கும் தெரிஞ்சி அவங்க முந்திக்கிட்டா..?

ஆரூண் : வழக்கம் போல காரியத் காமிட்டியக் கூட்டி அவங்களை வேட்டி - சண்டைய அவுத்துவிட்டு அண்டவர்வேரோட ஓட விட்டிருவோம்.

[பா.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் கோஷ்ட்டி]

கார்த்தி : அப்பா... கவரைப் பேட்டையிலிருந்து கானாடுகாத்தான் வரைக்கும் நம்ம பண்ணெயில வேலை செய்ற ஒட்டு மொத்த கூலி ஆட்களையும் கூட்டியாந்துட்டேன். தலைக்கு எவ்வளவு கூலின்னு நீங்க பேசுங்க...

கூலிக்காரர்கள் தலைவர் : இங்க பாருங்க பா.சி. ஒரு நாளைக்கு காட்டு வேலைக்கு எவ்வளவும் கூலி கொடுப்பிங்களோ அதை கொடுங்க போதும்.

சிதம்பரம் : அதெல்லாம் முடியாது. வடையும், வரக்காபியும் கொடுத்து கைல பத்து ரூபா தருவேன் சம்மதமா..?

தலைவர் : என்னங்க... இவ்வளவு குறைச்சி கொடுக்கறிங்க... ரொம்ப அநியாயமா இருக்கே..

சிதம்பரம் : ராகுல் காந்திய நேர்ல கூட்டிப் போயி காட்டறேனே அதுக்கு உங்கிட்ட காசு கேக்கறனா... பேசாம... சொல்லும் போது மாட்டு வண்டியில ஏறிக்கிட்டு வாங்க...

கார்த்தி : அப்பா ... ராகுல் பேசுரதை தமிழில் மொழிபெயர்க்கும் வேலையை நிங்கலே பன்னுங்க...அப்பத்தான் மத்த கோஷ்டியை எல்லாம் ஓரங்கட்ட முடியும்.

சிதம்பரம் : பின்ன..ராகுல் பேச எந்திரிச்சதும் ‘டபால்’ னு ஓடிப்போயி மைக்கை பிடிச்சுக்குவேன்.

கார்த்தி : இடையில ”வாரித்தந்த வள்ளல் ராகுல்” ”கொட்டித் தந்த குமணன் ராகுல்”னு அடிச்சிவிடுங்க. அடுத்த தடவை நீங்க பிரதமர், நான் ஜனாதிபதி... ஸாரி... துணை பிரதமர்

[அடுத்து நாள் காலை விமான நிலையத்தில் அனைவரும் காத்திருக்க, ராகுல் வராததைக் கண்டு அதிர்ச்சியுடன் காங்கிரஸ் அலுவலகம் வருகின்றனர்.]

சிதம்பரம் : தங்கபாலு.. ஒழுங்கா.. ராகுல் இருக்கிற இடத்தை சொல்லிவிடு.,?

தங்கபாலு : நீ.. கூட்டிட்டுப் போயிட்டு என்ன கேக்குறியா..?

ஈ.வி.கே. : ரெண்டு பேரும் நல்லா நாடகம் ஆடறிங்க.. ராகுல்ஜியை கூட்டிட்டு வரப்போறிங்களா இல்லையா...?

[என்றதும் மூன்று கோஷ்டிகளும் அடித்துக் கொள்கின்றனர். அப்போது ராகுல், நடிகர் விஜய்யுடன் வருகிறார்.]

விஜய் : என்னங்கண்ணா வழக்கம் போல.. கோஷ்டிசண்டையில வேட்டி - சட்டையெல்லாம் தோரணமா தொங்கவிட்டுட்டிங்களா… எல்லாத்தையும் ராகுல்ஜி லைவ்வா பார்த்துவிட்டுதான் இருந்தாரு.. எல்லாம் என்னொட ஏற்பாடுதான்.நான் டெல்லிக்கே போயி,..ராகுலை பிக்கப் பண்ணிட்டு வந்துட்டேங்கண்ணா.. அப்புறம் ...2014-ல அவர் பிரதமர், 2011-ல நான் முதல்வர்னு முடிவும் பண்ணிட்டார்.

ராகுல் : எஸ்... நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என்பேச்சை நானே கேட்கமாட்டேன்..

[என்று ஸ்டைலாய் சொல்லி நடக்க, அனைவரும் விக்கித்து நிற்கின்றனர்.]


இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ள / சேமிக்க : Bookmark and Share



உத்தம புத்திரன் அவர்களின் மற்ற படைப்புகள் :

இந்தா பிடி மந்திரி பதவி.!
வானத்தை வாடகைக்கு எடுப்போம்.
கவுந்து போனோர் காங்கிரஸ் காரிய கமிட்டி.
கிரிக்கெட்ல சிக்ஸரு டாஸ்மாக்குல குவார்ட்டரு.
விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்.
குடும்பப் படமா இருந்தாலும் ஒரு கொலை விழனும்.
கலக்கல் கார்மேகம் கவிஞர்.
கண்டபடி கடுப்பை கௌப்புங்க.
நாங்களும் கொடுப்போமில்ல.
டாக்டர் பட்டம் போடுங்க சாமி.
அரசியல் காய்ச்சல் !
டெல்லிக்குப் போறோம்.. டெல்லிக்குப் போறோம்..
வாசகர் கருத்துக்கள் :

Barathi Ha..Ha...couldnt control the laugh

மணிகண்டன் உத்தம புத்திரன் அவர்களின் அனைத்து காமெடி கலாட்டாகளும் அருமையோ அருமை ...வாழ்த்துக்கள்

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5