கவுந்து போனோர் காங்கிரஸ் காரிய கமிட்டி.

கற்பனை : உத்தம புத்திரன்

"மேலிடம் முடிவு செய்யாம நாம்மாள காபி, வடை, சாப்பிட தன்னிச்சையா எப்படி போறது. "
("கவுந்துபோனோர்" காங்கிரஸ் காரிய கமிட்டி என்று வாசலில் போர்டு பார்த்துவிட்டு டென்ஷனுடன் உள்ளே வருகிறார் தங்கபாலு)

தங்கபாலு : நாசமாப்போக... உருப்புடியாகமாட்டிங்க... நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க...

நு.ஏ.மு.ளு.இளங்கோவன் : என்னாச்சி பாலு...? யாருக்கு சாபம் கொடுக்கிறீங்க...?

தங்கபாலு : சீமான் கும்பலுக்குத்தான். காங்கிரஸ் காரிய கமிட்டின்னு எழுதச்சொன்னா பிராக்கெட்ல கவுந்துபோனன்னு எழுதியிருக்காங்க...

மணிசங்கர் ஐயர் : தோத்தவங்கெல்லாம் ஒண்ணு கூடப்போறோம்னு தெரிஞ்சிதான் இப்படி எழுதியிருக்காங்க...

தங்கபாலு : அதுக்குத்தான் சுவத்துல சினிமா விளம்பரம் எழுதற ஆளை கூப்புடக் கூடாது.

நு.ஏ.மு.ளு.இளங்கோவன் : நான் மட்டும் எம்.பி. எலெக்ஷன்ல ஜெயிச்சிருந்தா தமிழ் சினிமாவுக்கே தடை விதிச்சிருப்பேன்.

மணிசங்கர் ஐயர் : ஆனாலும்... முத்துக்குமாரை யாருன்னு நீ கேட்டிருக்கக் கூடாது... அவரோட சாபம்தான் உன்னை நோக்கடிச்சிடுச்சி.

நு.ஏ.மு.ளு.இளங்கோவன் : நாம தோத்தது கூட பரவாயில்லைய்யா அவங்க ஜெயிச்சிட்டாங்களே.

தங்கபாலு : அதெல்லாம் போகட்டும்... அடுத்து யாருக்கு ஆப்பு சீவலாம் அதை சொல்லுங்க... என்னால தோத்துட்டு சும்மா இருக்க முடியில.

மணிசங்கர் ஐயர் : தமிழக ஆட்சியில பங்கு வேணும்னு பழைய குண்டையே மறுபடியும் துடைச்சிப் போடுவோம்.

தங்கபாலு : கரெக்ட்... கலைஞரும் பதவிய பையன்கிட்டு கொடுத்துட்டு நிம்மதியா இருக்கார். அவரை எப்படி நிம்மதியா இருக்க விடுறது.

நு.ஏ.மு.ளு.இளங்கோவன் : இப்படி சொல்லிட்டு நாம மதுரைப் பக்கம் போக முடியுமான்னு யோசனை பண்ணிக்குங்க... அதனால 2011னுல காமராஜ் ஆட்சின்னு சொல்லுவோம்.

தங்கபாலு : 2011-னுல விஜயகாந்துல்ல ஆட்சி அமைப்பேன்னு சொல்லியிருக்காரு... அனால நாம 2016ல் ஆட்சி அமைப்போம்.

மணிசங்கர் ஐயர் : இந்த தேர்தல்லயே விஜயகாந்த் 40க்கு நாற்பது தொகுதியும் ஜெயிச்சிருப்பாராம். "மரியாதை" படம் சரியா ஓடாததனாலதான் ஒரு தொகுதிகூட கெடைக்காமப் போச்சின்னு நடகர் வடிவேலு என்கிட்ட சொன்னார்.

நு.ஏ.மு.ளு.இளங்கோவன் : சரி... வாங்க வெளிய போயி காபி, வடை சாப்பிடுவோம்

தங்கபாலு : தமிழக காங்சிரஸ் தலைவர்ங்கிற முறையில சொல்றேன். மேலிடம் முடிவு செய்யாம நாம்மாள காபி, வடை, சாப்பிட தன்னிச்சையா எப்படி போறது. அகிலத்தையும் கட்டிக்காக்குற பிரம்மாண்ட நாயகி அன்னை சோனியாஜீ அனுமதிக்காக நாம போறது கட்சி கட்டுப்பாட்டை....

நு.ஏ.மு.ளு.இளங்கோவன் : யோவ்... வாய்யா... நானும் தலைவரா இருந்தவன்தான். ரொம்ப பயந்து சாவுறே.

தங்கபாலு : அப்போ நம்ம காரிய கமிட்டி கூட்டத்தை இத்தோட முடிச்சிக்குவோமா...?

மணிசங்கர் ஐயர் : அடிச்சிக்கிட்டு, வேஷ்டி சட்டைய கிழிச்சிக்காம நாம என்னைக்கு காரிய கமிட்டி கூட்டத்தை முடிச்சிருக்கோம்.

நு.ஏ.மு.ளு.இளங்கோவன் : மீட்டிங் முடிஞ்சதும் மிஸ்கால் கொடுக்கறேன், வந்து ஆளாளுக்கு அடிச்சிக்கிட்டு காங்கிரஸ் மானத்த காப்பாத்துங்கன்னு தொண்டர்களை தூங்கவெச்சிட்டு வந்திருக்கேன்.

தங்கபாலு : அதிருக்கட்டும். முதல்ல ஒரு அறிக்கை எழுதுவோம். அறிக்கை எழுதாம கை அரிக்குது.

மணிசங்கர் ஐயர் : பங்கு கொடு ஆட்சியில பாதி அமைச்சர் கொடு.

நு.ஏ.மு.ளு.இளங்கோவன் : முத்துகுமார் யார்? சீமான் யார்? பாரதிராஜா யார்? சினிமான்னா என்ன?

தங்கபாலு : அடுத்து காமராஜ் ஆட்சி இனி காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் பிரியங்கா காந்தி மகன்தான் தமிழக முதல்வர்.

நு.ஏ.மு.ளு.இளங்கோவன் : உலகத்தில் கட்டுக்கோப்பான கட்சி காங்கிரஸ் மட்டும்தான், சத்தியமா நம்புங்க சிரிக்காதிங்க....

மணிசங்கர் ஐயர் : இனிமே யாரும் எங்கள் மீது குதிரை ஏற முடியாது.

தங்கபாலு : பட்டாளி மக்கள் கட்சி பாழாப்போகனும்.

நு.ஏ.மு.ளு.இளங்கோவன் : பி.ஜே.பி. பிச்சிட்டு அலையனும்.

தங்கபாலு : இப்ப பேசுன நம்ம அறிக்கையை டைப் பண்ணி பத்திரிக்கைக்கு கொடுத்துடலாம் வாங்க...

அப்போது உள்ளே ஒரு கும்பல் நுழைந்து உள்ளே இருக்கும் சேர், டேபிள், ட்யூப்லைட்களை உடைக்க.

தங்கபாலு : (புன்னகைத்தபடி) அதுக்குள்ள தொண்டர்களை வரச் சொல்லிட்டியா... இளங்கோ... என்னமா அடிச்சி உடைக்கிறாங்க... நம் ஆளுங்க சூப்பர் (அப்போது ஒருவன் ஓடிவந்து தங்கபாலு வேட்டியை உருவுகிறான்.

தங்கபாலு : (பதரியபடி) டேய் கட்சி தொண்டா... தலைவன் வேட்டியவே உருவுரியா...

ஒருவன் : யோப்... நாங்க உங்க கட்சி தொண்டன் இல்ல.. "கள்" இறக்குவோர் சங்கத்தோட ஆளுங்க.

(என்றதும் மூவரும் ஐயய்யோ என்று அலறியபடி வேட்டியை கெட்டியாக பிடித்துக்கொண்டு ஆளுக்கொரு பக்கம் ஓடுகின்றனர்

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5