குடும்பப் படமா இருந்தாலும் ஒரு கொலை விழனும்...

கற்பனை : உத்தம புத்திரன்



(மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சினிமாவில் பலாத்காரம், கொலை போன்ற காட்சிகளால் இளைய சமுதாயம் கெட்டுப்போகிறது என காரணம் காட்டி, அந்த காட்சிகளை காட்ட தடை விதிக்க வேண்டுமென்றார். அதனால் ஆத்திரமடைந்த வில்லன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பொன்னம்பலம், மன்சூர் அலிகான், ‘பெப்ஸி’ விஜயன் ஆகியோர் ரகசியமாக கூட்டம் போடுகின்றனர்).

பொன்னம்பலம் : என்னங்கடா, இது ரொம்ப அநியாயமா இருக்குது... நாட்டுல நடக்கறதைதானே காட்டுறோம்.

விஜயன் : நாமெல்லாம் கற்பழிக்கலேன்னா ஹீரோங்களுக்கு ஏது வேலை?

மன்சூர் : வில்லதனம் பண்ற நமக்கே வில்லங்கமா ... ஆமா நம்ம சங்கக் தலைவர் பிரகாஷ் ராஜை எங்க காணோம்

பிரகாஷ்ராஜ் : (ஸகையை ஆட்டிபடி உள்ளே வருகிறார்) ஹாய் செல்லம்.. ஸாரி கொஞ்சம் லேட்டு.. ஏ.வி.எம்ல என்பது லட்ச ரூபாய் செட்டு போட்டு கற்பழிக்கிற காட்சி எடுத்தாங்க.. ரொம்ப ‘ரீடெக்’ எடுத்துக்கிட்டதால நேரமாயிடுச்சி.

பொன்னம்பலம் : இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும் பிரகாஷ்.. முன்ன தம்மு, தண்ணியடிக்கற மாதிரி காட்டக்கூடாதுன்னு சொன்னாங்க.. சுவிங்கம் வெச்சி மேட்ச் பண்ணிட்டோம்.

மன்சூர் : அப்புறம், தெருவுல ஓடற நாயா இருந்தாலும் படத்துல தெரிஞ்சா ஓனர்கிட்ட ஒப்புதல் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க..

விஜயன் : இப்போ இது.. ! இப்படியே விட்டா வில்லன் நடிகருங்க எல்லாம் வெறகு உடைக்கத்தான் போயாகனும் அதுவும் சினிமாவுல கொலை பண்ணக்கூடாதுன்னு சொன்னா.. தமிழ் சினிமா தடுமாறி தட்டு ஏந்தர நிலைக்கு வந்துடும்.

பிரகாஷ்ராஜ் : டைரக்டர் ஹரி, பேரரசு, மிஸ்கின் எல்லாம் பட்ஜெட்ல சிவப்பு சாயம் வாங்கறதைத்தான முதல்ல எழுதறாங்க. அதுவுமில்லாம வில்லனா நடிக்கறதால கிராமத்து பக்கம் ஷுட்டிங்க போனா.. கிழவிங்க காரித்துப்புறாங்க.. தொடைச்சி தூரப்போட்டுட்டு வர்றோம்.

மன்சூர் : ‘கேப்டன் பிரபாகரனுக்கு அப்புறம் என்னை யாரும் மனுஷனாவே மதிக்கறதில்லை.

பொன்னம்பலம் : சினிமாவுல மட்டும் சொல்றாங்களே.. டி.வி.தொடர்ல ஒருத்தி மூனு வருஷமா முழுகாமலே இருக்காளே.. அது மனசைக் கெடுக்காதா..

விஜயன் : அண்ணன் பொண்டாட்டிய தம்பியும், ஒருத்தி நாலு பேரை காதலிக்கற மாதிரியும், இவ தாலிய அறுக்னும்னு அவளும், அவ தலையில இடி எறங்கணும்னு இன்னொருத்தியும் சாபம் விடற மாதிரி காட்றாங்களே அது தப்பில்லையா.

பிரகாஷ் : இப்படியே விட்டா.. வில்லன் வேற ஒரு ஊர்ல இருந்துகிட்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலமாத்தான் கன்னிப் பொண்ண கற்பழிக்க முடியும்.

பொன்னம்பலம் : குடும்பப் படமா இருந்தாலும் ஒரு கொலை விழாதான்னு எதிர்பார்ப்போட மக்கள் வர்றாங்க. அவங்க மனசுல குப்பைய அள்ளிக் கொட்டலாமா?

மன்சூர் : சரி.. இப்படியே விஜயகாந்த் மாதிரி நாலு "ரீல்" வசனமாவே பேசிக்கிட்டிருந்தா எப்படி..? அடுத்து ஆகவேட்டியதை சொல்லுங்க? கன்னடத்துல ஒரு கற்பழிப்புக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன்.

பிரகாஷ்ராஜ் : டெல்லி கோட்டை முன்னாடி ஒரு கூட்டம் போடுவோம். கூட்டம் கூடறதுக்கு நமிதாவையும், ரகஸியாவையும் விட்டு ஒரு குத்தாட்டம் ஆடுவோம்.

மன்சூர் : சூப்பர் ஐடியா.. ஆனா ரெண்டு நடிகைங்களையும் டெல்லிக்கு என் கூடத்தான் அனுப்பணும் அப்பத்தான் பயப்படாம பாதுகாப்பா வருவாங்க.

விஜயன் : அதை அப்புறம் பாத்துக்குவோம். முதல்ல சினிமாவுல கற்பழிச்சவன், கையப்புடிச்சி இழுத்தவன், கண்ணடிச்சவன், சேட்டை பண்ணி செருப்படி வாங்கின எல்லா வில்லன்களையும் கூப்புடுவோம்.

பிரகாஷ்ராஜ் : போறது.. சரி.. இதுக்கெல்லாம் செலவு யார் செய்யறது?

பொன்னம்பலம் : அண்ணன் ஜே.கே. ரித்தீஸ் அங்கதான இருக்காரு. அவரைப் பார்த்து, டெல்லிக்கு கைல காசில்லாம கால்நடையா வந்தோம்னு சொன்ன. சொந்த செலவுல ஒரு ‘ப்ளைட்’ வாங்கித் தருவாரு அதுல வந்துடுவோம்.

பிரகாஷ்ராஜ் : பின்னிட்டே பொன்னம்பலம். அப்படின்னா நமிதாவையும், ரகஸியாவையும் நீங்க வெச்சிக்கங்க.. ‘பிளைட்டை நான் வெச்சிக்கிறேன்’

விஜயன் : இதெல்லாம் முடியாது. பிளைட்டை நாலு பங்கா போடுங்க.

பிரகாஷ்ராஜ் : ஏய்.. ஏய்.. லூசா மேன் நீ..? ப்ளைட் என்ன ‘பீட்ஸா வா பங்கு போட?

மன்சூர் : அதெல்லாம் முடியாது.. பங்கு போட்டே ஆகனும்.

பொன்னம்பலம் : இங்க பாருங்க.. நான்தான் இங்க ரொம்ப சீனியர் நான் சொல்றபடி கேளுங்க.

விஜயன் : இல்லை நான்தான்.. வாய்ப்பு சரியா கொடைக்கலையேத் தவிர ரொம்ப வருஷமா சினிமாவுல இருக்கேன்.

மன்சூர் : நான் புலி மாதிரி தாவித்தாவி நெறைய படத்துல சண்டைப் போட்டிருக்கேன்.

பிரகாஷ்ராஜ் : நீ புலின்னா நான் சிங்கம். வா.வ்.வ் (சிங்கம் போல் கர்ஜனை செய்கிறார்)

மன்சூர் : கர்ஜனை பண்ணாம வாந்தி எடுக்கற? எத்தனை மாசம். (என்றதும் கடுப்பான பிரகாஷ்ராஜ் மன்சூர் விஜயன் மேல் விழ, பொன்னம்பலம் பறந்து வந்து விஜயனை உதைக்க, நான்கு பேரும் ஸ்டன்ட் மாஸ்டரும், ரோப்பும் இல்லாமல் அடித்துக் கொண்டிருக்கும் போது, இன்ஸ்பெக்டர், சில கான்ஸ்டபிள் உள்ளே வருகின்றனர்)

பிரகாஷ்ராஜ் : வந்துட்டாங்கப்பா.. வில்லன் சண்டைப் போட அரும்பிச்சாலே போலீஸ் வேஷம் போடற ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் வந்துடறாங்க.

இன்ஸ்பெக்டர் : (தொப்பையைக்காட்டி) போய்வ்.. நாங்க நிஜ போலீஸ். வயித்தைப் பாருங்க. உங்களை கைது பண்ண வந்திருக்கோம்.

பொன்னம்பலம் : கைதா.. எதுக்கு?

இன்ஸ்பெக்டர் : இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசினதால இ.பி.கோ.. எழுநூற்று எண்பத்தி.. ஏதோ ஒரு சட்டத்துல கைது பண்ணச் சொல்லி மேலிடத்து உத்தரவு...

பிரகாஷ்ராஜ் : அப்படி எதுவும் பேசிலையே சார்..

இன்ஸ்பெக்டர் : புலின்னு விடுதலைப்புலிய பத்திதானே பேசினிங்க?

விஜயன் : ஐயய்யோ.. நால்வரும் கதறக், கதற அதற்கு மேல் எதுவும் பேசவிடாமலே தள்ளிக் கொண்டு போய் ஜீப்பில் ஏற்ற, ஆளாளுக்கு முறைத்துக் கொண்டே செல்கின்றனர்.

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5