கலக்கல் கார்மேகம் கவிஞர்...
கற்பனை : உத்தம புத்திரன்
கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி சினிமாவுக்கு பாட்டு எழுதுவதால்
அவருக்கு வைரமுத்து பாடம் நடத்துகிறார்.
வைரமுத்து : மகனே மதன்! பாட்டு எழுதவது முக்கியமல்ல, கம்பெனியில் காசு வாங்குவதுதான் முக்கியம் , பாடல் எப்போதும் வரும்
... பணம் அப்படியல்ல..
கார்கி : அப்பா எங்கிட்ட கூட மேடையில பேசற மாதிரி பேசுகிறிங்களே, !
வைரமுத்து : ஓ.... ஸாரி மை டியர். இங்க பாருப்பா.... பாட்டு எழுதறதுக்கு முன்னாடி மூளை நமுத்துப் போன திரியா இருந்தாலும், எழுத உட்காந்துட்டா சரவெடியா வெடிக்கனும்.
கார்கி : எந்த டைரக்டரா இருந்தாலும் மூளைய கசக்கிப் பிழிஞ்சி எழுதனுமா.... ?
வைரமுத்து : தேவையில்லப்பா கம்பெனி பேரு... இயக்குனர் யாரு ... இசை யாரு... குறிப்பா ஷங்கர், மணிரத்னம் படம்னா ரெண்டு வேளை திங்காதே ... ஒரு வாரம் தூங்கதே ... பாட்டு எழுது.
கார்கி : புது கம்பெனி, புதிய இயக்குனர்னா ...?
வைரமுத்து : ஒரு மணி நேரத்துக்கு மேல உட்காராதே ... இது தான் அப்பாவோட பாலிஸி.
கார்கி : எம்ப்பா ... சில கம்பெனியில எழுதி வாங்கிட்டு காசு தரமாட்டேங்கிறாங்களே ...
வைரமுத்து : உஷாரா இருக்கனும். ஊதியம் வாந்தாத்தான் கை உதறல் இல்லாம எழுத முடியும் சொல்லு. நோட்டப் பாத்தாத்தான் பாட்டு வரும்னு கண்டிஷன் போடு.
கார்கி : அப்பப்போ ... கவிதையும் வருதப்பா ... எழுதலாமா ...?
வைரமுத்து : கவிதை எழுகறது முக்கியமில்ல அதை காசாக்கற வித்தை தெரிஞ்சிருக்கனும். வெளிநாட்ல நீ இருக்கும் போது நான் உனக்கு எழுதின கடிதத்தை கூட பத்திரைக்கைல கொடுத்து எப்படி பணமாக்குனேன்னு பாத்தியா ...
கார்கி : சில ட்யூன் புடிபடாம இருக்கு ...என்ன எழுதிறதுன்னு குழப்பமா இருக்கே ...
வைரமுத்து : சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணியிலேர்ந்து ... சிற்றிகழ்கள் வரைக்கும் ஆழ்ந்து படி. அதுலேர்ந்து அடி. அப்புறம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்.முடிஞ்ச வரைக்கும் படத்தோட மொத்த பாட்டையும் கேளு. சன்மானத்த விட்டுக்கொடு தன்மானத்தை விட்டுத் கொடுத்துடாதே.
கார்கி : அப்புறம்ப்பா... உங்களோட சில பாடல்ல கொழம்பு எப்படி வைக்கிறதுன்னெல்லாம் பெண்கள் பழகிக்கிறாங்கிளாம்.
வைரமுத்து : ஒ ...ஹா...ஹா... அதுவா...உப்புக் கருவாடு ஊறவச்ச சோறுன்னும், உச்சிகருவாடு உடம்புக்கு நல்லதுன்னும்,. ஒத்த பனைமரக்கள்ளு உடம்புக்கு நல்லதுனு அப்பப்போ சமையல் குறிப்புகளை எழுதனும், பெண்கள் மனசுல இடம்புடிக்கனும்.
கார்கி : ஒரு படத்துல வாய்ப்பு கொடுத்த இயக்குனர் தொடர்ந்து உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறாரே எப்படி...?
வைரமுத்து : க்ரைன் ...ஸாரி ப்ரைன்டா மகனை ... அது இயக்குனருக்கு , ஹூரோவுக்கும் வெக்கிற "ஐஸ்" னாலதான். கேசட் வெளியீட்டு விழா எதுக்கு வைக்கிறாங்க . பாட்டை விஷீவலா பார்துத்துட்டு ‘மொக்கையா’ இருந்தாலும் பேஷ் ... பேஷ்னு பாராட்டு
, உலக சினிமா வரலாறுல இப்படி ஒரு பாடல்காட்சிகளைப் பார்த்ததில்லென்னு கேரளா ஜால்ரா மாதிரி சத்தம் வர பேசு...
கார்கி : அப்படி பேசறது கூச்சமா இருக்காதாப்பா...
வைரமுத்து : கூச்சத்த நான் பாத்திருந்தேன்னா ஆறாவது படத்துலயே உங்கொப்பன் ஆடு மேய்கத்தான் போயிருக்கனும். அப்புறம் இன்னொரு விஷயம்... பாட்டு மட்டுமே எழுதி பொழப்பு நடத்தனும்னு நெனச்சேன்னா நொந்து நூலாகி வெந்து வெதையா கருகிப்போயிடுவே, சோத்துக்கு வழிபண்ணிக்கிட்டு பாட்டெழுத வா.
கார்கி : எனக்கொரு சின்ன சந்தேகம். இவ்ளோ படங்களுக்கு பாட்டெழுதின நீங்க ஏன் சொந்தமா படம் தயாரிச்சி இயக்கல...
வைரமுத்து : ஊர்ல ஒரு பழமொழி இருக்கு தெரியுமா...? நல்ல வாயன் சம்பாதிச்சி நார வாயன் தின்ன மாதிரின்னு. பாட்டெழுத வந்தது புத்திசாலித்தனம்னா... படம் எடுக்க நெணக்கறது முட்டாள்தனம்.
கார்கி :அப்புறம் இன்னொரு ஆசை இருக்குப்பா பாட்டெழுதி பெரிய மனுஷன் ஆனதும் அரசியலுக்கு போகனும்னு இருக்கேன்.
வைரமுத்து : அப்படின்னா இப்ப இருந்தே... கவுக்கிற மேட்டரை ஆரம்பி. கலைஞர் மூக்கு கண்ணாடி மாத்தினாலும் ‘டப்புன்னு’ ஒரு கவிதை தட்டிவிட்டு.
கார்கி : ‘மூக்கு கண்ணாடிக்கெல்லாம் எப்படிப்பா... எழுதறது...?
வைரமுத்து : ‘மூக்கு கண்ணாடியால் உனக்கழகு என்றிருந்தேன் தலைவா... இல்லை நீ போட்டதால் அந்த பெல்ஜியமே அழகாய் தெரிகிறது தெய்வமே’ இப்படித்தான் புரிஞ்சுதா...? அப்புறம் உன் காலத்தில ஸ்டாலின் மகன் உதயநிதிதான் சி.எம்.மா வருவாரு அதனால அவர் மனசுல நிக்கற மாதிரி கவிதை எழுதி அனுப்பு.
கார்கி : அப்பா.. உடனே எனக்கொரு கவிதை எழுனுதுப்பா சொல்லட்டா...?
வைரமுத்து : சொல்லு... சொல்லு... கவிதையான்னு பாக்கிறேன்.
கார்கி : ஒ... உதய நிதியே... அறிவில் நீ ஓடும் நிதியே... படம் எடுக்கிறாயே பாட்டெழுத வரவா...? எப்படிப்பா...?
வைரமுத்து : கவிதை மாதிரி இல்லை. வாய்ப்பு கேக்சிற மாதிரி இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை.
[அப்போது போன் வருகிறது. மணிரத்னம் பேசுகிறார்]
மணிரத்னம் : ஹலோ..."கலக்கல் கார்மேகக் கவிஞர்" கார்கி இருக்காரா...?
வைரமுத்து : மணி... நான் கார்க்கி இல்ல. வைரமுத்து பேசறேன். ‘இரவணன்’ படத்துக்கு பாட்டு எழுகனுமா உடனேவார்றேன்.
மணிரத்னம் : நீங்க வேணாம் கார்கி போதும்.
வைரமுத்து : [கோபமுடன் போன வைத்துவிட்டு ] என்னடா இதெல்லாம் கார்மேகக் கவிஞர் பட்டம், பாட்டெழுத உன்னை கூப்புடுறாங்க.
கார்கி : ஸஸ்டைலாக பட்டத்தை பேருக்கு முன்னால ‘பஞ்ச்’ பண்ணிட்டேன்.
வைரமுத்து : ‘இரவணன்’ படத்துல ஒரு பாட்டு எழுகற உனக்கே இவ்வளவு திமிர்னா... அஞ்சு பாட்டு எழுதற எனக்கு எவ்வளவு இருக்கும்.
கார்கி : ஸாரி டாடி. நீங்க சொன்ன மாதிரியே... நடந்துக்க தீர்மானம் பண்ணிட்டேன்.
வைரமுத்து : புரியாமல் என்னப்பா சொல்றே...?
கார்கி :மணி சார் படத்துல மொத்த பாட்டையும் நானே வாங்கிட்டேன், முதல் ஆப்பு உங்களுக்கே வெச்சிட்டேன். [என்றதும் அடப்பாவி... மொத்த பாட்டும் போச்சா?’ என்றபடி மயங்கி தரையில் அமர்கிறார்.]