கண்டபடி கடுப்பை கௌப்புங்க.
கற்பனை : உத்தம புத்திரன்
தமிழக சட்டசபைக் கூட்டம் நடைபெற்றுக் வருவதால் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஜெயலலிதா தலைமையில் கூடி விவாதிக்கின்றனர்.
ஜெயலலிதா : என இனிய சண்டைக் கோழிகளே.. கோக்குமாக்காகப் பேசும் கட்சியின் கூட்டாளிகளே.. வணக்கம்
ஆதி. ராஜாராம் : உலகத்தை ஒற்றை விரலில் சுமக்கும் ஒப்பற்ற தாய் வாழ்க, ஒன்பது ஒசாமா நீ, என்பது எலிசபெத் நீ.....
ஜெயக்குமார் : (அனிதா ராதாகிருஷ்ணன் காதில்) யோவ் ஆதி தனி ஆவர்தனம் ஆரம்பிச்சிட்டார் நாம ஏதாச்சு தட்டலேன்னா ஆபத்தாயிடும் வாசிப்போம் வர்றியா...?
ஜெயலலிதா : அங்க யாரு கட்சி கட்டுப்பாட்டை மீறி ரெண்டு பேர் பேசிக்கிறது.
ஜெயக்குமார் : வந்தும்மா.. சட்டசபையில இன்னைக்கு கலைஞருக்கு எந்த வகையில கொடைச்சல் கொடுக்கலாம்னு டிஸ்கஷன் பண்ணிட்டு இருந்தோம்.
ஜெயலலிதா : வெரிகுட்.. வெரிகுட்.. நாம ஏன் தோத்தோம். கட்சிய எப்படி காப்பாத்தப் போறோங்கறதை விட ஆளுங் கட்சியோட நிம்மதிய எப்படி கெடுக்கறது.. குறிப்பா கருணாநிதிய எப்படி தூங்கவிடாம செய்யப்போறோம்ங்கறதுதான் ரொம்ப முக்கியம்.
சேகர் பாபு ; அதுக்கு முன்னாடி இந்த காமடியன் எஸ்.வி.சேகரை கொஞ்சம் கண்டிச்சு வைங்கம்மா. நாம கொடுத்த மரத்துல நமக்கே ஆப்பு செஞ்சி வைக்கிறாரு.
ஜெயலலிதா : இருக்கட்டும் விடுங்க. ஹீரோவா நீங்க எவ்வளவு பேர் இருக்கீங்க. ஒரு காமெடியனாச்சும் இருந்தாத்தான் கலை கட்டும். அதுவும் நான்தான் அவங்களுக்கு ஆதரவா பேசி, அவங்க ரகசிங்களை தெரிஞ்சுக்க அனுப்பிச்சிருக்கேன்.
ஜெயக்குமார் : ஆஹா.. உளவுக்கே உளவு.. பார்த்து வர ஆளனுப்பிய உத்தம தாயே... உன்னை...
ஜெயலலிதா : ம்.. நிப்பாட்டு.. இதெல்லாம் சட்டசபையில வெச்சுக்க.. அடுத்து யாரை வம்புக்கு இழுக்கப்போறீங்க அதை சொல்..
ஓ. பன்னீர் : அம்மா.. அடிக்கடி துரைமுருகன்தான் என்கிட்ட வம்புக்கு வர்றார். அவர் பேசும்போது டேபிள் மேலே ஏறி நம்ம சேகர் பாபுவை குத்தாட்டம் ஆடச்சொல்லாம்னு இருக்கேன்.
செங்கோட்டையன் : பஸ்ல முட்டை பூச்சி ஒழிக்கறதோட சினிமா தியேட்டர்ல கொசுவை ஒழிக்க சொல்லுவோம்.
ஓ. பன்னீர் : செத்துப்போற எலிகளால நோய் பரவுது அதனால எலி பொணம் அடக்கம் பண்றதுக்காக சுடுகாடு கட்டித் தரச் சொல்லுவோம்.
ஜெயக்குமார் : அப்புறம் தலைவர்கள் தலையில காக்கா உச்சா யோயி அசிங்கம் பண்றதால ஒரு மணிக்கு ஒரு தடைவ தலைய சுத்தம் பண்ற மாதிரி ஆட்டோ மேட்டிக் கழுவும் மிஷின் வைக்கச் சொல்லுவோம்.
ஆதிராஜா : அம்மா அனுமதியோடு ஒரு போராட்டம் செய்யலாம்னு இருக்கேன்.. ரொம்ப புதுசா இருக்கும்.
ஜெயலலிதா : கருணாநிதியின் கடுப்பை கிளப்புற எந்த போராட்டத்துக்கும் அனுமதி உண்டு.
ஆதிராஜா : கச்சைத் தீவை மீட்கும் வரை எச்சில் துப்பும் போராட்டம். அதாவது ஏதாவது ஒரு முச்சந்தியை கூட்டமா நின்று காரிக்காரித் துப்பிக்கிட்டு இருக்கனும்.
ஜெயலலிதா : பொதுமக்கள் மேல படாதமாதிரி துப்புங்க ரெண்டு வருஷத்துல தேர்தலை சந்திக்கனும்.
ஓ. பன்னீர் : படாதும்மா.. குறிபார்த்து துப்பறதுக்கு அக்கா வளர்மதிகிட்ட பயிற்சி எடுத்திருக்கோம்.
செங்கோட்டை : அதுமட்டுமில்லம்ம.. இலவசமா கொடுக்கிற டி.வி.யில வயர் சரியில்ல.. கலர் சரியில்ல பெயர் சரியில்லன்னு கொடைச்சல் கொடுத்துக்கிட்டே இருப்போம்.
ஜெயலலிதா : அப்படியே.. இப்ப வர ரசாயனம் சரியில்ல,, உரம் சரியில்லன்னு பேசிப் பாருங்களேன்.
செங்கோட்டை : ஐயோ.. அம்மா.. அது மட்டும் வேணாம். அழகிரியோட இலாக்கா. மதுரையில மழைக்காக கூட எங்கையும் ஒதுங்க முடியாத மாதிரி பொழப்பு புண்ணாயிடும்.
சேகர்பாபு : (செங்கோட்டையன் காதில்) என்னப்பா.. நீ. முடியாதுங்கற வார்த்தையே அம்மா காதுல விழக்கூடாது ஏதாச்சும் சொல்லி சமாளி.
செங்கோட்டை : அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே.. அடுத்த போராட்டம் தி.மு.க. ஆட்சியில வெயில்ல ஊழல்,
மழையில மந்தம், காத்துல கலங்கம்னு ஒரு கோஷம் போட்டு (கும்பலா வெளிநடப்பு செஞ்சிடறோம்மா..)
ஜெயலலிதா : அப்புறம்.. நம்ம கூட்டணி கட்சிங்க.. உங்கள எதிர்த்து பேசுறாங்களா..?
ஓ. பன்னீர் : எலெக் ஷன் வரப்போவுதுன்னு அவங்களுக்கு மட்டும் தெரியாத என்ன.. நாங்க எந்திரிக்கறதுக்குள்ள ம.தி.மு.கவும், பா.மா.க.வும் வாசலுக்கே வந்துடறாங்க.. பாவம் வாயில்லாப் பூச்சிங்க. ஆளுக்கு ரெண்டு சீட் சேர்த்து கொடுதுடுங்கம்மா.
ஜெயலலிதா : அப்புறம்.. இந்த ஒரு ரூபா அரிசியப் பத்தி மக்கள் என்ன பேசிக்கிறாங்க?
ஜெயக்குமார் : அவங்க என்ன பேசிக்கிட்டா நமக்கென்னம்மா புழுவையும், பூச்சியும் புடிச்சிக்கிட்டு வந்தாவது ஒரு ரூபா அரியில போட்டு நம்ம சேனல்ல நிமிஷத்துக்கு ரெண்டு தடைவன்னு போட்டுப் போட்டுக் காட்டி போரடிக்க வெச்சிடுவோமே..
ஜெயலலிதா : துணை முதல்வரையும்ஜெயலலிதா : துணை முதல்வரையும் சும்மா விடாதுங்க.. குட்டைய குச்சியால கிண்டற மாதிரி கிண்டிக்கிட்டே இருக்கணும்.
ஆதிராஜா : பாலம் ஊழல், ரோடு ஊழல், மணல் ஊழல்ன்னு எல்லாம் பேசியாச்சி வேற பேசறதுக்கு என்ன இருக்குன்னே தெரியலையே..
அப்படியெல்லாம் சும்மா இருக்கக் கூடாது. புதுசா புதுசா குற்றம் கண்டுபிடிச்சிக்கிட்டே இருக்கணும் அப்பத்தான் அரசியல் பண்ண முடியும் நாம யாருக்கும் பயப்படக்கூடாது. தைரியமா கட்சி நடத்தனும் (அப்போது ஓ. பன்னீர் செல்வத்துக்கு போன் வருகிறது எடுத்து பேசிவிட்டு)
ஓ. பன்னீர் : அம்மா வெளிய நடிகர் கார்த்திக் காத்துட்டு இருக்கார்.
ஜெயலலிதா : ஐயய்யோ எதுக்காம்.
ஓ. பன்னீர் : அவர் கட்சிய வெலைக்கு விக்கிறாராம். வேணுமான்னு கேக்க வந்திருக்கார்.
ஜெயலலிதா : (அதிர்ச்சியுடன்) அவர் கட்சிய சேத்துக்கிட்டா இருக்கிற நம்ம இமேஜும் காலியாயிடும், பின்பக்க வாசல் வழியா ஓடுங்க.. ஓடுங்க.. (என்றபடி வேகமாக பின்பக்கம் இருந்த காரில் ஏறிச் செல்கிறார்.