Page last updated at Monday, October 09, 2009 at 10:17:28 PM IST
விருது வாங்கலையோ விருது.. விருது....
கற்பனை: உத்தமபுத்திரன்.
(வடிவேலு அலுவலகத்தில் முத்துக்காளை, போண்டா மணி, அல்வா வாசு, சிங்கமுத்து ஆகியோர் சோகமுடன் அமர்ந்திருக்க, வடிவேல் உற்சாகத்துடன் விசிலடித்தபடி வருகிறார்).
சிங்கமுத்து : தம்பி.. நாங்க நொந்து நூலாகி.. வெந்து வெறகாகிக் கெடக்கறப்ப.. உங்களால எப்படி... பிகிலு அடிக்க முடியுது?
வடிவேலு : தமிழக அரசு சிறந்த நகைச்சுவை விருது கொடுத்திருக்காங்க அந்த சந்தோஷத்துல இருக்கேன்.. உங்களுக்கு எதுக்கு ஃபீலிங்?
போன்டாமணி : இருக்காதா பின்ன.. சிறந்த ஹீரோ விருது உங்களுக்கு கெடைக்கும்னு எவ்வளவு ஆசையா இருந்தோம்.. ஆசையில ஆயில் ஊத்தி எரிச்சிட்டாங்க.
வடிவேலு : எனக்கா.. எதுக்கு?
முத்துக்காளை : இம்சை அரசன்லையும், இந்திரலோகத்து அழகப்பன் படத்துலயும் கலக்கியிருப்பீங்களே அதுக்கு கொடுக்காம ரஜினிக்கும்-கமலுக்கும் கொடுத்துப்புட்டாங்களே..
வடிவேலு : (பதறியபடி) ஐயய்யோ.. கவுந்துபோகாமா போயிட்டிருக்க கட்டவண்டி வாழ்க்கைல ஆப்பை பிடிங்கி.. அநியாயமா குழிவெட்டி, கும்மியடிச்சிட்டு போயிடாதீங்கடா.. உங்கள கூட வெச்சிருந்தது தப்பாடா..
அல்வா வாசு : சும்மா இருங்க பாஸ்.. உங்க நடிப்புக்கு ஆஸ்கர் கெடைக்கலையேன்னு ஒரு வாரம் ரூம் போட்டு அழுதோம் தெரியுமா!
வடிவேலு : கொய்யால.. அதுவும் எங்காசுல தாண்டா ரூம் போட்டீங்க.. சரி அதுக்கு இப்ப என்னதால் செய்யச் சொல்றீங்க.
போன்டா மணி : நேரா கலைஞர் ஐயாகிட்ட போயி நியாயம் கேட்டோம் பூம்புகாருக்கு வசனம் எழுதியவராச்சே.. நீதி கெடைக்கும்.
முத்துக்காளை : ஆமா.. தல.. உங்கள வெச்சி காமெடி பண்ணின தலைவரை சந்திப்போம். இப்ப அறிவிச்ச லிஸ்ட்டை மாத்தச் சொல்லி கேட்போம் உங்களுக்கு ஹீரோ விருது கெடைக்கபோராடுவோம்.
அல்வா வாசு : ஆமாங்க.. எனக்கு கூட நெறைய பேருக்கு விருது கொடுத்தது பிடிக்கலை.
வடிவேலு : அவங்க விருது யாருக்கு வேணாலும் கொடுப்பார், நாம கேட்க முடியாது.
சிங்கமுத்து : தம்பி.. உங்க பவர் உங்களுக்குத் தெரியலை. நீங்க ஒரு நடிப்பு.. நாட்டாம.. கலைகளின் களஞ்சியம்.. விருதுகளின் வெள்ளாம..
வடிவேலு : நிப்பாட்டு.. ரைம்மிங்கா.. பேசி டைமிங்குல சிக்க வெச்சிடுவிங்களோன்னு பயமா இருக்கு எப்படியோ சிங்களில் டீ க்கு சிங்கியடிக்க வைக்காம போக மாட்டிங்கன்னு நெனைக்கிறேன்.
போன்டாமணி : அதில்லண்ணே.. தங்கர் பச்சானுக்கு விருது கொடுக்கும் போது.. நம்ம மச்சான் கிரேன் மனோகருக்கு ஒரு விருது கொடுக்க கூடாதா..
அல்வா வாசு : அதாவது பரவாயில்லீங்க.. கேப்டன் விஜயகாந்துக்கு ஒரு விருது கொடுத்தா கொறைஞ்சா போயிடும் அவருக்கு ஹீரோவும், உங்களுக்கு வில்லன் விருதும் கொடுத்திருக்கணும்.
வடிவேலு : (கோபமுடன்) டேய்.. ராஸ்கல் எதோட எதை முடிச்சுப் போடறே.. மறுபடியும் சண்டை மூட்டி விடுறியா.. இங்க பாருடா.. விருது கெடைக்ணும்னா நல்லா நடிச்சா மட்டும் போதாது. கலைஞர் கட்சிக்காரங்களுக்கு பிடிச்ச மாதிரியும் நடந்துக்கணும்.
அல்வா வாசு : நெசமாவா பாஸ். சொல்றீங்க?
வடிவேலு : (போன்டா மணி தலையில் கை வைத்து) இவங்கம்மா சத்தியமா சொல்றேன்.
முத்துக்காளை : அப்படின்னா கட்சிக்காரங்களை எங்க கண்டாலும் வணக்கம் வைக்கணுமா?
வடிவேலு : ஆமான்டா.. ஆமா. அவங்க பார்த்து யாருக்கு வேணாலும் விருது கொடுக்கலாம்.. இல்லேன்னா.. அவங்களே கூட வெச்சிக்கலாம்.
சிங்கமுத்து : அதெப்படி அவங்களே வெச்சிக்க முடியும்?
வடிவேலு : (சிங்கமுத்து காதில்) ஏன் முடியாது சிறந்த வசனகர்த்தா விருதை அவர் வாங்கலை?
அல்வா வாசு : யாரு கொடுத்தா அவருக்கு?
வடிவேலு : கொடுப்பாங்களா.. எடுத்துக்க வேண்டியதுதான். இப்போ அண்ணா விருதை கலைஞயர் வாங்கினார். கலைஞர் விருதை ஸ்டாலின் வாங்கினார். அடுத்து ஸ்டாலின் விருதை கனிமொழி வாங்குவார். கனிமொழி விருது ஸ்டாலின் பேரனுக்கு கொடுப்பாங்க. இப்படி இருக்கிற எல்லா விருதையும் நேந்தி நெரவி வெச்சிக்க வேண்டியதுதான்.
போன்டாமணி : (கவலையுடன்) அப்படின்னா எந்த காலத்துக்கும் எங்களுக்கு விருதே கிடைக்காதா?
வடிவேலு : கெடைக்கும் ஆனா நான் சொல்றபடி செய்யணும்.
முத்துக்காளை : கலைஞர் கால்ல விழுந்து கட்சியில சேர்ந்துடணுமா?
வடிவேலு : அதைவிட ரொம்ப சிம்பிள். இனிமே உம்பேரு முத்துக்காளை இல்ல முத்துநிதி. சிங்கமுத்து இனிமே சிங்க நிதி. போன்டாமணி இனிமே போண்டா நிதி. அல்வா வாசுக்கு பதிலா அல்வா நிதி. இப்படி உங்க பேர்களை மாத்திக்கிட்டா எல்லா விருதும் உங்களுக்குத்தான். (அப்போது சில முரட்டு ஆட்கள் உள்ளே வருகின்றனர்).
ஒருவன் : யோவ்.. இங்க யார் யாரெல்லாம் ‘நிதி’ன்னு முடியற மாதிரி பேரை மாத்திக்கிட்டவங்க.
வடிவேலு : நான் சொல்லல உடனே விருது கிடைக்கனும்னு வரிசையா வந்துட்டாங்க, வாங்கிக்கீங்க.. ஆமா நீங்கெல்லாம் எங்கேர்ந்து வர்றீங்க?
ஒருவன் : மதுலையிலேர்ந்து அண்ணன் சிவகிரி ஆபீஸ்லேர்ந்து வர்றோம். விருதுதானே வேணும் கதவை சாத்துங்கடா.. (என்றதும் கதவை சாத்திவிட்டு அனைவரையும் உருட்டுக் கட்டையால் அடிக்க..) ‘ஐயோ.. அம்மா..’ என அலறியபடி நடிகர்கள் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து விழுகின்றனர்.
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :
ADVERTISEMENT