Page last updated at Monday, October 27, 2009 at 10:17:28 PM IST


கர்ச்சீப்பில் கண்ணீரைத் துடைப்போம்
கற்பனை: உத்தமபுத்திரன்.



தமிழக எம்.பி.கள் குழு இலங்கைக்கு சென்று வர தங்களையும் கூட்டிச் செல்லவில்லை என்ற கடுப்பில் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோர் வைகோ வீட்டில் கூடி விவாதிக்கின்றனர்.

வைகோ : (ஆவேசமாக) கொதிக்கிறது ரத்தம், குமுறுகிறது நெஞ்சம் கிடுகிடுக்கிறது கிட்னி, இடிஇடிக்கிறது ஈரல்.

ராமதாஸ் : க்கும்.... ஆரம்பிச்சுட்டார்யா அழுவறதுக்கு...

விஜயகாந்த் : அண்ணே இருக்கிறது மூணுபேர் எதுக்கு மீட்டிங் .. பீலிங்..?

வைகோ : ஸாரி இலங்கை தமிழனை நினைத்தால் பொங்கிவிடுகிறேன்.

ராமதாஸ் : கோலி சோடா மாதிரி ஒரு குண்டைப் போட்டு அடக்குங்க. அப்புறம் இலங்கைக்கு எப்ப , எப்படி போறோம் அதை பத்தி யோசிப்போம்.

விஜயகாந்த் : இலங்கை தமிழர்களை பார்க்கப் போறதை விட்டுட்டு கனடா இலங்கைத் தமிழர்களைப் போய் பார்த்தா என்ன..?

ராமதாஸ் : ஏன் படகுல வர்றதுக்கு பயமா இருக்கா? சினிமாவுல மட்டும் மூச்சவிடாம பல்லைக்கடிச்சிகிட்டு ‘பன்ஞ்’ டயலாக்கா பேசுறே.. இலங்கைன்னதும்.. பயந்துட்டியா...?

விஜயகாந்த் : அது யாரோ எழுதிக் கொடுக்கறது. காசு வேற கொடுக்கறாங்க.

ராமதாஸ் : அப்புறம்.. ரொம்ப முக்கியமான விஷயம். இந்த எம்.பி குழு மாதிரி சால்வ போடறது, பொக்கே கொடுக்கிறது, மேளம்தாளம் முழங்க மாப்பிள்ளை ஊர்வலம் மாதிரி போகக்கூடாது. நாமபோறது இலங்கை தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க

விஜயகாந்த் : தெரியும் அதான் சினிமா காஸ்ட்யூமர்ட்ட சொல்லி ஆளுக்கு ஆயிரம் கர்சீப் ரெடி பண்ண சொல்லிட்டேன்.

வைகோ : கர்சீப்பா... எதுக்கு..? அதுவும் ஆயிரம் கணக்குல..?

விஜய்காந்த் : அவ்வளவு பேர் கண்ணணீரையும் கையாலேவா துடைக்க முடியும் , அதுக்குத்தான் கர்சீப்.

ராமதாஸ் : வெரிகுட்.. வெரிகுட்.. அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம். நாம் போறது ரொம்ப ரகசியமா இருக்கணும். கலைஞருக்குத் தெரிஞ்சா கடுப்பாகி உள்ளத் தூக்கிப் போட்ருவாரு..

வைகோ : யாருக்கும் தெரியாம நான் கூட்டிட்டுப் போறேன் பொழக்கடைக்கு போறமாதிரி இலங்கைக்கு அடிக்கடி போயிட்டு வருவேன்.மீன்வர்கள் கெட்டப்புல லுங்கியில போலாம்.

ராமதாஸ் : பலே கில்லாடிப்பா..நீ.. அப்புறம் அந்த எம்.பி. குழு தலைவர் டி.ஆர்.பாலு மாதிரி அங்க போகாதே, கேள்வி கேக்காதே.. மகிந்தாவை முறைக்காதே கோத்தபயாவை சைடுல பாக்காதேன்னு டார்ச்சர் நம்மகிட்ட இருக்கக் கூடாது, எந்த முகாமுக்கும், யார்ட்ட வேணாலும் பேசணும் ஓகே..

வைகோ : ஆமா,ஆமா.. அங்க ஒரு காலேஜ் பையன் ராமாயணத் துல இலங்கைக்கு அனுமான் படையோட வந்தான்.ஆனா இந்த எம்.பி. குழுவோட ஒரு சனீஸ்வரன் வந்தார்னு டி.ஆர்.பாலு பத்தி கமெண்ட் அடிச்சிருக்கான், அது மாதிரி கெட்டப் போரோட நாம வரக்கூடாது.

[அப்போது விஜயகாந்த் போனில் அவரது மனைவி பிரேமலதா]

பிரேமலதா : என்னங்க.. இலங்கை போயிட்டு வரும்போது பூண்டு பத்து கிலோ வாங்கிட்டு வாங்க.. அங்க நல்லா இருக்குமாம்.

விஜயகாந்த் : ஐயய்போ.. இந்த விஷயம் உனக்கெப்படி தெரியும்...!

பிரேமலதா : அதான் தூக்கத்துல ராஜபக்ஷேவுக்கு கன்னாபின்னானு கைய நீட்டி.. நீட்டி சாவல் விட்டுட்டு இருந்திங்களே...

விஜயகாந்த் : செல்லை ஆஃப் செய்துவிட்டு ச்சே.. பொண்டாட்டிங்க தொல்லை தாங்க முடியலை, எப்படியோ கண்டுபிடிச்சிடறாங்க..

ராமதாஸ் : ஆமாங்க.. என் மனைவி கூட படகுல போகும்போது சாப்பிட கைமுறுக்கு , சீடை, அதிரசம்னு செஞ்சி டின்னுல வெச்சிருக்காங்க..

வைகோ : யாருக்கும் தெரியாம இலங்கைக்கு போயிட்டு வந்ததும் வெற்றி... வெற்றி... உலகமகா வெற்றி.. சரித்திர சாதனென்று எம்.பி, குழு மாதிரி எம்பி எம்பி குதிப்போம்.

விஜயகாந்த் : நான் அறிக்கையே ரெடிபண்ணி எழுதிவாங்கி வெச்சிட்டேன். படிக்கிறேன் கேளுங்க, இலங்கைல இருக்கிற எண்பது லட்சம் தமிழர்களின் கண்ணீரைத் துடைச்சிட்டோம், முகாம்ல முள்வேலி மட்டும் தான் இருக்கு. எல்லாரையும் பஸ்ல ஏத்திவிட்டு அவங்கவங்களோட வீட்டுல உட்காரவெச்சி விளக்கேத்திட்டுதான் வந்தோம். கன்னிவெடிகளை எடுக்கணும்னு சொன்னாங்க. நான் கன்னிவெடிகளை முறைச்சிப் பார்த்ததும் அதுவே மேல வந்து விழுந்திடுச்சி.

ராமதாஸ் : இதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஆனாலும் பரவாயில்லை,

வைகோ : சரி.. இன்னைக்கு ராத்திரி மாறுவேஷத்துல ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்துடுங்க.

விஜயகாந்த் : மாறு வேஷத்துலதானே,, வந்துடறேன், வேஷம் போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சி.

வைகோ : போடற வேஷம் யாருக்கும் தெரியக்கூடாது, தசாவதாரம் மாதிரி சொதப்பினிங்க அவ்வளவுதான்.. அப்புறம் கேளுங்க.. அங்க படகோட நானும் வேற கெட்டப்புல இருப்பேன். அங்க வந்து சிங்கம் சீறுது. சிறுத்தை அலறுதுன்னு சொல்லிட்டு மூணு தடவை வா... வா... ன்னு ஊளையிடுங்க அதான் நமக்கான சிக்னல்

விஜயகாந்த் : ஓகே பாஸ் காரியத்தை கச்சிதமா முடிச்சிடறேன்.

ராமதாஸ் : சினிமாக்காரன்கிறது சரியாத்தான் இருக்கு ஸஎன்றபடி மூவரும் வீட்டைவிட்டு வெளியேவர , தெரு முழுக்க இலங்கைசெல்லும் இங்கர்சாலே, கள்ளத் தோனியில் கலக்கப்போகும் எங்கள் கேப்டனே... தன்னலத் தலைவர் ""தாவும் திலகமே’’ என பேனர் போஸ்டர், கட்டவுட் வைத்திருக்கிறது.]

வைகோ : வேண்டாத கட்சிகாரன் எவனோதான் இந்த வேலைய பாத்துப்புட்டானுங்க.

[அப்போது போலீஸ் சயரன் ஒலி கேட்டு மூவரும் தலையில் துண்டை போட்டுக்கொண்டு பயத்துடன் ஓடி மறைகின்றனர்]



வாசகர் கருத்துக்கள் :

வசந்தபாலன்

சூப்பர்... சூப்பர்... சூப்பர்...


செல்வகுமார்

நல்ல நையாண்டி





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT