Page last updated at Monday, October 12, 2009 at 10:17:28 PM IST
கூட்டணிக்கு கட்சி வேணும்
கற்பனை: உத்தமபுத்திரன்.
அ.தி.மு.க - வை விட்டு வெளியேறிய ராமதாஸ் அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
ராமதாஸ் : ஏம்பா... ஆலோசனை கூட்டத்துக்கு வந்துட்டு ஆளாளுக்கு இப்படி ஈரத்துணியில பொத்துன கோழி மாதிரி தலையில துண்டு போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தா எப்படி.....
காடுவெட்டி குரு : இருங்க.. ஐயா அந்த ஜெயலலிதாவை எப்படியெல்லாம் கெட்ட வார்த்தைல திட்டலாம்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன்.
அன்புமணி : ஏம்பா.. மூணாவது அணி அமைப்போம்னு சொன்னிங்களே சும்மா தமாஷீக்குத்தானே..
ஏ.கே மூர்த்தி : தமாசு இல்ல.. நிஜந்தான். கூட்டணிக்கு கட்சிகள் தேவைன்னு விளம்பரம் கொடுப்போம் தா.கா.கீ..கே. ..ன்று எதாச்சும் கட்சிகள் வந்தாலும் வரும், ஒரே அமுக்கா அமுக்கிப்புடலாம்.
ஜி.கே : அவங்களை வெச்சிக்கிட்டு.. மூணு வேளை சோறும், கையில நூறு ரூபா பேட்டாவும் நாம் கொடுத்தாகணும்.
அன்புமணி : அப்படின்னா.. நடிகர் கார்த்திக் நாலு பேரை வெச்சி கட்சிய ஆரம்பிச்சி கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கார். அவரை சேர்த்துக்கலாமா..?
ராமதாஸ் : வேணாம் , போன சட்டசபை தேர்தல்ல தி.மு.க கிட்டையே அறுபது சீட்டு கேட்டு , தமிழகமே தரிக்கெட்டு சிரிச்சது...
ஏ.கே மூர்த்தி : அப்படின்னா.. ஒரு சூப்பர் தலைவர் இருக்கார்.
ராமதாஸ் : [உற்சாகத்துடன்] அப்படியா.. அவர் கூட கூட்டணி வெச்சிக்கிட்ட ஆட்சியப் பிடிச்சிடலாமா..? யாரு அவரு?
ஏ.கே மூர்த்தி : சுப்ரமணி சுவாமி, தமிழக மக்கள் நெஞ்சம் முழுக்க நெறஞ்சவர், செல்வாக்கானவர்.
ராமதாஸ் : கும்பிட்டபடி ஐயோ சாமி ஆளை விடுங்க.. அவருக்கு முறைவாசல் செய்ய நம்மால முடியாது.. ஆனா அவர் கட்சியில அவர் மட்டும் தானே இருந்தார்.
குரு : இந்த சரத்குமார் ஓகே..வா.. தமிழ்நாட்டுல மொத்தம் 150 ஓட்டு இருக்கு...
ராமதாஸ் : வேணாம்.. வேணாம்.. ராதிகாவும் ஓட்டுகேட்டு வரும்.. யாரால ஆவறது. அடுத்த தலைவரை சொல்லுங்க...
(அப்போது வெளியே ஏராளமானோர் நின்றிருக்க , போய் பார்த்துவிட்டு வந்த ஜி.கே.மணி)
மணி : விஜயகாந்த் போனவாரம் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்'னு அறிக்கை விட்டதால கடுப்பான தொண்டர்கள் கட்சிமாற முடிவெடுத்துட்டாங்களாம்.. அவரையும் கூட்டணி சேர்த்தா சிக்கல்தான்,, அதுவுமில்லாம 230 தொகுதி கேட்பார், மீதி இருக்கிற நாலு தொகுதிகளை வெச்சிக்கிட்ட நாக்கையா வழிக்க முடியும். அப்படியே நாம ஒத்துக்கிட்டாலும் அவர் நடிக்கக் கூடாது .. முடியுமா..!
ராமதாஸ் : சினிமாக்காரங்களே வேணாம், வேற யாரையாச்சும் சொல்லுங்க...
மணி : தாக்குப்பிடிச்சி ஜெயலலிதா கட்சியிலயே இருந்திருக்கலாம், அவங்க மதிக்கலன்ன என்ன நாம மதிச்சி நடத்துக்கலாமே..
அன்புமணி : என்ன பேசுறிங்க .. எஸ்.வி. சேகருக்கு இருக்கிற ரோஷம் கூடவா நமக்கில்லை.
மூர்த்தி : வெளியில தலைகாட்ட முடியில ,, அந்த துரை முருகன் ஒரு நாளு காச வாங்கித்தர்றேன் கட்சிய எங்களுக்கு வித்திடுங்களேன்று கிண்டல் பண்றார்.
குரு : அத மட்டுமா.. பி.ஜே.பி. காரங்க ..என்னைப் பார்த்து சங்கு ஊதற மாதிரி வாயில கைய வெச்சி ஊ.. ஊ.. ன்னு ஊதிக்காட்டுறாங்க..
மணி : போன எம்.பி, தேர்தலோட..வேற வேலைப் பார்த்து பொழைச்சிக்கலாம்னு கூட தோணுச்சி.
ராமதாஸ் : புதிய தமிழக கிருஷ்ணசாமி கட்சி மட்டும் நம்ம கூட்டணிக்கு வந்துட்டாங்கன்னா அடுத்த தேர்தல்ல ஆட்சியப் பிடிச்சிடலாம் . ஒத்துக்குவாரான்னு தெரியலை.
மூர்த்தி : ஏங்க.. பேசாம தங்கபாலுவைப் பிடிச்சி சோனியா அம்மாகிட்ட பேசினா என்ன...
அன்புமணி : அதுவும் பேசிப்பார்த்துட்டேன். என் செல் நம்பர்று தெரிஞ்சதும் நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எந்த ஜென்மத்திலும் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லைனு தங்கபாலுவே பேசறார்.
(அப்போது ஒரு தொண்டர் வந்து ராமதாஸிடம்)
தொண்டர் : ஐயா டைரக்டர் சீமான் உங்ககிட்ட பேசணுமாம்..
ராமதாஸ் : என்ன விஷயம்னு சொன்னாரா..?
தொண்டர் : அவர் ஏதோ புதுசா கட்சி ஆரம்பிக்கப் போறாராம் கூட்டணிக்கு ஓகே வான்னு கேட்க வந்தாராம்..?
ராமதாஸ் : கட்சிக்கு என்ன பேர் வெச்சிருக்காராம்..?
தொண்டர் : சிங்களனை சீரழித்து வேட்டையாடும் விடுதலைப்புலி கழகமாம்.
ராமதாஸ் : பதறியபடி ஐயய்யோ... வில்லங்கம் வீடு தேடி வந்துடுச்சே.. ஓடுங்கையா… அடுத்த தேர்தல் வரைக்கும் உங்களுக்கெல்லாம் லீவு தப்பித்தவறிக்கூட தைலாபுரம் வந்துடாதிங்க.
(என்றதும் அனைவரும் காட்டிலும், புதரிலும் விழுந்தடித்து ஓடுகின்றனர்.)
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :
ADVERTISEMENT