Page last updated at Monday, September 22, 2009 at 10:17:28 PM IST

மத்திய அமைச்சரும், மசால்வடையும்.
கற்பனை: உத்தமபுத்திரன்.


இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ள / சேமிக்க : Bookmark and Share


[அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிக்கன நடவடிக்கையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டதை பின் பற்றி தமிழக அமைச்சர்கள், மற்றும் தலைவர்கள்]

ஸ்டாலின்: இங்க பாருங்க.. மத்திய அமைச்சர்களே சிக்கனமா இருக்க முடிவு பண்ணிடாங்க.. அதை நாமளும் கடைபிடிக்கணும்..

துரைமுருகன்: [கையை உயர்த்தி] சிக்கனத்தை வலியுறுத்தும் அண்ணண் சிக்கன சிங்கம்… சிங்கார சிறுத்தை புலி..

ஸ்டாலின்: யோவ்.. இருய்யா.. இன்னும் சொல்லியே முடிக்கலை… அதுக்குள்ள ஆரம்பிக்கிறே… நாமெல்லாம் கொஞ்ச காலத்திக்கு ஆடம்பரத்தை அமிக்கி வாசிக்கணும்.

பேராசிரியர்: என்னைப்பத்தி… கவலையில்லை… மூணு வேலையும் கூழ்தான் குடிக்கிறேன்.. பைவ் ஸ்டார் ஓட்டல்ல நல்ல செஞ்சு கொடுப்பாங்க…

[அப்போது ஜே.கே. ரித்தீஸ் மாட்டு வண்டியில் வந்து இறங்குகிறார்]

ரித்தீஸ்: தலைவா… நீங்க… சொல்றதுக்கு முன்னாடியே நான் மாட்டு வண்டி வாங்கிட்டேன்.. இனிமே இதுல தான் வருவேன்.. போவேன்…

மேயர் சுப்பிரமணி: என்னப்பா ரித்தீஸ்… பயங்கரமா.. சீன் போடறே… வெளிநாட்டு காரை வெளியிலயே நிறுத்திட்டியா..

[வீரபாண்டி ஆறுமுகம் இடுப்பை பிடித்துக்கொண்டு..]

வீரபாண்டி ஆறுமுகம்: அப்பாடா… சேலத்திருந்து பஸ்லயே வர்றேன். இடுப்பு செம வலி…

[என ஆளாளுக்கு ’பிட்டை’ போட்டுக்கொண்டிருக்கின்றனர்]

ஸ்டாலின்: சரி… இந்த சிக்கன நடவடிக்கை கூட்டதுல கலந்துகிட்ட உங்களுக்கு விருந்து வைக்கப் போறேன் திருப்தியா சாப்பிடுங்க… என்ன வேணுமோ… கூச்சபடாம வாங்கி சாப்பிடுங்க..

[அப்போது ஒரு டீ கடை பையன் ஒரு தட்டில் மசால் வடை, மெதுவடை, மிளகாய் பஜ்ஜி கொண்டுவந்து வைக்கிறான்]

கே. என். நேரு: சின்ன முதல்வரே… விருந்துன்னதும்… காடை, கவுதாரி, வான் கோழின்னு கற்பனைய கண்டபடி வளர்த்துகிட்டு… நாக்கை நாலு முழம் தொங்கப் போட்டுகிட்டு இருந்தேன்.. ஏமாத்திட்டிங்களே…

[தங்கபாலு உள்ளே வருகிறார்]

தங்கபாலு: வாழ்க… சோனியா அம்மா… வாழ்க… ராகுல் ஐயா..

ஸ்டாலின்: தங்கபாலு சார்.. எப்படி வந்தீங்க…?

தங்கபாலு: உங்க கட்சித் தொண்டன் ஒருத்தன் இந்தப் பக்கமா வந்தான் அவன் தோளுமேல எறிவந்துட்டேன்.

ஆற்காடு வீராசாமி: அதானே… நீங்க… என்னைக்கு தனியா வந்திங்க… எவனோட தோளுலமேலதானே ஏறிவருவீங்க..

தங்கபாலு: எங்க சோனியாஜி.. சிக்கனமா இருக்கச் சொல்லி இருக்காங்க.. அதான் ஆட்டோ கூட வேண்டானுடேன்.

ஸ்டாலின்: அப்புறம்… சினிமா பார்க்க ஒவ்வொருத்தருக்கும் எப்படியும் இருநூறு ரூபா செலவாகும். அதனால… கலைஞரோட தமிழருவி நிகழ்ச்சிய பாருங்க… சினிமா கொடுக்கிற சந்தோஷத்தை அது கொடுக்கும், காசும் மிச்சமாகும், இன்பமா.. ஆனந்தமா.. மகிழ்ச்சியா இருப்பிங்க..

ஆ. வீராசாமி: அது சரி தான் ஸ்டாலின்… இந்த அ.தி.மு.க காரங்களோட தொல்லைதான் தாங்க முடியல

துரைமுருகன்: என்ன செஞ்சாங்க..

டி. ஆர். பாலு: என்ன செஞ்சாங்களா… சிக்கனமா இருக்கலாம்னு நேத்து.. நான் கையேந்தி பவன்ல பொங்கல் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது… முனியாண்டி விலாஸ்ல முட்டையும், கோழி பிரியாணியும் சாப்பிட்டு வெளியில வந்த ஓ. பன்னீர்செல்வம்.. என்னைப் பார்த்ததும்… ”ஒவ்..வ்…” ஏப்பம் விட்டுட்டுப் போறார்

[அப்போது கனிமொழி உள்ளே வருகிறார்]

ஆ. வீராசாமி: என்னம்மா… தீடீர்னு வந்திருக்கே… அப்பா எதாச்சும் சொல்லிவிட்டாரா..?

கனிமொழி: ஆமா… அமைச்சர்களுக்கு கொடுத்த காரையெல்லாம் வாங்கிட்டு ஆளுக்கொரு சைக்கிள் கொடுக்கச் சொன்னார்.

பேராசிரியர்: கலைஞர் சொன்னா.. கரெக்டாத்தான் இருக்கும். இந்தாங்க.. முதல்ல என் கார் சாவி

கனிமொழி: அப்புறம்… அமைச்சர், எம்.எல்.ஏ.. சம்பளத்துல இருபது சதவிகிதம் “இந்த” நல நிதிக்கும், அஞ்சு சதவிகிதம் “அந்த” நல நிதிக்கும் கொடுக்கச்சொன்னார்.

துரைமுருகன்: ச்சே.. கலைஞர் எவ்வளவு பெரிய அரசியல் சாணக்கியர்ங்கறது… இதன் மூலமாகவும் தெரியுது.

கனிமொழி: அதுவுமில்லாம.. அடுத்த சங்கமத் திருவிழாவுல இசைக் கலைஞர்கள் வாத்தியங்களை வாசிக்காம, வாயிலேயே சவுண்டு கொடுக்கச் சொல்லிவிட்டார்.. வாத்தியக் கருவிகளோட வாடகை மிச்சமாகும்ல…

தயாநிதி மாறன்: அட்டா.. தலைவரோட அறிவுக்கும், புத்திசாலித்தனதுக்கும், பிடிங்கன்னு பிரதமர் பதவியே கொடுக்கலாம்.

ஸ்டாலின்: அப்புறம்… இன்னொரு முக்கியமான விஷயம்.. சட்ட சபை கூட்டத்துக்கு வரும்போது… அவங்கவங்க வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிகிட்டு வந்துடுங்க… ஒவ்வொரு ஹாஸ்டல் அறையிலும் நாலு பேர் தங்கிகுங்க.. எல்லாம் சிக்கன நடவடிக்கைதான்.

[அப்போது மு. க. அழகிரி ஆரவாரத்துடன் உள்ளே வர அனைவரும் எழுந்து நிற்கின்றனர்.]

மு. க. அழகிரி: சிக்கனமா இருக்கிறதுக்கான சில யோசனையோட வந்து இருகேன்…

துரைமுருகன்: சொல்லுங்க… தலைவா…. சொல்லுங்க…

மு. க. அழகிரி: அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை எலக்‌ஷன் நடக்கிறதால செலவு நெறய ஆகுது. அதனால…. எலக்‌ஷனே நடத்தாம இருபது வருஷம்.. தி.மு.க வே ஆட்சி நடத்தட்டும்..

ஆ.வீராசாமி: ரொம்ப நல்ல விஷயம்.. சூப்பர் ஐடியா.. ஓட்டு கேக்கபோற அலைச்சலும் மிச்சமாகும்…

தயாநிதி மாறன்: இதுக்குத்தான் அழகிரி மாமா வேணுங்கிறது.

மு. க. அழகிரி: அப்படியே… நெறைய அமைச்சர்கள் இருக்கிறதால அவ்வளவு பேருக்கும் சம்பளம் கொடுத்து கட்டுபடியாகாது…

டி. ஆர். பாலு: அதுக்கு..?

மு. க. அழகிரி: ஒட்டு மொத்த இலாக்கவையும் நானே பாத்துக்கிறான்…

[என்று சொன்னதும்… அனைவரும் தெறித்து ஓடுகின்றனர்]



வாசகர் கருத்துக்கள் :

Dheena

orey comedy pongaaaaaaa........

Damodharan

Thangal Karuthu mihavum arumai. sirikkavum sindhikkavum seidhathu




இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT Advertisement