வெகு காலத்திற்கு முன்பா நடந்தது

தேவேந்திர பூபதி

வெகு காலத்திற்கு முன்பா நடந்தது - தேவேந்திர பூபதி


கனவை விரித்து மழை பிடித்தேன்
தவறி விழந்த நட்சத்திரங்களை
விரல் நகங்களில் பதித்தவன்
உனது வாசலைத் தட்டுகிறான்.
மேலும் சில துளிகள் உன் தொட்டிக்கத்தாளைக்
அழைப்பு மணி ஓசையில்
பூனைகள் எட்டிப் பார்த்து
கொட்டாவியுடன் உடலை நெட்டுயிர்க்கின்றன
இந்த வீதி தான் இது போலத்தான்
வெகு காலத்திற்கு முன்பு நடந்ததாக
ஒருவன் எழுதியிருந்தான்
அந்தப் பிரதியும் தொலைந்துவிட்டது
நட்சத்திர விரல்களுடன்
நான் உனக்கு எழுதுவது
வானத்தின் மீதான ஒரு நெடுக்கனவை
இப்போதுதான் எட்டிப் பார்க்கிறாய்
என் விரல்களில் இருந்து பரவி
சொற்களாய் மின்னும் நட்சத்திரங்களை
மழைகளினல் தேடுவது வீண்
உனது பூனைகள் அலறும்
வாசலில் இருந்து திரும்புகிறேன்
தொலைந்த பிரதியான உன் முகம்;
நிர்மலமற்ற வானம் போல
ஏன் இருண்டிருக்கிறது.


இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5