காதலின் விலை

தேவேந்திர பூபதி

காதலின் விலை - தேவேந்திர பூபதி


தொலைக் காட்சியில் இருந்து
நெடுஞ்சாலைக்கு
பிறகு ஒரு நண்பனைக் காண
நேற்று நாளை இன்று
பயணத்திற்கான சாலைகளை
என் வாழ்வில் விதித்து யார்
பூங்காவின் வெளிச்சுவற்றோரம் ஒரு கிழவன்
வெகு நாளாக வாகனங்களை
திசைமாற்றும் ஒரு ஊழியர் மற்றும்
நான் தேடியலையும் புத்தகம்
இன்றைக்கேனும் பேசிமுடித்து விடவேண்டும்
எனக்கு காய்கறிகள் விலை தெரியாது
ஒரு பழைய ஆபரணம்
அதன் சமகால மதிப்பிலும் அதிகவிலையுள்ளது
அதன் தொன்மைக்காக
சில கதைகளை உருவாக்கத்தான் வேண்டும்
தொலைக்காட்சியும் நெடுஞ்சாலையும்
இடம்மாறி அமர்ந்துவிடும் இடம் ஒருவேளை
உனது அருகாமையாக இருக்கலாம்
இருப்பினும் என்னை முத்தமிட்ட விடாதே
எனக்கு காதலின் விலை தெரியாது.


இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5