இது இறைவன் குருதி

சகா



எல்லோரும் வந்து
இதில் குளியுங்கள்
எல்லோரும் வந்து
இதைப் பருகுங்கள்
எல்லோரும் இதை
தலையில்
தெளித்துக் கொள்ளுங்கள்
நெற்றியில்
இட்டுக் கொள்ளுங்கள்
இது தீர்த்தமல்ல
பகுத்தறிவாளர்களால்
மதத்தை
மரணிக்கவைக்க முடியவில்லை
ஆத்திகர்களோ
மதம் உருவாகக் காரணமான
இறைவனை
அதே மதவாளால்
கூறுகள் போட்டு
உலகச் சந்தைக்கு
எடுத்துப் போகின்றனர்
வெட்டப்பட்ட போது
வழிந்த ஆறுதான் இது


இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5