மன வெளி!

தஞ்சை சகா



நான்
நினைவுகளற்ற
பாலைவனம்


கண்களின் நீரும்
நிஜங்களின் நிஜலும்
கறைந்துபோன பின்
இதோ
என் மனம்
மணல் வெளியாய்
வெறிச்சோடி விரிந்திக்கிறது.


இனி எந்த விதையும்
தன் தலைமுறையை
வளர்க்க முடியாது.


கள்ளிகளும் சுள்ளிகளும்கூட
கேலிக்குரியதாகி
கேள்வி குறியாகிவிட்டது.


ஏந்த முகிலாலும்
கூறை வேயப்படாத
ஏன் வீடு
மேற்புறும் திறந்து
வானம் சுடச்சுட
வாசம் வீசுகிறது


சுமுதாயப் பட்டறையில்
நேருப்பில் காய்ச்சி
அடிபட்ட பருவ உருவில்
அலுத்துப் போன
வெரப்பு வெப்பத்தால்
சாயம் போனாலும்
இன்னும் மிச்சமிருக்கிறது
சிறு வயதில் எழுதிவைத்த
லட்சிய வார்த்தைகள்
என் மனச்சுவரில்...



இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5