என் பூனையைக் காணவில்லை

உமா ஷக்தி



வெண் பாதங்கள் வெளித்தெரிய
கருமையுடலைச் சுருக்கி
உறைந்த ஓவியக் காட்சியாய்ப்
உறங்கத் துடிக்கும் சிண்டெரல்லா..
பசித்தால்
மீம் மீம் என குரல் எழுப்பும்
வயிற்றுச் சுமையுடன்
மேலும் அசைவற்று தீனமான
சத்தத்துடன்
தன் இருப்பை உணர்த்தும்
நேற்றைக்கு முன் தினம்
காணாமல் போன அது
திசைகள் அறியாது.
என் வாசனை அதற்குத் தெரியும்
எனது வேதனையும் கூட..
பசியால் துடிக்கும் அதன் மென் குரல்
என்னை அதிரச் செய்கிறது.
எல்லா இடங்களிலும் தேடிக் களைத்து
காற்றிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
சிண்டெரல்லாவின் பாதங்களின் சுவட்டை
கண்டறிந்து சொல்லும் படி!

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5