Page last updated at Thursday, February 04 , 2009 at 11:57:28 PM IST

இப்பகுதியில் வரும் அனைத்து பெயர்களும், சம்பவங்களும், உரையாடல்களும், நிகழ்வுகளும் கற்பனையே…



ஐயாயிரம் மூனுதரம் - கற்பனை: உத்தமபுத்திரன்.




[நடிகர் வடிவேலு வீட்டில் ரெய்டு நடந்ததால் சோகமாக அமர்ந்திருக்க, நடிகர் மயில்சாமி, சிங்கமுத்து, முத்துகாளை ஆகியோர் வருகின்றனர்]

மயில்சாமி: அண்ணே வருமானத்துறை அதிகாரிங்க ஆப்பு அடிச்சிட்டுப் போயிட்டாங்களாமே…

சிங்கமுத்து: இப்படி நீ சோகமா இருக்கிறதப் பார்த்தா எங்க கண்ணுல உப்புத்தண்ணி புளிச் புளிச்சின்னு கொப்புளிக்குது. [மனதுக்குள் : ஏதோ நாம ஏற்கனவே கொஞ்சம் ஆட்டய போட்டு வச்சிடோம் - இல்லனா அதுவும் இல்ல போயிருக்கும் ]

முத்துக்காளை: அதனால என்ன , விட்ட பணத்தை பிடிக்கறதுக்காக ஒரு திட்ட்த்தோட வந்திருக்கோம்.

வடிவேலு: திட்டமா.. என்ன திட்டம்?

மயில்சாமி: உங்களை ஏலம் விடப்போகிறோம்.

வடிவேலு: [அதிர்ச்சியுடன்] என்னது ஏலம் விடப்போறிங்களா !

மயில்சாமி: அதாவது ஐ.பி.எல் டொன்டி.. டொன்டி கிரிக்கெட் போட்டிக்காக வீரர்களை ஏலம் எடுக்கிறாங்களாம். உங்களையும் அப்படி ஏலம் விட்டா கோடி கோடியா பணம் கொட்டும்.

வடிவேலு: [உற்சாகத்துடன்] அப்படியா.. சரி.. என்னை யாரு ஏலம் எடுப்பா கிரிக்கெட் பந்தையே நான் சினிமாவுல தான் பார்த்துருக்கேன்.

சிங்கமுத்து: அதனால என்ன பேட்டை ஸ்டைலா பிடிச்சிக்கிட்டு விதவிதமா போஸ் கொடுத்து படம் எடுத்து காட்டினா உன்ன ஆப்பிரிக்கா நாட்டு சிம்பான்ஸி.. ஸாரி கிரிக்கெட் வீரர்னு நெனச்சி ஏலம் எடுத்துக்குவாங்க. பணத்தை கோணியில அள்ளலாம்.

வடிவேலு: அவ்வளவு பணமா தருவாங்க !

முத்துக்காளை: அதுமட்டுமில்ல. இதுல மட்டும் எடுத்டுக்கிட்டா இந்தியா என்ன உலகம் முழுக்க பேமஸ் ஆயிடுவிங்க

மயில்சாமி: அப்புறம்… உலக அழகி ஐஸ்வர்யாரயி, பிபாச பாசு, ஜெண்ட் ஜாக்சன், பிரிட்னி பியர்ஸ் எல்லாம் உங்களுக்கு ஜோடியா நடிக்க்கனும்னு ஒத்தை கால்ல நின்னுகிட்டு ‘ஓ’ன்னு அழுவாங்க..

வடிவேலு: ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தாண்டா இருக்கு… ஆனா நெனச்சபடி பினிஸ் ஆகுமா?

சிங்கமுத்து: நீங்க எதுவும் செய்ய வேணாம். சபரிமலை ஐயப்பன் மாதிரி குத்தவெச்சி குந்திகிட்டு இருங்க. மத்த்தை நாங்க பாத்துக்கறோம்.

[மறுநாள் ஒரு ஹாலில் வடிவேலுவை குளிப்பாட்டி, மாலையுடன் அமர்த்தி வைத்துருக்கின்றனர். அங்கே நடிகர் பார்த்திபன் சவுதி அரேபியா ஷேக் போல, ஆட்களுடன் வருகிறார்]

மயில்சாமி: ம்.. இப்ப எலம் எடுக்க தயார இருக்கிங்களா.. முதல்ல நூறு ரூபாயில இருந்து ஆரம்பிப்போம்.

வடிவேலு: [மயில்சாமியை அருகே அழைத்து] ஏண்டா கோடி கோடியா கொட்டும்னுட்டு கேவலமா நூறு ரூபாங்கிறே..

சிஙகமுத்து: க்..கும்.. அதுக்கே பலபேரு யோசிக்கிறாங்க பாரு..

வடிவேலு: [பாவமுடன்] அட பண்ணாடைங்களா… குளிக்கவெச்சி பலியாடு மாதிரி குந்த வெச்சி காமெடி பண்ணிட்டு இருக்கிங்ல்களேடா.. ராஸ்கல் உங்களை.. உங்களை..

முத்துக்காளை: போகப் போகத்தான் ரேட்டு கூடும்.. பொத்திகிட்டு இருங்க்க எங்களுக்கு எல்லாம் தெரியும்.

பார்த்திபன்: கையை உயர்த்தி ஆயிரம் ரூபா தொன்னூத்தம்பது பைசா.

வடிவேலு: அடேய் ஷேக்கு பேட்டா செருப்புக்கு வெலை சொல்ற மாதிரி சொல்றியேடா…

பார்த்திபன்: ஏலம் எடுக்கிறதுக்கு முன்னாடி பொருளை செக் பண்ணி பார்க்கணும்.

[என்றபடி மேடைக்கு வந்து வடிவேலு காதைப் பிடித்து இழுத்துப் பார்க்கிறார், அப்புறம் வாயைத் திறக்கச்சொல்லி நாக்கை நசுக்கிப் பார்க்கிறார். பின் பானையைத் தட்டிப் பார்ப்பது போல் தலையை தட்டிப் பார்க்கிறார்]

வடிவேலு: [கடுப்புடன்] டேய்.. ஷேக்கு… என்னடா ஏதோ சந்தையில மாடு வாங்கிற மாதிரி பல்லைப் பார்க்கிற, தட்டிப்பார்க்குற, நான் எத்தனை கோடிக்கு ஒர்த் தெரியுமா

பார்த்திபன்: ஏய் வாயை மூடு.. பேசினே கீழே குனிய வெச்சி சவுக்கால விளாசிப்புடுவேன்.

வடிவேலு: [முத்துக்காளையை அருகே அழைத்து] என்னா இந்த ஷேக்கு சவுக்கால அடிப்பேங்குறான் என்னடா நடக்குது இங்க..

மயில்சாமி: ஏலம் போறவரைக்கும் அப்படித்தான். கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குங்க.

பார்த்திபன்: சரி.. கடைசியா ஐயாயிரம் ரூபாயிக்கு இவனை ஏலத்துக்கு எடுத்துக்கிறேன். இந்த டம்மி பிஸுக்கு அவ்வளவுதான் முடியும்.

[அதற்குமேல் யாரும் ஏலம் கேட்காத்தால் பார்த்திபனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, மணியடித்துவிட்டு வடிவேலு கையைப் பிடித்து பார்த்திபனிடம் ஒப்படைக்கின்றனர்]

பார்த்திபன்: [தன் வேசத்தை கலைத்து] அப்பாடா ஐய்யாயிரத்துக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்.. புழிஞ்சிட வேண்டியது தான்.

வடிவேலு: [அதிர்ச்சியுடன்] ஐய்ய்யோ நீயா… ஏரோப்ளேன் சக்கரத்துல மாட்டின எலும்பிச்சம் பழம் மாதிரி மாட்டிகிட்டேனே. ஐயோ சாமி.. இப்ப என்ன் பண்ணுவேன். சரி.. சரி.. வந்து கிரவுண்டை காட்டு கிரிக்கெட் ஆடித் தொலைக்கிறேன்.

பார்த்திபன்: என்னது கிரிக்கெட் கிரவுண்டா..!

வடிவேலு: அப்புறம் கிரிக்கெட் விளையாட்த்தானே என்ன ஏலம் எடுத்தே.

பார்த்திபன்: அடிங் கொய்யால என் சொந்த ஊர்ல இருக்கிற பண்ணையில மாட்டைக் குளிப்பாட்டி சாம்பிராணி போடறது, சாணிய வெரட்டியா தட்டி வீதி வீதியா விக்கிறதுக்குத்தானே உன்னை ஏலம் எடுத்தேன்.

வடிவேலு: [அதிர்சியுடன்] என்னது சாணி அள்றதுக்கா.. டேய் என்னடா இவன் சொல்றான்.

[என்று திரும்பிப் பார்க்க மூவரும் காணாமல் போகின்றனர்]

வடிவேலு: போங்கடா நீங்களும் உங்க ஏலமும்…. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..

[என்றபடி மாலையை உதறிப்போட்டுவிட்டு அலறி அடித்துக்கொண்டு ஓட, கல்லெடுத்துக்கொண்டு பார்த்திபன் விரட்டுகிறார்.]





வாசகர் கருத்துக்கள் :




இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT Kanniyapppan Ad

இதையும் படிங்க !

இந்தா பிடி மந்திரி பதவி...
வானத்தை வாடகைக்கு எடுப்போம்.
கவுந்து போனோர் காங்கிரஸ் காரிய கமிட்டி.
கிரிக்கெட்ல சிக்ஸரு டாஸ்மாக்குல குவார்ட்டரு.
விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்.
குடும்பப் படமா இருந்தாலும் ஒரு கொலை விழனும்.
கலக்கல் கார்மேகம் கவிஞர்.
கண்டபடி கடுப்பை கௌப்புங்க.
நாங்களும் கொடுப்போமில்ல
டாக்டர் பட்டம் போடுங்க சாமி.
அரசியல் காய்ச்சல் !
டெல்லிக்குப் போறோம் டெல்லிக்குப் போறோம்
ராகுல்ஜி ஹாவோஜி ! ஹாவோஜி !!
மத்திய அமைச்சரும், மசால்வடையும்.
சந்திரனுக்கு பட்டா போடு !
விருது வாங்கலையோ விருது.. விருது....
கூட்டணிக்கு கட்சி வேணும்
சீனா மோதாதே வீணா
ஓபாமாவும் நமீதாவும்








ADVERTISEMENT
ADVERTISEMENT Kanniyapppan Ad
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...