Page last updated at Thursday, December 20, 2009 at 11:57:28 PM IST

இப்பகுதியில் வரும் அனைத்து பெயர்களும், சம்பவங்களும், உரையாடல்களும், நிகழ்வுகளும் கற்பனையே…



நாங்களும் கொடுப்போமில்ல - கற்பனை: உத்தமபுத்திரன்.



[கலைஞர் தன் கோபாலபுரம் வீட்டை மருத்துவ மனைக்கு எழுதிவைத்து பாராட்டைப்பெற, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் இலவசங்களை அறிவிக்கின்றனர் ]

கொடநாடு எஸ்டேட் ' இல் ..,

ஜெயலலிதா : எங்களுக்கும் இலவசமா கொடுக்கத் தெரியும். காலக்கடிக்கிற என் கண்றாவி புடிச்ச இருநூறு செருப்பை இலவசமா எழுதி வைக்கறேன். ஓசியில வந்து பாசிப் புடிச்சிப்போன ஆயிரம் பட்டுப்புடவைய அள்ளித்தர்றேன். கொடநாடு எஸ்டேட் சுத்தியும் புதர்மண்டிக் கெடக்குற முள்ளுசெடிய வெட்டி பொதுமக்கள் அடுப்பெறக்க அனுமதி கொடுக்கிறேன்.

ஓ. பன்னீர், நெயக்குமார்,சேகர்பாபு [கோரஸாக] செருப்புகொடுத்த சிங்கம் வாழ்க, விறகு கொடுத்த வேங்கை வாழ்க,

தைலாபுரத்தில் ...,

ராமதாஸ் : என்ன கொடுக்கறதுன்னு புரியலையே…. அந்த ஆயிரம் ஏக்கர் அன்புமணி பேர்ல இருக்கு. இந்த ரெண்டாயிரம் ஏக்கர் மனைவி பேர்ல இருக்கு எம் பேர்ல எதுவுமே இல்லியே கொடுக்கறதுக்கு.

ஏ.கே. மூர்த்தி : ஐயா...இப்ப சமீபத்துல கரடுமுரடா பொறம்போக்கு நெலம் புடிச்சி வெச்சிருக்கமே ஆயிபோறதுக்கு நாயி கூட ஓதுங்காத எடம் அதை விவசாயிங்க வெள்ளாமைபண்ணச்சொல்லி கொடுத்துப்புடுவோம். உழுறவன் உசுரு போனா நமக்கென்ன வந்திச்சி.......இப்ப இருக்கிற நெலமைல இலவசம் கொடுத்தாத்தான் தேர்தல்ல ஓட்டுவாங்கமுடியும்.

தாயகத்தில் ...,

வைகோ : என் தமிழ் இனமே...... கட்டிடத்தைக் கொடுத்து கலைஞர் கபட நாடகமாடுகிறார். கட்டிடத்தை மட்டும் கொடுத்தால் மருத்துவமனையாகுமா…? கலைஞரைப் பார்த்து கேட்கிறேன்…. எங்கே டாக்டர்கள்…? எங்கே செவிலியர்கள், கட்டுப் போடகாடா துணியெங்கே…? பத்து போட பஞ்சு எங்கே….? தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்னை ஏமாற்ற முடியாது. வீடுயென்ன என் இனத்துக்கு என்னையே இலவசமாக எழுதிவைக்கிறேன். இது பிரபாகரன் மேல் ஆணை.

சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் ,

சரத்குமார் : [ராதிகாவிடம்] ஏம்மா... ஆளாளுக்கு எதை எதையே எழுதி வைக்கிறாங்க... நாமளும் நம்ம பங்குக்கு எதாச்சும் எழுதனுமே.

ராதிகா : நம்ம ராடான் நிறுவனத்தை பொதுமக்களுக்கு எழுதிவெச்சிடுவோம்.

சரத்குமார் : அதை எழுதிவெச்சி என்ன செய்ய…!

ராதிகா : ஜனங்க பேர்ல எழுதிவெச்சிட்டா அது பேர்ல இருக்கிற கடனையெல்லாம் பொதுமக்கள்தான கட்டனும் எப்டி நம்ம ஐடியா.

சரத்குமார் : ஐயய்யோ உழுவுற அம்பது நூறு ஓட்டு கூட விழாது.

ராதிகா : அப்படின்னா... உங்க நூறாவது படமான ‘தலைமகன்’ படத்தை மக்களுக்காக இலவசமா கொடுத்துடுங்க... என்னங்க யோசிக்கிறிங்க...?

சரத்குமார் : அவ்வளவு பெரிய தண்டனை தரணுமான்ணு யோசிக்கிறேன்.

தே.மு.தி.க அலுவலகத்தில் ...,

விஜயகாந்த் : கலைஞர் வசதியான கட்சி வெச்சிருக்கார். ஆட்சியும் செய்யறார். பிஸினசும் நல்லா போயிட்டிருக்கு. நாம அப்படியா... போன தேர்தலுக்கு அடிச்ச போஸ்டர் காசையே இன்னும் கொடுக்கலை கலைஞர் அவர் எழுதின கவிதையை நாட்டுக்கு எழுதி வெப்பார். ஜனங்க அவர் மேல கடுப்பாகி ஒட்டு மொத்த ஓட்டையும் நான் வாங்கலாம்னு பார்த்தேன். வீட்டை எழுதி ஒட்டைக் கெடுத்துப் புட்டரே... பிரேமலதா நீ ஐடியா கொடேன்.

பிரேமலதா : பரங்கிமலை சும்மாதான இருக்கு அதை எழுதிக் கொடுங்க... இல்லன்னா மவுண்ட் ரோட்டை எழுதிக் கொடுங்க... இடைத்தேர்தல்ல மொத்த ஒட்டையும் அள்ளிப்புடலாம்.

காங்கிரஸ் - சத்யமூர்த்தி பவனில்...,

தங்கபாலு : எங்கள் ஒப்பற்ற தலைவி சோனியாஜி அனுமதி தராம அறுத்த கைக்கு சுண்ணாம்பு கூட தரமாட்டோம். கலைஞர் கொத்தால் அது அவர் தனிப்பட்ட விஷயம். எங்கள் கட்சியின் காரியக் கமிட்டிய கூட்டாம காலணா கூட எழுதித் தரமாட்டோம். வேணும்னா பென்ஷன் வேணும்னு ரெண்டு தியாகிப் பெருசுங்க தொல்லை கொடுக்கறாங்க. அவங்களை வேனா எங்க கட்சி சார்பா எழுதித்தர்றோம் வெச்சிக்கங்க.

குறள் TV ' இல் ...,

டி. விஜய ராஜேந்தரிடம் நிருபர் : கலைஞர் வீட்டைக் கொடுத்தார் நீங்க என்ன கொக்கப் போறிங்க….?

டி. விஜய ராஜேந்தர் : ஏ... டண்டனக்கா…. ஏ… டணக்குநக்கா…. ஏ…. நக்கா….நக்கா…. நக்கா….நக்கா…. அரைச்ச மாவை அரைப்போமா… துவைச்சதுணிய துவைப்போமா…… யம்மாடி….. ஆத்தாடி..... [என்று கேள்வியை காதில் வாங்காதது போல தலைகோதியபடி பாடிக்கொண்டு நழுவிப் போகிறார்].





வாசகர் கருத்துக்கள் :




இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT Kanniyapppan Ad

இதையும் படிங்க !

இந்தா பிடி மந்திரி பதவி...
வானத்தை வாடகைக்கு எடுப்போம்.
கவுந்து போனோர் காங்கிரஸ் காரிய கமிட்டி.
கிரிக்கெட்ல சிக்ஸரு டாஸ்மாக்குல குவார்ட்டரு.
விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்.
குடும்பப் படமா இருந்தாலும் ஒரு கொலை விழனும்.
கலக்கல் கார்மேகம் கவிஞர்.
கண்டபடி கடுப்பை கௌப்புங்க.
நாங்களும் கொடுப்போமில்ல
டாக்டர் பட்டம் போடுங்க சாமி.
அரசியல் காய்ச்சல் !
டெல்லிக்குப் போறோம் டெல்லிக்குப் போறோம்
ராகுல்ஜி ஹாவோஜி ! ஹாவோஜி !!
மத்திய அமைச்சரும், மசால்வடையும்.
சந்திரனுக்கு பட்டா போடு !
விருது வாங்கலையோ விருது.. விருது....
கூட்டணிக்கு கட்சி வேணும்
சீனா மோதாதே வீணா
ஓபாமாவும் நமீதாவும்








ADVERTISEMENT
ADVERTISEMENT Kanniyapppan Ad
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...