Page last updated at Monday, October 12, 2009 at 11:57:28 PM IST

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்... - வடிவேல்.




      Thadagam - Tamil Cinema actors protest against Press - Vadivel
Tamil Actors Protest

1. "உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக்.

2. "உங்க வீட்டுப் பொண்ணுங்க ஓடிப் போவாங்கல்ல அப்போ பாக்குறோம்டா" டைரக்டர் சேரன்.

3. ''இழுத்து வைத்து உதைப்பேன்... எங்கம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பேன்"

4. கேட்க காது கூசும் சில வார்த்தைகள்…



இதெல்லாம் தமிழ் சினிமா நடிக, நடிகைகளான ஸ்ரீபிரியா, நடிகர் விவேக், சேரன், விஜயகுமார், அவரது மகன் அருண் ஆகியோர் தமிழக பத்திரிகையாளர்கள் குறித்து நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் உதிர்த்த முத்துக்கள். தமிழ் நடிகர்களுக்கு அவ்வப்போது ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது. ஆனால் அப்படி வருகிற ரோஷத்தில் வாயிலிருந்து வந்து விழுகிற வார்த்தைகள். பல நேரங்களில் அவர்களையே சந்தி சிரிக்க வைத்து விடுகிறது. பத்திரிகையாளர்களை ஜட்டியோடு விட்டு அடிக்க வேண்டும், பத்திரிகையாளர் வீட்டுப் பெண்களை எல்லாம் நிர்வாணப்படுத்தி...... செய்ய வேண்டும். காலில் விழுந்து மன்னிப் கேட்கச் செய்ய வேண்டும் என்கிற மாதிரி எல்லாம் நடிகர்கள் அனைத்து ஊடகவியளார்களையும் கன்னா பின்னாவென்று கடும் வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. திரையுலகினரும்., தமிழக அரசும் இணக்கமாகவும் நெருக்கமாகவும் இருக்கும் சூழலில் அதை நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிற நடிகர்கள் பத்திரிகையாளர்களை சகட்டு மேனிக்கு கண்டபடி திட்டித் தீர்க்கிறார்கள். இவர்களுடைய பிரச்சனை என்ன? இந்தப் பெண்களின் படங்களைப் போட்டு இவர்கள் விலாவாரியாக எழுதி விட்டார்களே என்பதுதான். அந்தக் கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் கூட ''அவர்களே வயிற்றுப் பிழைப்புக்காக தொழில் செய்றாங்க. அதை எல்லாம் போட்டோ பிடிச்சு பத்திரிகையில் போட்டு விடுகிறீர்களே" என்றுதான் வருத்தப்பட்டிருக்கிறார்.



சென்னை அடையாரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் தொழில் செய்ததாக நடிகை புவனேஸ்வரியையும், அவரோடு கூடவே தொழிலில் ஈடுபட்ட பெண்கள் இருவரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவருடன் உல்லாசமாக இருந்த ஆண்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரியை புகைப்பட நிருபர்கள் புகைப்படம் எடுக்க முனைந்த போது அவர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். மீறி எடுத்தால் நிர்வாணமாக நிற்பேன் என்று சொல்ல அவரை பர்தா அணிந்து (இஸ்லாமிய பெண்களின் புனித உடையான பர்தாவை தமிழக காவல்துறை எதற்கு பயன்படுத்துகிறது பாருங்கள்) கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். போலீசார் விசாரணையில் புவனேஸ்வரி தமிழ் நடிகைகள் யார் யார் எல்லாம் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்றும், அவர்களுடைய வி.ஐ.பி. கஸ்டமர்கள் யார் என்கிற லிஸ்டையும் கொடுத்து விட்டதாகவும், ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு ரேட் என்கிற தகவலைக் கூட போலீசில் சொல்லி விட்டதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன. புவனேஸ்வரி கசிய விட்டுள்ள இத்தகவல்களால் முன்னணி நடிகைகள் கலங்கிப் போயுள்ளதாகவும், அவர்கள் பல்வேறு பிரமுகர்கள் மூலம் பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ளும் படி வேண்டுவதாகவும் செய்திகள் கசிகிற வேளையில் நடிகர் சங்க பிரமுகர் நடிகர் ராதாரவி புவனேஸ்வரி முன்னணி நடிகைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்கள் கலக்கத்தை ஏற்படுத்துவதால் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறாராம். ஆனால் அவர் எழுதிய கடிதத்தில் முதல்வர் இதில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்ன குறிப்பிட்டுள்ளார் எனத் தெரியவில்லை. புவனேஸ்வரியின் வருத்தம் இதுதான்.



''போலீசார் மாறுவேடத்தில் கோவையில் நடன நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்று அழைத்தார்கள். அதற்காகத்தான் பணம் கொடுத்தார்கள். நடன நிகழ்ச்சி என்பதால் ஒத்துக்கொண்டு பணம் வாங்கினேன். உடனே என்னை விபசார வழக்கில் கைது செய்துவிட்டனர். போலீசார் என்னை ஏமாற்றி வலையில் சிக்க வைத்துவிட்டனர். என்னை ஏமாற்றிப் பணம் கொடுத்த என்னுடைய 'கஸ்டமரான' போலீஸ்காரர்களையும் கைது செய்வதுதான்...'' சரி என்று சிறைத்துறை அதிகாரிகளிடம் சொன்னதாக செய்திகள் வருகின்றன. பொதுவாக பாலியல் வழக்குகளில் வைது செய்யப்படும் பெண்களை போலீசார் வளைத்துப் பிடிப்பதே இப்படித்தான். இம்மாதிரி கைது செய்வதே சந்தேக நபரின் மீதான குற்றச் செயலுக்கு போலீசே தூண்டுதலாக இருந்ததாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற கேள்விகள் எலலாம் இருக்க...,

அடுத்த பக்கம் >





வாசகர் கருத்துக்கள் :





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<