THE DIFFERENCE BETWEEN ME AND A MAD MAN IS THAT I’M NOT MAD என்கிறது ஆங்கில சொற்றொடர் ஒன்று. உடை உதிர்த்து உலகமெங்கும் நடைபோடும் மனநிலை தவறியவர்களின் எச்சரிக்கையே மேற்சொன்ன தங்கமொழியில் தங்கி நிற்கிறது. மனிதன் உடல் உறுப்புகள் அத்தனைக்கும் இன்று மாற்று வந்துவிட்டது ஒன்றைத் தவிர மண்ணையும் மற்ற உயிரினங்களையும் தன் காலடியில் பணியவைத்த அவனது அறிவுத்திறனுக்கு காரணமான மூளை. கோடி நியூரான்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதம் நிகழ்த்தும் மூளை எந்த கட்டளைக்கு கீழ்படிந்து தன்னை முடமாக்கிக் கொள்கிறது? அதீத வறுமை , கொடூர பசியினை தாள முடியாத மென்மனம் ஒரு புள்ளியியல் தன்னைப் பைத்தியமென அறிவித்துக்கொண்டு வறுமையும் பசியையும் கொள்கிறதா? சொந்தவீடு, பேங்க்பேலன்ஸ், சொத்து மதிப்பு, 3 அண்ணன்கள் உறவுகள் என்று நிறைந்த வீட்டிலிருந்து வந்த செல்வராஜ் இன்றும் உங்கள் தோள்தொட்டு குதூகலமாய் சிரித்தபடி ‘5 ரூபா சார் ‘ பத்து ரூபா சார் எனக் கேட்க எது காரணம் ? டிகிரி முடித்த செல்வராஜ் வேலை கிடைக்காத விரக்தியா? தன் படிப்பிற்கு வெளியில் கிடைத்த அவமரியாதையா, அழுக்கு ஆடையில் சிக்கய வாச போதையா……. ??? தெரியவில்லை மனிதனாய் வாழ்ந்த பணக்கார நாட்கள் மனதில் உறைந்து போனதன் விளைவுதான் 50 பைசா, 1 ரூபாய்க்குப் பதிலாக, ‘5 ரூபா சார் ‘பத்து ரூபா சார்' . பைத்திங்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதைவிட "ஏன்" என்ற கேள்வி் ஒன்றே வாழ்வின் அசட்டுத்தனங்கள் கோரமுகம்காட்டி நகரக்கூடும். உலகம் அறிவித்திருக்கும் விளிம்பு நிலைப் பட்டியலில் பைத்தியங்கள் உண்டு, மனிதர்களின் விளிம்பு பைத்தியமென்றால் பைத்தியத்தின் விளிம்பு எது? மையம் எது? கலியனுக்கு வயதென்னவோ தெரியாது. பார்க்க 35 இருக்கும் - எப்போதும் நயினா வீட்டுத் திண்ணை வாசம் . எப்போது அவர்கள் திண்ணையில் அவன் அடைக்கலமானாவென யாருக்கும் தெரியாது. அந்த திண்னணயப் படைத்த நயினாவிற்குக் கூட உடலில் துளி ஆடையின்றி அடையாய் படர்ந்த அழுக்குடன், தளர்ந்த குறியுடதும் படுத்துக்கிடைக்கும் கலியன் பலருக்கு சாமி. காலை எட்டு மணிக்கு தன் மளிகைக்கடையை திறக்கச் செல்லும் அண்ணாச்சி தினமும் ஒரு காரியம் செய்வார். 1 ரூபா நாணயமொன்னற கலியன் கையில் தந்து வாங்கிச் செல்வார். 10 மணிமேல் அண்ணாச்யிடமிருந்து கலியனுக்கு டிபன் போகும். கலியனின் மூன்றுவேளை உணவிற்கும் உத்திரவாதமாய் ஊரில் ஆட்கள் இருந்தார்கள். பைத்தியமாதலின் முதல் தகுதி ஆடைகளைத் துறத்தல் என்பது எவரிட்ட சட்டமோ. நிர்வாணமாய் நடைபோடும் கலியனன மட்டும் ஊர் சகித்துக் கொண்டது - பைத்தியமென்பதால்தான். ஒரு நாள் காலை ரத்தம் கக்கிச் செத்துக்கிடந்த கலியனை நகராட்சி வண்டி அள்ளிச்சென்று எரித்து வந்தது, கலியன் எதற்குப் பயந்தானோ ... தன்னை பைத்தியமென அறிவித்துக்கொண்டான். எவருக்கும் தொந்திரவு தராமலிருந்து இறந்தான் அவனால் பலன் அடைந்தவர்களே ஊரில் அதிகம்.