Page last updated at Thursdau, January 27 2010 at 11:57:28 PM IST

மிச்சமிருக்கும் சொற்களுக்கான அர்த்தங்கள் ...... - லட்சுமி சரவணகுமார்




      Thadagam -  Noolgalaal Pinnapattavan - Lakshmi Saravana Kumar
லட்சுமி சரவணகுமார்



சில விசயங்கள் எப்பொழுதும் மறக்க முடியாதவைகளாகவும், சில நபர்கள் நினைத்துப் பார்த்து சந்தோசப்படும் படியானவர்களாகவும் இருப்பார்கள். அதிலும் உறவினர்களில் யாராவது ஒருவர் மனநிலை குறைபாடு உடையராயிருந்தால் அவர் சார்ந்த கதைகளும் சம்பவங்களும் கண்டிப்பாக எல்லா விசேச தினங்களிலும் அல்லது உறவினர் கூடுகிற இடங்களிலும் பேசப்படுவதாயிருக்கும். கிராமங்கள் எப்பொழுதும் நகரங்களை ஒட்டிய கிராமங்கள் என்றும், நகரத்தின் வாசனையே இல்லாத கிராமங்கள் என்றும் இரண்டு வாரியாகவே கிடக்கிறது. நகரத்தின் எல்லா மாற்றங்களும் அதை ஒட்டின கிராமங்களுக்கு வந்து விடுமென்பதால் கிராமத்திற்கான அடையாளங்கள் அங்கு குறைவாகவே இருப்பதுண்டு. மாறாக நகரத்தின் கரங்கள் தீண்டாத எவ்வளவோ கிராமங்கள் இன்னும் வரைபடங்களுக்குள் ஒளிந்து கிடக்கிறதுதான். ஆனால் எல்லாவிடங்களிலும் இவர்களின் செயல்பாடுகள் ஒரே மாதிரியானதாக இருக்கிறதுதான் ஆச்சர்யம். அப்படி எனக்கு ஒரு வகையில் சொந்தக்காரனென்று சொல்லிக் கொள்ள முடிகிற ஆள்தான் குமார். எந்த வகையில் உறவு என்பதனை பிறகு சொல்லலாம். ஆனால் ஆளினுடைய அடாவடிகள்தான் முக்கியம். எப்படியும் முப்பத்தைந்து வயதிற்குக் குறையாமலிருக்கும். பயங்கரக் குள்ளம். பார்ப்பதற்கு யார்மாதிரி இருப்பாரென சொல்ல முடியாத அளவிற்கு கொஞ்சம் புதுமாதிரியான ஆள். அந்த ஊர் கொஞ்சம் சின்ன கிராமம்தான் என்பதால் எல்லோரையும் எல்லோருக்கும் தெரியும். அவ்வளவு எளிதாக சாதியை விட்டேல்லாம் பிரித்து விடமுடியாத அவ்வூரில் பாகுபாடில்லாமல் எந்த சாதிக்காரர்களின் வீட்டு நல்லது கெட்டதுகளிலும் மிக முக்கியமான ஆள், கண்டிப்பாக குமார்தான். எந்த வேலை சொன்னாலும் எவ்வளவு வேலை சொன்னாலும் சலிக்காமல் செய்யக்கூடியவரை பெரும்பாலும் தூங்கிப் பார்த்ததில்லை என்று ஊர்க்காரர்கள் சொல்லக் கேட்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். பின்பு கொஞ்ச நாள் அங்கேயே இருந்தபோதுதான் அப்படியெல்லாம் இல்லை அவரும் உறங்கக்கூடிய ஆள் என்பது தெரிந்தது.

சில விசயங்களை புனைவாக்கி சொல்லும்போதுதான் ஊர்க்காரர்களின் மேல கொஞ்சம் பிரியமே வருகிறது.

சின்ன வயதில் காமிக்ஸ் படிப்பவர்களுக்கு கரும்புலி கேரக்டர் ஆதர்ஸமாக இருக்கும். கரும்புலிக்கும் குமாருக்கும் கொஞ்சம் ஒற்றுமை உண்டு. எந்தளவில் சொல்லலாம் ? புலிவேஷங் கட்டி ஆடுகிற அளவிற்கு. ஆனால் இப்படி புலி வேஷங்கட்டுவதில் கொஞ்சம் டெக்னிக்கலாக எய்ம் பண்ணத் தெரிந்திருக்க வேண்டும். லெஃப்ட் டூ ரைட் ரைட் டூ லெஃப்ட்டென ரவுண்டு கட்டி ஆடி வந்தால் சற்றும் டயர்டாகமால் ஆடிக் கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக இசைக்கு ஏற்ற மாதிரி ஆடக்கூடாது. இப்படி புதிராக புலிவேஷங் கட்டியாடுகிற ஒருவருக்கும் சளைத்தவனில்லை. முதலில் நான் அவனைப் பார்க்க நேர்ந்தது உறவினப்பெண் ஒருத்தி வயதிற்கு வந்த சடங்கில்தான். அதற்கு முன்பு சொல்லிக்கேட்ட கதைகளே சுவாரஸ்யமானவை. ஒரு சாம்பிள்...

உள்ளூர்ப் பொங்கல் திருவிழா நடந்து கொண்டிருந்த சமயம், ஆட்டம் பாட்டத்திற்கெல்லாம் குறைவில்லாததுடன் பொறுப்பாக ஊர்க்காரர்கள் பானை உடைக்கிற போட்டியையும் வைத்திருக்கிறார்கள். இளவட்டப் பிள்ளைகளுக்கு இது சவாலானதும் பிகர் உசார் பண்ணுவதற்குமான சந்தர்ப்பமென்பதால் இப்பொழுதும் இந்தப் போட்டிக்கு கிராமங்களில் கொஞ்சம் மவுசு இருக்கத்தான் செய்கிறது. போட்டித் துவங்குகிறது, ரொம்ப நேரமாக பானை அப்படியே இருக்க பானைக்குப் பக்கத்தில் போவதற்குக்கூட ஆளிருப்பதாகத் தெரியவில்லை. ஆர்வங் குறைந்து சுற்றியிருந்த ஆட்களின் கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து செல்லத் துவங்கிவிட்டனர். சலிப்பில் அடுத்து அடுத்து பானை உடைக்கவும் வருவதற்கு ஆட்கள் தயங்க பெண்கள் சத்தமாக சிரிப்பதும் முறைப்பையன்களின் பெயர்களைச் சொல்லிக் கிண்டலடிக்கவும் கிளம்பிவிட்டார்கள். மைக்கில் ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்த ஆளும் அசந்து போய் ஓய்ந்திருந்த நேரம். கூட்டத்திற்குள் எங்கிருந்து வந்தானெனத் தெரியாமல் வந்தவன் பெரிய கம்பொன்றால் பானையை உடைத்து விட்டு ஓடிவிட்டான். சுற்றியிருந்தவர்களுக்கு கொஞ்சம் நேரம் எதுவும் புரியவில்லை. புரிந்த சில நொடிகளிலேயே இருந்த இறுக்கங்களை மறந்து அவ்வளவு பேரும் சிரிக்கத் துவங்கி விட்டார்கள். பானையை உடைத்தவன் எங்கு ஓடினான் என்பதைத் தேடப்போனால் கண்டு பிடிக்க முடியவில்லை. கத்தரிக்க அளவிற்கே உயரமென்பதால் ஏதாவது சந்துகளுக்குள் ஒளிந்து கொள்கிற சந்தர்ப்பம் இருந்திருக்கிறது அவனுக்கு.

மறுநாள் கடைசி நால் திருவிழாவிற்காக சாமி ஊர்வலம் வந்து கொண்டிருக்க சத்தமில்லாமல் வந்து சேர்ந்து கொண்டவன் நெற்றியில் முழுக்க விபூதி குங்குமம், தலை கலைந்து புயலில் அடித்து வந்த காகிதம் போலத்தான் கிடந்தான். முகத்தில் மட்டும் நிற்காத சிரிப்பு. பக்கத்திலிருந்தவர்கள் நன்றாக குடித்திருக்கிறான் என்பதை உண்ர்ந்து கொண்டவர்களாய் குடிச்சிட்டு சாமியத் தூக்காதடா என்று ஒழுக்க விதிமுறைகளைக் கூறி அவனை அனுப்பி வைக்க முயல, பிடிவதமாக நின்றிருக்கிறான். சொன்னால் வேலைக்காகதென ரெண்டு அரைவிட்டு நகர்த்தியிருக்கிறார்கள். வேகமாக கூட்டத்திற்கு முன்பாக ஓடியவன் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு சத்தம் போட்டு அழத் துவங்கிவிட்டான். அழுகையென்றால் வெறுமனே அழுகையல்ல, தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகள் அவ்வளவாலும் ஊர்க்காரர்களை சரிசமமாகத் திட்ட, ஊர்வலம் வந்தவர்கள் என்னடா இம்சையென தயங்கி நின்றனர். அதை முடித்த கையுடனேயே முளைப்பாரி போட்ட பெண்கள் ஊர்வலம் போக வேண்டிய அவசரம் வேறு. தயாராகிக் கொண்டிருந்த பெண்களின் கும்மி மைக்கில் பக்கத்து ஊர்வரை கேட்டுக் கொண்டிருக்கிறது. வம்பாக கையைக் காலைக் கட்டி தூக்கிப் போய் வீட்டில் போட்டிருக்கிறார்கள்.

அடுத்த பக்கம் >





வாசகர் கருத்துக்கள் :





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<