Page last updated at Monday, May 25, 2009 at 11:57:28 PM IST

பறவைகளும் விழிக்காத அதிகாலையில்........ - பரமேஸ்வரி




      Thadagam - Outstanding Womans: Krishnambal - Parameshwari
Krishnambal

நிறை சூலியாய் மணல் மீது ஏறிக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண். தான் வளர்க்கும் ஆடுகளுக்குப் புல் வெட்டுவதற்காக அவள் ஏறுகிறாள். துணைக்காகவும் , தன் குழந்தைகளுக்குக்காகவும் அவள் உழைத்தே ஆக வேண்டும். மலை மீது வலி எடுத்துக் கதறும் அவள், தன்னைச் சமாளித்தபடி தன்னுடன் வந்த பெண்களின் துணையுடன் குழந்தை பெற்று தான் சேகரித்த புல்லுக்கட்டின் மீதே குழந்தையைப் போட்டு இரட்டைச் சுமையுடன் மலையிலிருந்து இறங்குகிறாள். பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்று அதில் ஐந்து குழந்தைகளை இழந்தவள். குடிகாரக் கணவனிடம் அடி, உதை பட்டு கசந்த வாழ்வோடு முப்பத்திரண்டு வயதிலேயே கைம்பெண் ஆனாலும் மனந்தளராமல் குடும்பத்தை நடத்தினால் அவள் தான் நாகம்மாள்.

இன்று மாற்று நோபல் பரிசு பெற்று, இந்தியாவைப் பெருமையுடன் நெஞ்சு நிமிரச் செய்திருக்கும் கிருஷ்ணம்மாளின் தாய் தமிழ் நாட்டின் தென் கோடிக் கிராமமான அய்யங்கோட்டையில் 1926இல் தலித் சமூகத்தில் பிறந்தவர். தாயிடமிருந்து தான் பெற்ற துணிவையே சொத்தாக் கொண்டு, தன் முயற்சியால் கல்லூரிக் கல்வியை முடித்தார். தன் தாயைப் போலவே துன்பப்படும் தலித் பெண்களின் முன்னேற்றததுக்காகப் பாடுபட வேண்டும். சமூக அக்கிரமத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்பவற்றைத் தன் இலக்குகளாகக் கொண்டார். காந்தியடிகளின் சர்வோதயா இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு வினோபா பாவேவடன் இணைந்த களப்பணி புரிந்தார். அங்கு தான் அவர் தன் வருங்காலக் கணவர் ஜெகந்நாதனைச் சந்தித்தார். பெரும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த ஜெகந்நாதன், காந்தியடிகளின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தம் கல்லூரிக் கல்விய இடையிலேயே துறந்தார். சட்ட மறுப்பு இயக்கம் , வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றிலும் பங்கு கொண்டார். இந்தியா விடுதலை பெற்ற பிறகே தம் திருமணம் என்று ஒரு மனதாய்த் தீர்மானித்திருந்த இருவரும் 1950 இல் தம்பதிகளாயினர்.

காந்தியடிகளுடன் ஒரே மேடையில் பேசவும், 1954 இல் மார்ட்டின் லூதர் கிங்கைச் சந்திக்கவுமான அறிய வாய்ப்புகளைப் பெற்ற கிருஷ்ணம்மாள், இந்திய விடுதலைக்குப் பிறக தம் கடமை முடிந்ததென ஒதுங்கி இராமல், சுதந்திர இந்தியாவின் சீரான கட்டமைப்பிற்கும் தன்னாலியன்றதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதலுடன் செயலாற்றத் தொடங்கினார். சென்னையில் அவர் ஆசிரியர் பயிற்சிப் படிப்பைப் முடித்து வந்த சமயத்தில் ஜெகநாதன், 1950 முதல் 1952 வரை வினோபாவுடன் பூமிதானா இயக்கத்துக்காக வட நாடு முழுதும பயணித்தார். நிலமற்றவர்களுக்கு நிலங்களைப் பங்கிட்டு அளித்து அவர்களையும் உயர்த்துவதன் மூலமே சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே அவர்தம் நம்பிக்கை. சென்னை திரும்பிய ஜெகந்நாதனுடன் கரங் கோர்த்து 1953 முதல் 1967 வரை தமிழ்நாடு முழுதும் பயணித்து பூமிதானத் திட்டத்திற்கும் கிருஷ்ணம்மாள் அயராது பாடுபட்டார். உச்ச வரம்புச் சட்டத்தற்குப் புறம்பாக, தன் உறவினர் மீதும் பினாமிகள் பேரிலும் பதியப்பட்டிருந்த நிலங்களை, பெருநில உடைமையாளர்களிடம் இருந்து சுமார் நான்கு மில்லியன் ஏக்கர்களைச் சத்திபாக்கிரக முறையில் போராடிப் பெற்ற இவ்விருவரும் அதனை நிலமற்ற விவசாயிகளுக்குப் பங்கிட்டும் கொடுத்தனர். இதற்காகச் சுதந்திர இந்தியாவிலும் இவர்கள் சிறை செல்ல நேர்ந்தது.

தமிழகம் முழுவதும் சுற்றி வந்த இத்தம்பதியினர் ஓரிடத்தில் நிலை கொள்ளக் காணமாயிருந்தது .1968 இல் நடைபெற்ற கீழ் வெண்மணிப் படுகொலை - கூலியை உயர்த்திக் கேட்டதற்காக. நாற்பத்து நான்கு தலித் மக்கள், பெண்கள், குழந்தை உட்பட தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த கிருஷ்ணம்மாள் தான் உடனடியாகக் கீழ் வெண் மணிக்குச் செல்ல விரும்பவதாகத் தெரிவித்த போது சற்றும் தயங்காமல், 'நீ போய்ப் பணியாற்று. நான் உடன் சேர்ந்து கொள்கிறேன்' என்று ஊக்குவித்தார்.

கீழ்வெண்மணிக்குச் சென்றவரின் முதல் பணி, அப்படுகொலைக்குக் காரணமான தீண்டாமைக் கொடுமையின் அடிவேரை அசைப்பதாக இருந்தது. 1970 களில் - தீண்டாமை மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப் பட்ட நேரம் அது – தலித் மக்கள் செருப்பணியவும், பொதுக் கிணறுகளில் நீரெடுக்கவும் தடை இருந்தது. கோயிலினுள் சென்று வழிபடும் உரிமைய (தலித் மக்கள்) கனவிலும் நினைக்க முடியாது. இதற்கெல்லாம் எதிராக அவர்களின் சிறு முனகலையும் கூட உயர்சாதியனரால் தாங்க முடியாத நலையில், எதிர்த்தவர்களை மரத்தில் கட்டி வைத்து மாட்டுச் சாணம் கரைத்த நீரைக் கட்டாயப் படுத்தி புகட்டினர் இருபதாம் நூற்றாண்டில் கூட இறுக்காமாய் இருந்த சாதியவன் கட்டமையப்புகளுக்கு எதிராகவும் நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தை சொந்தமாக்கவும் 'உழுபவர்களுக்கே நிலம் சொந்தம்' என்ற இயக்கத்தை 1981 இல் தொடங்கினர் (Land for tiller’s freedom – Lafti). வங்கிகளில் கடன் பெற்று அதன் மூலம் நிலமற்றோர்க்கு நிலங்களை வாங்கித் தருதல், அவர்கள் மூலமாகவே கடனை அடைத்தல், சுற்றுச் சூழலைப் பாதிக்காத வீடுகளைக் கட்டித் தருதல், உழவுப் பணிநடைபெறாத காலங்களில் விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு, அவரவான் ஆர்வத்திறகேற்ப தையல், தச்சு, நெசவு, கொத்து வேலை, கணிணிப் பயிற்சி, இயந்திரங்களைப் பழுது பார்த்தால் போன்ற தொழில்களைப் பயிற்றுவித்தல் ஆகியவை இவிவியக்கத்தின் பணிகள். ஓரிரு வரிகளில் நம்மால் எழுதப்படும் இப்பணிகளைச் செய்து முடிக்க இவர்கள் பட்ட பாடு மிக அதிகம். தலித்கள், நில உடைமையாளர்களாக மாற்றம் பெறுவதை விரும்பாத பெருநில உடைமையாளர்கள் மற்றும் உயர்சாதியினர், இவர்களால் கடனைத் திரும்பக் கட்ட முடியமா என்று சந்தேகப்பட்ட வங்கி அதிகாரிகள், தங்கள் நிலை குறித்து உணர்வற்ற தலித் மக்கள் ஆகியோருடன் மிகக் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. 1975 இல் ஜெயப் பிரகாச நாராயணன் அழைப்பின் பேரில் புத்தர் ஞானமடைந்த பெருமை உடைய புனித கயாவுக்குச் சென்றனர். அங்கு ஒரு கோயில் பூசாரி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தை வளைத்து வைத்திருந்ததுடன் தலித் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வூர் மக்களைத் திரட்டி எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தியதன் மூலம் இப்பிரச்சனையை முக்கியமானவர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்த கிருஷ்ணம்மாள், சுமார் 20,000 ஏக்கர் வரை அப்பூசாரியிடமிருந்து மீட்டு முப்பது கிராமங்களில் இருந்த நிலமற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்தார். வட நாட்டுக்குச் சென்று அவர்கள் மொழியறியாமலே அவர்களுக்காகப் போராடடிய அனுபவம் பற்றி 'அந்த மக்களுடன் பேசுவதற்கு அவர்களுடைய மொழியைக் கற்க வேண்டிய அவசியமில்லை ஏனெனில் நாங்கள் எங்கள் இதயத்தின் வழியே பேசினோம்' என்று பதிவு செய்துள்ளார்.

அடுத்த பக்கம் >





வாசகர் கருத்துக்கள் :





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<