Page last updated at Thursday, January 04, 2010 at 11:57:28 PM IST

The Room - Uma Shakthi




      Thadagam -   The Room - Movie Review - Uma Shakthi
The Room

The Room

ரோலண்ட் ரெஃபர் இயக்கியுள்ள ‘தி ரூம்’ திகைக்கும்படியான மனோவியல் சார்ந்த ஜெர்மனிய திரைப்படம். இதை சாதாரண திகில் படமாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது அதில் உள்ளோடியிருக்கும் இருத்தல் சார்ந்த மனநிலையை சித்தரிக்கும் படமாகவும் கருத்தில் கொள்ளலாம். காண்பவரின் கற்பனைக்கு நிறைய பங்களிப்பு தருகிறது ‘தி ரூம்’. இதில் முக்கியமான கதாபாத்திரங்கள் இருவர் மட்டுமே. ஆனால் கண்களுக்குப் புலப்படாத மூன்றாவது சக்தி நமக்குத் தெரியாமல் நம்மை கண்காணித்தபடி நம் வாழ்வை நிர்ணயித்துக் கொண்டிருந்தால் அது நம் இயல்பை எப்படியெல்லாம் பாதிக்க வைக்கும் என்பதை உணர்த்துகிறது இத்திரைப்படம்.

சோபி எகிப்தியாலஜியில் ஆராய்ச்சி செய்யும் மாணவி. செய்தித் தாளில் வித்யாசமான ஒரு வேலை வாய்ப்பு விளம்பரச் செய்தியை வாசித்து அதற்கு விண்ணப்பிக்கிறாள். ஊரின் கடைகோடியில் இருக்கும் ஒரு வீட்டை அங்கேயே தங்கி அதை ஆறுவாரம் பராமரித்தால் பணம் தரப்படும் என்பதால் பொழுது போனபடியும் இருக்கும், தன் ஆராய்ச்சிக்கு அத்தொகை உதவும் என நினைத்து அந்த பெரிய வீட்டிற்கு வந்து சேருகிறாள். அங்கு இதைப் போலவே விண்ணப்பித்து வேலை கிடைத்து வந்திருக்கும் கிரிஸ்டோப் எனும் இளைஞனை சந்திக்கிறாள். ஒரே சமயத்தில் மற்றவருக்குத் தெரியாமல் இருவருக்கும் அங்கு வேலை கிடைத்திருப்பதை அறிந்தும், யார் தங்களின் முதலாளி என்பதை அறியாமல் குழப்படைகிறார்கள். முன்பின் தெரியாத ஒருவனுடன் ஆறு வார காலம் எப்படி தங்குவது என யோசித்த சோபி திரும்பி சென்றுவிடலாம் என முடிவு செய்கிறாள். க்ரிஸ்டோப் ஒரு அமெச்சூர் நாடக நடிகன். அவனுக்கும் இந்த சூழல் மிகவும் வித்யாசமாகத் தோன்றவே கிளம்பலாம் என யோசிக்கையில் அவர்கள் இருவரின் பெயருக்கு ஒரு பதிவுத் தபால் வருகிறது. அதை தயங்கியபடி வாங்கி பிரித்துப் பார்த்தால் அந்த வேலைக்கான முன் பணம் வரைவோலையாக அனுப்ப்ப்பட்டிருந்த்து, அதனுடன் ஒரு கடிதமும் இருந்த்து. அதில் அந்த வீட்டில் அவர்கள் எந்த அறையிலும் தங்கிக் கொள்ளலாம், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், ஆனால் பூட்டப்பட்டிருக்கும் ஒரு அறையை மட்டும் எக்காரணமும் கொண்டும் திறக்க்க் கூடாது என்று எழுதியிருந்த்து. மற்ற அறைகளின் சாவி அவர்கள் கைக்குக் கிடைக்கிறது, அந்த ரகசிய அறையைத் தவிர. மன சஞ்சலத்துடன் ஒப்புக்கொண்டு குழம்பிய மனநிலையில் வேறு வழியின்றி அங்கு தங்க இருவரும் முடிவு செய்கிறார்கள்.

மர்ம்மான அந்த அறையின் கதவைப் பார்த்துவிட்டு அமைதியும் அமானுஷ்யமும் நிறைந்த அவ்வீட்டின் மாடியறையில் எதிரும் புதிருமான அறைகளில் இருவரும் தங்குகிறார்கள். முதலில் சோபி தானுண்டு தன் படிப்பு உண்டு என எந்நேரமும் புத்தகமும் கையுமாக அவ்வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து எழுதுவதும் வாசிப்பதுமாய் இருக்கிறாள்.

க்ரிஸ்டோபின் பாடுதான் திண்டாட்டமாக இருந்த்து. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவனை ஓர் இட்த்தில் கட்டிப் போட்ட்தைப் போல உணர்கிறான். சோபியிடம் வலியன போய் பேசுகையில் அவள் ஏதாவது சொல்லி மூக்குடைக்கிறாள். அவளுடைய செய்கை சில சமயம் வருத்தமளித்தாலும் தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராமல் அவளிடம் வம்படித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக்கினான் க்ரிஸ்டோப். ஒரு கட்ட்த்தில் அவனுடைய பேச்சுத் தொல்லை தாங்காமல் அவளும் நட்பின் கரங்களை நீட்டுகிறாள். இருவரும் ஒன்றாக சமைத்து சாப்பிடும் அளவிற்கு நட்பு விரிவடைகிறது. அங்கிருந்த சைக்கிளில் அவன் பக்கத்து ஊருக்குச் சென்று அவளுக்கு வேண்டியதை வாங்கித் தருகிறான்.

ஒரு நாள் க்ரிஸ்டோப் சோபிக்கு பரிசாக ஒரு நீச்சலுடையை வாங்கி நேரில் அதைத் தர தயக்கப்பட்டு அவளுடைய அறையில் வைத்துவிடுகிறான். அடுத்த நாள் அவ்வுடையை அணிந்து கொண்டு கிரிஸ்டோப்புடன் ஏரிக்கரைக்குச் செல்கிறாள். இருவரும் பேசியபடி நீந்துகிறார்கள். களைத்தபின் கரைக்கு வந்து சிறுது நேரம் ஓய்வெடுக்கிறார்கள். க்ரிஸ்டோப்பின் கண்களுக்கு தண்ணீரில் யாரோ எழும்பி பின் உட்செல்வது போல மாயக் காட்சி தெரிகிறது. அவன் அதிர்ச்சியடைந்து மீண்டும் பார்க்கையில் நீர்நிலை மிகவும் அமைதியாக இருக்கிறது. தன் மனப்பிரம்மையாக இருக்க்க்கூடும் என அதை புறக்கணித்து சோபியுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அவள் தன்னைப் பற்றி தன் படிப்பைப் பற்றி, முன்பு தன்னுடன் கிட்ட்த்தட்ட ஓரினச் சேர்க்கியாக இருந்த தோழியைப் பற்றி, நிறைய குழந்தைகள் இருந்த சிதைந்த குடும்பத்தில் பிறந்து மிகவும் அச்சுறுத்தி வளர்க்கப்பட்ட தன் பால்யத்தைப் பற்றியென அவனிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறான். அவனும் தன் கனவுகளைப் பற்றியும் தன் விதவைத் தாய் அவனை எப்படி கண்டிப்புடன் வளர்த்தாள் என்பதையும் சுருக்கமாகச் சொகிறான். அவர்களின் நட்பு சிறிது நீளம் தாண்டி ப்ரியமாக மலர்கிறது.



அடுத்த பக்கம் >





வாசகர் கருத்துக்கள் :




இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<