காலை மணி 11. நெருங்கித் தள்ளும் வரிசையில் வாகனங்கள். அவை கக்கும் புகை மண்டலம். முந்திச் செல்ல ஏங்கித் தவிக்கும் வாகனங்களின் ஆரன் சத்தம். சந்து விடாமல் ஆக்கரமிப்பு செய்யும் ஆட்டோ. சைக்கிள்காரர்களின் இடையில் புகுந்து பிச்சை எடுக்கும் சிறார்கள். நடை பாதை கடை பாதையாக மாறி வியாபாரிகளின் போட்டி இரைச்சல். இத்தனைக்கும் நடுவில் சகஜ கதியில் இயங்கிக் கொண்டு இருக்கும் மனித இனம். காலைக்கடன் செய்யும் நேர்க்தியில் சாலை கடனையும் செய்ய பழகி விட்ட நிலை. போட்டிக்கு ஐந்து அறிவு படைத்தவைகள் வேறு. இவை அனைத்தும் சென்னை மாநகரின் அனைத்து சாலைகளிளும் நிகழ்பவை. மைலாப்பூர் மட்டும் இதற்கு விதி விலக்கு அல்ல. கபாலீசுவரர் கோயிலின் பின்புறம். அர்த்த நாரீஸ்வரர் தெரு. தெருவின் இருபுறமும் சரிசமமாக வீடுகள். தெருவிற்க்கு பெயர் வர இதுதான் காரணமோ. அனைத்துமே தெரு வீடுகள் - தீப்பெட்டிகளை வரிசையாக அடுக்கி வைத்தது போல. சர்மா சாஸ்திரிகளின் வீடு மட்டும் இதற்கு மாறானது. பெரிய வீடு . நாற்புறமும் இடம் விட்டு கட்டப்பட்ட வீடு. 1929 என்று முன் சுவரில் சிமென்டில் எழுதப்பட்டு - மஞ்சள் வர்ணம் அடிக்கப்பட்ட - தெற்க்கு பார்த்த மாடி வீடு. மாடிக்கு செல்லும் படிகட்டுக்கள் பக்கவாட்டில். கிழக்கு பார்த்த முன் நுழைவு வாயில் - உள்ளே விசாலமான அறை. தெருவைப் பார்த்தப்படி பெரிaய ஜன்னல்கள். மேற்கு பக்கமாக உள்ள அறையில் கட்டிலில் ஞானசேகரன் - ஆழ்ந்த உறக்கத்தில். மேற்க்கு மற்றும் தெற்க்கு புறத்தில் ஜன்னல்கள் மேல் கொக்கி சரியாக போடாததால் காற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது. வாடைக் காற்று அவன் முகத்தில் வந்து தாக்கியது. சிலிர்த்துக் கொண்டு எழுந்தான். 5 11 அங்குலம் உயரம். சிவந்த நிறம். 23 வயது முடிந்து 24-ன் ஆரம்பம். காவேரி நீர் குடித்து தினவேடுத்து வளர்ந்த உடம்பு. மேற்க்கு புற ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கிறான். அந்த வீட்டின் பக்கவாட்டில் இருந்த முருங்கை மரத்தின் கிளைகளும் - முருங்கை காய்களும் - பூவும் - பக்கத்து வீடும் - வீட்டைத் தாண்டி தெருவும் தெரிகின்றது. மேகம் மூடிக் கொண்டு வந்தது. காற்று சில்லேன்று அடித்துக் கொண்டு இருத்தது. மழை துளிகளாக ஆரம்பித்து ஜோவென்று பெய்யத் தொடங்கியது. ரோட்டில் ஆள் மாராட்டம் காணாமல் போணது. ஜந்து அறிவு படைத்தவைகள் எப்போதும் போல மழைக் குளியலில். காற்றின் வேகத்தில் மழை உள்ளே வர ஞானசேகரன் எல்லா ஜன்னல்களையும் மூடிவிட்டு ஒரே ஒரு ஜன்னலை மட்டும் ஒருக்களித்து திறந்து மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். மழைதான் எத்தனை அழகு.ஒரே நேர்கோட்டில் சீராக - வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக கைக் கோர்த்து பூமியில் விழுந்து தெரிக்கின்றனவே. தற்க்கொலை செய்துக் கொள்வதில் கூட இத்தனை நேர்த்தியா ? அல்லது பிறந்த வீட்டில் இருந்து புகு்ந்த வீட்டிற்க்கு போகும் போது மன(மழை)ப்பெண் சிந்தும் கண்ணீரோ ? விளங்கவில்லை. மழையின் சீற்றம் அதிகமாயிற்று. முன்னே இருக்கும் முருங்கை மரத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. முருங்கை மரம் பச்சை பசேலேன இருந்நது.மழைத் துளிகள் வேகத்தில் முருங்கைப் பூக்கள் சிகறின. மரத்தின் பசுமை நெஞ்சை வருடியது. பசுமையான நினைவலைகள் மனதில்..... தஞ்சாவூர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான வயல்களும்... அடுத்த பகுதி