Page last updated at Thursday, January 27, 2010 at 11:57:28 PM IST

நெடுங்கதை : அவரவர் பிம்பங்கள் - த. பாலாஜி


முந்தைய பகுதி

ஏதோ ஒரு பெண்ணின் பெயர்ல - எம் பொண்ணை பத்திரமா மாப்பிள்ளை கிட்ட சேர்க்கிற வரைக்கம் கண்ணுல விளக்கெண்ணையை விட்டுகிட்டுத் தான் பார்க்கனும் போலிருக்கு என்று சொண்தைக் கேட்டதிலிருந்து அந்த ஆசையும் சுத்தமாய் போயிற்று. படிப்பை முடித்து ஒரு நல்ல வேளையில் சேர்ந்தவுடன் கல்யாணத்தை முடிச்சிடலாம் என்று இரு வீட்டாரும் பேசியதிலிருந்து விழுந்து விழுந்து படித்தேன். படிப்பை போய் எவன் 3 வருஷம் 5 வருஷம் வெச்சான் தெரியல. மொத்தமா சேர்த்து ஒரு வருஷம் வைக்க கூடாத என்று தோன்றும். மொத்தமா சேர்த்ர் ஒரு வருஷம் வைக்க கூடாதா என்று தோன்றும். சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல நல்லா படிச்சா டபுள் புரோமோஷன் தருவாங்களே அதுமாதரி கல்லுரியிலும் தரக் கூடாதா? விஜயலட்சுமி விஜயலட்சுமி என்று மனசு கிடந்து அடித்துக் கொள்ளும்.என்னைக்கு நான் உங்கிட்ட வாய்விட்டு பேசப்போறேன் ? உன்னை முழுசா ஒரு முறை பார்க்கப் போறேன் ? அந்த உறவினர் கல்யாணத்துல மறைஞ்சு மறைஞ்சு நீ பார்த்த அந்த பார்பையே என்னை நிலைகுலைய வெச்சுடிச்சே.

நேருக்கு நேராக என் கண்ணை நீ பார்த்தா ஆயிரம் வாட் மின்சாரம் தாக்குமோ? விஜயலட்சுமி பெயருக்கு ஏற்றால் போல் அழகாகவே இருக்கிறாய். என் அத்தை மாமாவும் கூட இப்படி இல்லையே. நீ மட்டும் எப்பட் இவ்வளவு அழகாக இருக்கிறாய்? சரி ஏதோ நான் போன ஜன்மத்துல செய்த புண்ணியம் என்று வைத்தக் கொள்கிறேன். 12 வது வகுப்பு வரை மட்டுமே படிக்க பள்ளிக்கூடம் அனுப்பினாள் என் அத்தை. அதுவும் பெண்கள் பள்ளிக்கு . பக்கத்து வீட்டு பெண்களோடுத்தான் போக வேண்டும் வர வேண்டும்.பள்ளிப் படிப்பை முடித்து கல்லுரிக்கு போக வேண்டும் என்று விஜயலட்சுமி எவ்வளவு சொல்லியும் அத்தோடு அவள் படிப்பை நிறுத்தியாகி விட்டது.

பிறகு மிகவும் பிரயத்தனப்பட்டு கரஸ்பான்டன்டில் பி.ஏ படித்தாள். அத்தோடு அவளுக்கு தெரிந்த்தேல்லாம் ஆயிரம் சதுர அடியில் இருக்கும் அவள் வீடு விட்டு வாசல் கொல்லைபுறம் கொல்லைபுறத்தில் இருக்கும் ரோஜா செடிகளும் செம்பருத்தி செடிகளும் தான். ஆங்.......என்னையும் கூட ...

....தட்.....தட்......தட்.............தட்.............
....தட்.....தட்......தட்.............


விஜயலட்சுமி நினைவு வரும்போதேல்லாம் என் இதையம் ஏன் இப்படி ஓசை எழுப்புகின்றது என்றே தெரியவில்லை.மனசு லேசாகிப் போனது போல் ஒரு உணர்வு. வயிற்றுக்குள் குறுகுறுப்பு....

....தட்.....தட்......தட்.............தட்.............
....தட்.....தட்......தட்.............


என்னங்க ...

நான் தான்...... காயத்திரி..... காயத்திரி வந்திருக்கிறேன்....

தொடரும் !





வாசகர் கருத்துக்கள் :






இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<