Page last updated at Thursday, December 20, 2009 at 11:57:28 PM IST

கருத்தபாட்டை மகன் ஜேசுராஜா - நரன்


சம்பவம் நடந்தது வசந்த மாளிகை படம் வந்த புதுசுல. கோவில்பட்டி கூடலிங்கம் ஸ்டோர்ஸ்ல அதே மாதிரி ஊதாகலர் சில்க் துணி எடுத்து பஸ்ஸ்டாண்டுக்கு பக்கத்துலயிருக்கிற பெ.சி. டைய்லர் கடையில தச்சு திருவிழாக்கு போடுறதுக்கு பெரியப்பா ரெடியாயிருந்தாரு .திருவிழாவுக்கு ஏழெட்டு நாளைக்கு முன்னாடியே சட்ட தைச்சு வாங்கிட்டு வந்துட்டாரு. வீட்டுல யாரும் பாக்காம மச்சி ரூம்குள்ள போயி ஒரு மூணு, நாலுவாட்டியாவது போட்டு பார்த்திப்பாரு, சாத்துர்வயிருந்து சவமுத்து சித்தப்பா வரவேண்டியது தான் பாக்கி. அப்ப அங்க ஒரு டீக்கடையில சரக்கு மாஸ்டரா வேலை பாத்துத்கிட்டு இருந்தப்ப நாங்கெல்லாம் காலையிலேயே கண்மாய்ல குளிச்சிட்டு புதுத்துணி போட்டுகிட்டோம். பாட்டையா தால் எல்லா துணிக்கும் மஞ்ச தடவி கொடுத்தாக. பாட்டையாவ தெரியாத ஆளுக எங்கவூரு பக்கம் யாரும் கிடயாது. கருகருன்னு பனைமரம் மாதிரி இருப்பாரு. மிக்கேல்சாமின்னு பேரு சொல்லி கூப்பிடாம கருத்தபாட்டயான்று தான் கூப்பிடுவாக . சுத்துப்பட்டுல யாருக்கு பாம்பு கடிச்சாலும் எங்க வீட்டுக்கு தான் தூக்கிட்டு ஓடியாருவய்ங்க. பாட்டையா தோள்ல தொங்குற பால்துண்ட சுத்தி சுத்தி பார்வை பாப்பாரு. துண்ட கத்தும் போது வாய்க்குள்ள ஏதோ மந்திரம் மாதிரி சொல்லுவாரு. வெளிய கேக்காது. சில நேரம் பெரியப்பாவும் பார்வை பாப்பாரு. ஆனா அவருக்கு இதல்லாம் இஷ்டமில்ல.

குருவிநந்தம் தேவமாதா கோவில்லயிருந்து அந்தோனி குரூஸ் சாமியார் வந்திருந்து மாதாவ வெளியே கொண்டுவந்து சப்பரம் ஜோடிச்சுகிட்டு இருந்தாக .பெரியப்பாவும், சின்ராசு மாமாவும். இன்னும் ரெண்டு மூணு பேரோட கிழக்கால போனாக. கிழக்கால போனா எங்க போவாகன்னு எல்லாத்துக்கும் தெரியும். அங்க பசுவந்தனை காரனுக சாராயம் வித்துகிட்டு இருப்பாய்ங்க. நேத்து சாயந்திரத்துலயிருந்து மூனு, நாலுவாட்டி கிழக்கால போயிட்டு வந்துட்டாரு. நேத்து நயிட்டே பெரியப்பாவுக்கும் தெக்காட்குலயிருக்கிற அருளாநந்கனுக்கும் தான் சண்டே. அருளாந்தன் எனக்கு சித்தப்பா முறதான் . அய்யாக்கூட நல்லா பேசுவாப்ல. ஆனா பெரியப்பாவுக்கும் , அவருக்கும் தான் ஆகாது, எல்லாம் சோக்காரக தான், ரெண்டு வருசத்துக் முன்னாடி தூத்துக்குடியில அய்யனார் சுவீட் ஸ்டால் ல வேலைக்கு சேந்தாப்ல போன வருசத்துல அய்யா கூட ஒருக்க பார்த்திருக்காரு. கூப்ட்டு கலர் வாங்கி குடுத்தாப்லாம், அவருதான் கல்லாவுல இருந்தாராம், நல்ல காசு, நேத்து நைட்டு போட்ட ரெண்டு எம்.ஜி.ஆர். படமும், வில்லியனுர் மாதா படமும் அவரு காசு குடுத்துதான் போட்டாக. அதுதவிர இந்த வருசம் சீரியல் லைட்டு, சப்பரம் ஜோடிப்பு எல்லாம் அவருகாசுதான், ஊருலயிருந்து புதுசா வாங்கியிருக்கிற டி. வி.எஸ் 50 யில தான் வந்தாரு. பெரியப்பா கணேசன் ரசிகரு. இந்த வருசம் எப்படியாவது அவரு செலவுல திருவிழாவுக்கு ஒரு கணேசன் படம் போட்றனும் நெனச்சாப்ல... முடியல காசு முடக்கம்.

நாலஞ்சு பேரோட கிழக்கால போயிட்டு ஊருக்குள்ள வரும் போதே மாதா படம் ஒடிக்கிட்டுயிருந்துச்சு, படம் முடிஞ்சு எம்.ஜி.ஆர் படம் போட்டாக. ரெண்டு ரீல்தான் ஓடியிருக்கும். பெரியப்பாவும், பால்ச்சாமி மச்சானும் பின்னாடி அருளாநந்தன் பிடிச்சு அடிச்சிக்கிட்டு இருந்தாக. பாடத்த நிப்பாட்டி போட்டாக. அருளாநந்தன் அக்கா வீட்டுக்காரரு ஓடி வந்து பக்கத்துல கிடந்த பந்தல் மூங்கிலயெடுத்து பெரியப்பாவ அடிச்சுப்புட்டாரு, உடம்பெல்லாம் திண்டு... திண்டா வீங்கிப் போச்சு. வீட்டுல துங்கிட்டிருந்த அய்யம்மா ஓடிவந்து வாயிலயும். வயித்துலயும் அடிச்சுக்கிட்டு கத்துச்சு.நல்ல நாளும் அதுவும் சொக்காரகவுகுள்ள சண்டப் போட்டுட்டு திரியுறிங்ளேடா. அய்யா தான் சமாதானம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு. வேண்டா வெறுப்பா விரிச்சிருந்த சாக்க எடுத்துக்திட்டு கௌம்பிட்டோம். வீட்டுக்குள்ள வரைக்கம் சினிமா சத்தம் கேட்டது. பெரியப்பாவாலதான்.

சப்பரம் கௌம்பி ரெண்டாம் தெருவுல இருக்கும் போது தான் பெரியப்பா வீட்டுக்கு வந்தாரு. நல்லக்குடி. பாட்டையா வஞ்சிக்கிட்டுயிருந்hதாரு. அவருபாட்டுக்கு மச்சிவீட்டுக்குள்ள போயி எதயோ உருட்டிக்கிட்டுயிருந்தாரு.

பெரியப்பா வந்து சாமிக்கு காணிக்கவைக்கணும் எங்கயும் போயிறாதிகன்று சொன்னப்ப பெரியம்மாவ வஞ்சிட்டு விறு...விறுன்று கோவில் வாசலுக்கு வந்துட்டாரு. அய்யா அங்க சப்பரம் தூக்க போயிட்டாரு. நாங்கெல்லாம் மெழுகுதிரி, ஊதுவத்தி, வெத்தலை பாக்கு வங்கு கடைக்கு ஓடிகிட்டுயிருந்தோம். வீடல் வந்து விசுவாச பெரியப்பா ஆவலாதி சொல்லிக்கிட்டுயிருந்தாரு. ஜேசுராசா பய இடுப்புல இம்மாம் பெரிய கத்திய வச்சிக்கிட்டு சுத்திகிட்டு திரியறான். சின்னய்யா என்னன்னு போயி பாருங்க. திருநாளும் அதுவுமா சண்டக்காடு போட்டுட்டு திரியாம பாட்டையா சவரிமுத்து சித்தப்பாவ கூட்டிக்கிட்டு கோயில் வாசலுக்கு போனாரு. அதுக்குள்ள கோயில் வாசல்லயிருந்து பெரியப்பாவும், பால்ச்சாமி மச்சானும், இன்னும் ரெண்டு மூணு பேரு யாருன்னு தெரியல... ரெண்டாம் தெருபக்கமா போயிட்டாக. பாட்டையா பின்னாடியே ஓடுனாரு.

சப்பரமும், மாதாவும் நடுத்தெருவுல கிடந்தாக. யாரோ தகவல் சொல்லி போலீசு வந்துருச்சு. பெரியம்மாவும், அய்யம்மாவும் , தலயிலயும், வயித்துலயும் அடிச்சிக்கிட்டு அழுகுறாக . கேப்பாரு பேச்சக் கேட்டு இப்படி பண்ணிப்புட்டியேடா. அந்தப்பக்கம் அருளாநந்தன் சித்தப்பா வீட்லயிருந்து அழுக சத்தம். ஊரே ஒரு நிமிசத்துல சுடுகாடு மாதிரி ஆயிப் போச்சு. அய்யாவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. சப்பரத்துக்கு பின்னாடி அருளாநந்தன் சித்தப்பா ரெத்தமா செத்துக் கெடக்காரு. போலீசு யாரயும் பக்கத்துல விடல பெரியப்பாவயும், பால்சாமி மச்சானையும் காணோம். கூட நாயக்கமாரு பய ஒருத்தனும் இருந்தாக சொன்னாக எல்லாம் மேற்கால தான் ஓடிப்போனதா சொன்னாக போலீசுக்கிட்ட . எல்லா போலீசும் ஒடிடுச்சு. அப்பெல்லாம் ட்ரவுசர் போட்ட போல்சு தான். ஓரு போலீசு மட்டும் முழுக்கால் சட்டை போட்டிருந்தாரு , அவரு தான் எல்லாத்தயும் எல்லாபக்கமும் தேடச் சொன்னாரு.

அய்யாவுக்கு பயம், அம்மாவையும், எங்களையும் கௌம்பச் சொல்லிக் கிட்டுயிருந்தாரு. அதுக்குள்ள பழையபடி ஓ...ன்று யாரோ அழுகுற சத்தம் , பால்சாமி மச்சான் அம்மாதான். போலீசு அவரு கையில வெலங்கு மாட்டி கண்மாய் பக்கமாயிருந்து கூட்டிட்டு வர்றது தெரிஞ்சது. பெரியப்பாவக் காணோம் அய்யா அம்மாவையும் , அக்காவையும் அகஸ்டின் மாமாக்கூட விருதுநகருக்கு போகச் சொல்லிடாரு. நான் வரலைன்னு சொல்லிட்டாரு. சாயந்திரம் வரைக்கும் தேடுனாக.பெரியப்பா மட்டும் கிடைக்கல. இன்னொரு ஆளு பேரு தெரியல. மதியம் அழுதுகிட்டே வந்து போலீசுக்கிட்ட அம்புட்டுக்கிட்டாரு. தெனமும் போலீசு வந்துச்சு வீட்டுகுகு. பாட்டையாவ கூட்டிக்டு போயிட்டாக. அய்யாவும், சித்தப்பாவும் பின்னாடியே காமநாயக்கன் பட்டி போலீசு ஸ்டேசனுக்கு போனாங்க. நான் கோயில் வாசலுக்கு வௌயாடப் போயிட்டே.ன எங்க பெரியப்பா பையன் ஆரோக்கித்தக் கூட்பிட்டேன். அவன் வரலன்னு மண்டைய ஆட்டிட்டான். அழுதுக்கிட்டுயிருக்கிற எங்க பெரியம்மா பக்கத்துலயே உக்காந்திருந்தான். வீட்ல யாரும் சாப்பிடல.

கோயில் வாசல்ல பந்தல பிரிச்சுக்கிட்டுயிருந்தாக. வாழை மரத்த அவுத்து கண்மாய்க்குல்ல போயி போட்டாங்க. நான் அதிலியிருந்த பிஞ்சு வாழக்காய நாலங்சுப் பிச்சு ட்ரவுசர் பைக்குள்ளப் போட்டுக்கிட்டேன். எல்லா பசங்களும் அப்படிதான் பண்ணுனாங்க. மூணா நாத்து அதிகாலையிலேயே ஒரே சப்தம். இன்னைக்கும் போலீசு வண்டி வந்திருச்சு பெரியப்பா தான் அது. அவரு புது வேஷ்டியெல்லாம் செம்மன் சகதி. போலீசுக்காரங்க பூட்சு எல்லாம் செம்மன் சகதியா ஓட்டியிந்துச்சு. செம்மண்ணு சகதின்னு நிச்சயம் மயிலோடைப் பக்கம்தான் இருந்திருப்பாரு. அய்யம்மாதான் ஓடுச்சு. பெரியம்மாவும், ஆரோக்கியமும் பின்னாடி அழுதுகிட்டே போனாங்க பெரியப்பா தலைய நிமிரவேயில்ல.





வாசகர் கருத்துக்கள் :






இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<