Page last updated at
7/27/2010 12:00:10 AM IST
பெயர் தெரியா பேரழகி.. - சிவ குமரன்
ஒவ்வொரு நாளும் உனை பின் தொடர்ந்தேன்.
ஒரு வார்த்தை பேச...!
உன்னருகில் வந்ததும் வார்த்தைகள்
என் நெஞ்சுக்குள் வட்டமிட்டதே தவிர
நா எழவில்லை!
என் ஏக்கங்கள் எனக்கு முன் செல்கிறது
பேரழகியே! எனறென்றும்;
உன்னை பின் தொடர்கிறேன்;!
நீ சென்ற பின்னும்! நீ விட்டு சென்ற
உனது பிம்பங்களை!
நான் எனது கண்களால் படம்பிடித்து
நெஞ்சிக்குள் சேமித்துக் கொள்வேன்.
நான் பேச நினைத்ததை நெஞ்சுக்குள் வைக்கப்பட்ட
உன் நினைவுடன் பேசியபடியே!
நான் வீடு சென்றடைவேன்.!
இப்படியாக பயணித்துக் கொண்டு இருந்தது நாட்கள்!
ஒர் நாள் மாலை வேலையில் அலுவலகம் முடிந்து இருவரும் வந்து கொண்டிருந்தோம், சிறு வேலை ஒன்றை செய்யாமல் வந்ததை நினைத்து மறுபடியும் அலுவலகம் நோக்கி ஓடுகிறேன். நான் ஓடுவதற்க்கு முன்பாகவே நீயும் ஓடுகிறாய், குடையை வைத்து வந்து விட்டேன் என்று சொல்லியபடி.
நம் இருவரின் அலுவலகமும் எதிர் எதிரே உள்ளது, இருவரின் வந்த வேலையும் முடிந்தது, ஆனால் எனக்கு முன்பாக நீ சென்று கொண்டு இருக்கிறாய். நான் உனக்கு பின்னால் வந்து கொண்டு இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்த என் நடையினை வேகப்படுத்தி உனக்கு முன்பாக செல்கிறேன். என் நிலையை நீ அறிந்து விட்டாய் என்பதை, நீயோ உனது புன்சிரிப்பால் எனக்கு உணர்த்தி விட்டாய் அதைப்பார்த்த எனக்கோ. ஒவ்வொரு நாளும் நாம் இருவரும், தற்ச்செயலாகத்தான் சந்தித்து கொள்கிறோம் என்ற விதத்தில் நான் செய்யும் ஒவ்வொரு செயலும் உனக்கு தெரிந்து விடகிறதே என்பதைக் கண்டு, அசடுவழியும் முகத்துடன் வெட்கத்தில் தலைக்கவிழ்ந்தபடி நடக்கிறேன்,
நீயோ இவை அனைத்தும் தெரிந்தும் இயல்பான நிலையிலேயே நடந்து வருகிறாய்.
அப்போதுதான் பார்க்கிறேன். நாம் நடந்து போகும் நகரத்து தார் சாலை மண்பாதையாக மாறியிருக்கிறது சுற்றும் முற்றும் பார்கிறேன் நகரத்தின் வண்டிகள், கட்டிடங்கள் அனைத்தும் மறைந்து பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை இயற்கை வளம் நிறைந்த பழமரங்கள் உடலுக்கு இதமூட்டும் தென்றல் காற்று, மரங்கொத்தி பறவைகள் ரீங்கரிக்கும் வண்டுகள் இவைகள் இசைக்கும் இசைக்கு குயில்கள் பாடுவதும் அந்த இனிமையான கீதத்திற்கு மயில்கள் நடனம் ஆடுவதும் அந்த ரம்மியமான சூழலில் நாம் நடந்து சென்றுக் கொண்டு இருக்கிறோம்;..
அந்த சூழலில் மாலைக் கதிரவனின் இதமான வெளிச்சத்தில் உன்னைக் காண்கிறோன். உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த அழகையும் சேர்த்து வைத்திருக்கும். பரிமள வள்ளி, அங்கயற்கண்ணி, இவர்களைக் காட்டிலும் தூயதாகவும் பிரகாசமாகவும் அழகு பெற்று காட்சியளிக்கிறாய்.
நானோ வைத்தக்கண் வாங்காமல் உன்னையே பார்த்தபடி நிற்கிறேன். ஆனால் நீயோ கண்டும் காணாததுபோல் எனைக் கடந்து செல்கிறாய்.
ஒரு திசையில் இருந்து சத்தம் வருகிறது திரும்பி சத்தம் வந்த திசையைப் பார்க்கிறேன். அங்கே பல வகையான வண்ணப்பறவைகள். சத்தம் எழுப்பிக் கொண்டு அங்கே ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் குளித்த வண்ணம் இருந்தது. எனக்கு இதற்கு முன் அந்த ஆற்று வழியே சென்றது ஞாபகம் வந்தது. அந்த ஆற்றின்; கற்களின் மீது கால் வைத்துக் தாண்டிச் சென்றால். அக்கரைக்கு சென்று நாம் பொகும் இடத்துக்கு சீக்கிரம் செல்லலாம் என்பதால், இதை உனக்கு தெரியப்படுத்த நினைத்து நமக்கு முன்பாக சற்று தொலைவில் சென்று கொண்டு இருப்பவர்களைப் பார்த்து. நாம் போகும் இடத்துக்கு குறுக்கு வழி இருக்கு என்கிறேன்.
அவர்களின் காதுகளில் நான் பேசியது விழவில்லை அவர்கள் நடந்தபடி இருந்தார்கள். நான் சொன்னதைக் கேட்டு எனக்கு முன்பாகச் சென்று கொண்டிருக்கும். பெயர் இருந்தும் பெயர் தெரியா என் பேரழகியான நீ. திரும்பி என்னைப்பார்த்து.
“இப்படிப் போனால் குறுக்குவழியா” என்று கேட்கிறாய்,
நீ என்னிடம் பேசிய வியப்பில் செய்வதறியாது செயலிழந்த ஒரு இயந்திரம் போல் நான் ஆமாம் என்று சொன்னேனா இல்லை தலையாட்டினேனா என்பதைக்கூட மறந்து, “நீ என்னிடம் பேசினாயா...?
என்று சந்தோஷத்துடன் உன்னை பார்த்து கேட்கிறேன்.
நீயோ பல வருடம் பழகியவனிடம் வருபவளை போல். என்னருகில் வந்து நிற்கிறாய் என்னையே பார்க்கிறாய் என் வலது கையின் விரலில் உன் விரலை கோர்த்து என் தோள் மீது சாய்கிறாய். உன் மென்மையான கை என் கையைப் பற்றியதும், என் உடலின் அத்தனை நாளங்களிலும் சந்தோஷத்தை அனுபவித்தபடி உனைப் பார்க்கிறேன். நீயும் பல வருட ஏக்கங்களின் பலனை ஒரு நொடியில் அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்.
உன்னை பார்த்து. “என்னை உனக்குப் பிடிக்குமா..? என்று நா தழுதழுக்கக் கேட்கிறேன்.
நீயோ மறுபடியம் என் கரத்தை அழுத்திப் பிடிக்கிறாய். அந்த அழுத்தத்தில் உனக்கும் என்னைப் பிடிக்கும் என்பதைத் தெரிந்து கொள்கிறேன்.
மனதுக்குப் பிடித்தவர்களிடம் நாம் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆயிரம் ஆயிரம் அன்பு கலந்து பேசுவோம். அது மாதிரி என்னிடம். “குறுக்கு வழின்னா எவ்வளவு தூரம்..? என்று கேட்கிறாய்.
நான் சற்று தூரத்தில் தெரியும் மின் கம்பத்தை காண்பித்து தூரத்தை சொல்கிறேன். நீ அதனை பார்த்து சரி என்று சொல்லி குறுக்கு வழியாக என் கையைப் பிடித்து நடக்க ஆரம்பிக்கிறாய். நான் சிறு நொடியில் கூட உன் முகத்தை காணாமல் விட்டு விடுவேனோ என்று எண்ணி என் இமைகள் இமைக்காமல் உன் தோல் மீது கைவைத்தபடி உன்னையே பார்த்தபடி வருகிறேன்.
நாம் நடந்து போகும் வழியெங்கும் பல புதுமையான தாவரங்கள். அவைகள் இயல்பாகவே வெளிப்படுத்தும் வாசத்தைவிட நமக்காக அதிகமாகவே வெளிப்படுத்துகின்றான, இந்த அற்புதமான சூழலில் உன்னை பார்த்து இது நாள் வரை உன்னிடம் சொல்ல நினைத்து உள்ளுக்குள்ளே அடைத்து வைத்து இருக்கும் ஆசைகளை உன்னிடம் வெளிப்படுத்தியபடி வருகிறேன். இதனைக் கேட்டு, உங்கள் காதல் எனக்கு தெரியும் என்பது போல் நீ உன் கண்களை முடி தலை அசைகிறாய்,
உன் முகத்தைப்பார்த்து நான் “என் பேரழகியே…” என்கிறேன்.
அதைக்கேட்ட சந்தோஷத்தில் உன் அழகான முகம் நானத்தால் சிவப்பேறி சுடர்கிறது உன் அழகை ரசித்தபடியே உன்னைப்பார்த்து. நான் மட்டுமே பேசிகொண்டு வருகிறேன்இ நீயும் கொஞ்சம் பேசு என்றேன்இ உன்னிடம் மௌனம் மட்டுமே இருக்கிறது. நான் அப்பொழுது தான் யோசிக்கிறேன;
நாம் இருவரும் காதலர்களாகி விட்டோம் ஆனால் காதலியின் பெயர் தெரியவில்லையே என்று எண்ணி நான் உன்னை பார்த்து. ஆமாம். பேரழகியே… உன் பெயர் என்னவென்று சொல்ல வில்லையே உன் பெயர் தான் என்ன..? என்று நான் கேட்டதும். உன் குறும்பு சிரிப்பால் சிரித்தப்படியே என்னை பார்க்கிறாய். நான் உன் உதடுகளை மட்டுமே பார்த்த வண்ணம் இருக்கிறேன். என்னையே பார்த்தபடி இருக்கும் நீ திடீர் என்று வேறுபக்கம் பார்க்கிறாய். அங்கு இரண்டு வகையான பழங்கள் ஒரே கிளையில் காய்த்து தொங்கியபடி இருப்பதை பார்த்து நீ. இது கடிகாரப்பழம் தானே? என்கிறாய் நான் அப்படியொரு பழத்தையும் பெயரையும் முதல் முறையாக பார்க்கிறேன். மனதுக்குள், ஒரு வேலை இந்த பழத்திற்கு பேர் கடிகாரப்பழமாக இருக்கும்மோ, அதுவும் நீ சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும். என்று எண்ணி ஆமாம். என்றேன்.
“அப்ப மணி என்னன்னு பார்த்து சொல்லுங்க.!”
என்று உன் கொஞ்சும் குரலில் சொல்லியபடியே என்னை பார்க்கிறாய். நான் குழம்பி பழத்தில் எப்படி மணி பார்க்க முடியும் அதுவும் கடிகாரப்பழம்னு ஒரு பழமா என்று யோசித்தப்படி உன்னை பார்க்கிறேன். நீ என் குழம்பிய மனதை கண்டு. உதடுகளை திறக்காமல் உள்ளுக்குள்ளே சிரிக்கிறாய் என்னையே பார்த்தபடி. அப்போது தான் தெரிகிறது நீ என்னிடம் விளையாட்டு தனம் செய்து இருக்கிறாய். என்பது எனக்கு தெரிய வருகிறது. நீ சொல்லும் சொல்லுக்கு நான் தலையாட்டி பொம்மை போல் ஆமாம் என்றதில் நீ அடைந்து இருக்கும். சந்தோஷத்தை பார்த்து நானும் சந்தோஷம் கொள்கிறேன். நம் இருவரின் இதயமும் ஒன்றிணைந்து ஒரே விதமன மகிழ்ச்சியை அனுபவித்தபடி இருக்கிறோம்…
நமக்கு முன் சென்றவர்கள் நம்மைதேடி வருகிறார்கள்; நம் காதல் கொன்டு இருப்பதை பார்த்து முதல் தடவை காதல் கொண்டு விட்ட இரு இதயங்கள் முழு ஆவேசத்துடன் காதலித்துக் கொண்டு இருக்கின்றன என்று பேசியவாரே சென்று விட்டார்கள். மறுபடியும் இருவரும் தனிமை பெற்ற நிலையில் இருக்கிறோம். நீ என் இதயத்தில் கைவைத்தபடி கேட்கிறாய்.
“உங்களை மாதிரி என்னால் எப்படி அந்த ஆற்றை கடக்க முடியும்.?” என்கிறாய்.
நான் உனக்கு விலக்கி சொல்கிறேன். மழைக்காலங்ளில் தேங்கி நிற்கும்; தண்ணீரை கடக்க கற்களைப் போட்டு தாண்டி செல்வோமே அது மாதிரி என்று உனக்குச் விளக்கிச் சொல்கிறேன். நான் சொன்னது நம் இருவரின் கண்களுக்கு மட்டும் காட்சியாக தெரிந்தது. அந்த காட்சியை கண்டு நீ புரிந்துக் கோண்டாய். பின்பு அங்கு ஓடும் ஆற்றைப்பார்த்து. “அப்பப்பா அதெல்லாம் முடியாது எனக்குப் பயமாக இருக்கு” என்று உன் கெஞ்சும் குரலில் சொல்கிறாய். உன் அழகான வார்தையை கேட்டு நான்
“வேறென்ன செய்வது” என்கிறேன்.
நீ தூரத்தில் கை காட்டுகிறாய் அங்கே ஒரு தாய்பறவை தன் குஞ்சை அலகால் கொத்தி பூ மாதிரி தூக்கிக் கொண்டு போகிறது இதைப் பார்த்து நான் உன் ஆசையை புரிந்து கொள்கிறேன். நீ வெட்கத்தில் உதடுகளை மூடிச் சிரித்தபடி தலை குனிகிறாய். உன் சந்தோஷத்தைக் கண்டு நானும் சந்தோஷமாக உன் தலையின் மீது கைவைத்து மார்போடு அணைத்து நெற்றியில் முத்தமிடுகிறேன், பிறகு என் இரு கரங்களாலும் உன்னை அப்படியே தூக்கிக் கொண்டு ஆற்றை நோக்கி நடக்கிறேன்..
நமது அனைத்து விதமான பொருத்தத்தையும் கண்டு, பல வண்ணப் பறவைகள் கரகோஷமிட்டன. குயில்கள் பாடல் இசைத்தன மயில்கள் நடனம் புரிந்தன நாம் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி ஆற்றில் இருக்கும் ஒவ்வொரு கல்லையும் கடந்து அக்கரைக்கு பயணம் செய்து கொண்டிருக்கையிலே…
கலைந்து விட்டது என் கனவு. இது கனவு என்று நம்புவதற்கே எனக்கு சில நிமிடம் ஆனது.…
கனவை சுமந்து கொண்டு அவள் வரும் வழியே அவளுக்காக காத்து நின்று கொண்டிருந்தேன் ஆதிகாலையில் கன்டகனவு பலிக்கும் என்ற சந்தோசத்தில்.
அவள் வரவில்லை அலுவலக நேரம் தான்டி சென்று விட்டது இன்று அவள் வரவில்லை என்று எண்ணி அலுவலகம் சென்றேன்.
மாலை அலுவலகம் முடிந்து அவள் நினைவுடன் வந்தேன். ஆனால் எனக்கு முன்பாக சென்று கொண்டிருந்தாள். அவளை பார்த்த மகிழ்ச்சியில், நான் அவள் பின்னால் வருகிறேன் என்பதை தெரியப்படுத்த நினைத்து என் நடையை வேகப்படுத்தி அவள் முன் செல்ல முயன்று அவள் மேல் மோதி விட்டேன்.
அவள் கோபம் கொண்டு “பார்த்து வரமாட்டிங்களா’’ என்று அதட்டலாக என்னை பார்த்து கேட்டாள்.
கிழே தண்ணீர் தேங்கிருந்ததால் அவள் சற்று ஒதுங்கியிருக்கிறாள் என்பது கிழே இருக்கும் தண்ணிரை பார்த்த போது தான் நான் தேரிந்துக்கொண்டேன். பின்பு அவளை பார்த்து என்னை மன்னித்து விடுங்கள் என்றேன். இதைக்கெட்டு என்னை முறைத்தபடியே நடக்க ஆரம்பித்தாள்
நான் குறுக்கிட்டு “நான் உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்” என்கிறேன். கொஞ்சம் நடுக்காத்துடனே.
அவள் நின்று என் முகத்தை பார்த்து “என்ன பேசவேண்டும்…? என்றாள் கொஞ்சம் கோபமாகவே.
அந்த கோபத்தைக் கண்ட எனக்கு பேச நினைத்த வார்த்தைகள் அனைத்தும் கரைந்து விட்டது. இன்று அதிகாலையில் கண்ட கனவில் பேசியதையும் இப்போது அவள் பேசியதையுமஇ; ஒப்பிட்டு பார்க்கிறேன். எனக்கு சிறு பயம் பற்றிக்கொண்டது. இருந்தாலும் பல நாள் ஏங்கிய அந்த ஒரு வாய்ப்பை இன்று இழந்துவிடக் கூடாது என்று எண்ணி அவள் முகத்தை பார்த்து மனதை திடப்படுத்திக்கொண்டு “நான் உங்களை காதலிக்கிறேன்.” என்றேன்.
இதனை கேட்டு எந்த சலனமற்று நின்றுருந்தாள்.
“உனக்காகவே வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’’ என்று என் மொத்த ஆசையும் கலந்த அந்த வர்த்தையில் சொன்னேன்.
“அதற்கு நான் சம்மதிக்கவேண்டும்.” என்றாள் வேகமாகவும் கோபமாகவும்.
அவ்வார்த்தையை கேட்ட எனக்கு என் உடல் நடுங்கும் அளவுக்கு என் இதய துடிப்பு துடித்தது. அவள் முன் மவுனமாக நின்றேன்.
பின்பு அவள் என்னை பார்த்து “என்னிடம் இந்த ஒரு வார்த்தையை பேசுவதற்கே உங்களுக்கு இவ்வளவு நாள், நான் எப்படி உங்களை காதலிக்க முடியும். ஓவ்வொரு நாளும் என்பின்னால் வந்தீர்கள், என்னிடம் பேசுவீர்கள் என்று நானும் எதிர்பார்த்தேன், நீங்கள் என்னிடம் பேசவில்லை, ஒவ்வொரு நாளும் நீங்கள் பேசாமல் போனதாலஇ; உங்கள் மீது கோபம் தான் வந்தது, காதல் வரவில்லை. நாளடைவில் நான் உங்களை மறக்க ஆரம்பித்தேன். இப்போது என் மனதில் நீங்கள் இல்லை;. இப்போழுது என் வீட்டில் மாப்பிள்ளையும் பார்த்து விட்டார்கள், நிச்சயமும் நடந்து விட்டது.” என்று சொல்லி முடித்து நடக்க ஆரம்பித்தாள்…
துடிதுடித்துக் கொண்டு இருந்த என் இதயத்தில் ரத்தங்கள் தண்ணீராக மாறி கண்கள் வழியே வடிந்து கொண்டு இருந்தது. “பேரழகியே….” என்று அழுகுரலில் அவளை பார்த்து கூப்பிட்டேன். திரும்பி என்னை பார்த்தாள்.
“உங்களுடைய பெயர் இது வரை எனக்கு தெரியாது, நான் உங்களுக்கு ஒரு பெயர் வைத்து உங்களுடன் பேசிக் கொண்டு இருந்தேன், பெயர் தெரியா பேரழகி.. என்று, நீங்கள் என்னை விட்டு பிரிந்து சென்றாலும் என்னுடைய பேரழகி நீங்கள் தான்.” என்று அவளைப் பார்த்து சொன்னேன்
இதைக் கேட்ட அவள் நின்று பார்த்தாள்.
நான் அவளை பார்த்து. நீங்களும் “என் மீது ஆசைப்பட்டுள்ளீர்கள் அதனை நான் தவற விட்டுவிட்டேன், அதற்க்கான தண்டனையை உங்களிடமே பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்.” என்றேன்.
இதனை மௌனமாக கேட்டு கொண்டு இருந்தவள் “என்ன…”? என்றாள்.
“என் கன்னத்தில் நீங்கள் ஓங்கி அறைந்து விட்டு செல்லுங்கள்” என்றேன்.
சிறிதும் தாமதிக்காமல் என்னை நோக்கி வேகமாக வந்தாள் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தள்;. நான் கண்களை முடியபடி ரசித்தேன், கனவில் என் கையைப் பிடிக்கும் போது ஏற்ப்பட்ட அதே உணர்வு அவள் அறைந்த போது இருந்தது. கண்களை திறந்து அவளை பார்திதேன் அவள் புன் சிரிப்பால்; என்னையே பார்த்தவாரு இருந்தாள், எனக்கு ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தேன். ஒரு பெண் ஒரு ஆணை ரோட்டில் அறைந்தால் அவன் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து இருப்பான், என்று எண்ணி ரோட்டில் சென்றவர்கள் ஒன்று கூடிவிட்டார்கள். என்ன எது என்று கேட்ட வண்ணம் இருந்தார்கள். அவர்களிடம் அவள்
“நான் கல்யாணம் செய்து கொள்ள போகிறவர் முதல் முதலில் என்னிடம் ஆசைப்பட்டு கேட்டார் அதான் குடுத்தேன்.” என்று சொல்லியபடியே என்னோடு நெருங்கி நின்றாள்.
நான் ஒன்றும் புரியாத சந்தோசத்தில் நின்று இருந்தேன். அவள் என்னை பார்த்து, “இத்தனை நாளா என்னை எப்படி தவிக்க விட்டிருப்பீர்கள் அதான் உங்களை தவிக்க விட்டு பார்தேன்.”
நான் உணர்ந்த சந்தோசத்தைச் சொல்ல வார்த்தைகளேயில்லை சொர்கத்திற்கே சொர்கத்தை காட்டியமாதிரி இருந்தது எனக்கு.
பின்பு என் இருகரங்களாலும் அவள் முகத்தை அள்ளியபடியே அவளைப் பார்த்து “ஓ பேரழகியே.” உன் பெயரைச் சொல் என்றேன்,
அதற்கு அவள் “பேரழகியே அழகாகத்தான் இருக்கிறது என்னை அப்படியே கூப்பிடுங்கள் எனக்கும் அதுதான் பிடித்து இருக்கிறது” என்று சொல்லி என்னை இருகக் கட்டிக்கொண்டாள்.
sp.shiva kumaran [ film assistant director ]
no: 37 2nd crass street
New colony
alwar thirunagar
Chennai.87
Cell: 9841924655
Email: shiva.fd6000@gmail.com
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :