Page last updated at 6/29/2010 10:34:01 PM IST

நாவல் விமர்சனம் : தாண்டவராயன் கதை [ பா.வெங்கடெசன் ] - கீதாஞ்சலி பிரியதர்சினி


தமிழில் தற்போது வெளிவந்துள்ள புதினமான "தாண்டவராயன் கதை" யை முன் வைத்து சில கருத்துக்களை சொல்ல வேண்டி உள்ளது. தமிழ் இலக்கிய வடிவங்களில் உள்ள நாவல் என்கிற அளவை வைத்துப் பார்த்தால் இது அளவில், பக்கங்களில், பிரமாண்டமாகவே வெளிவந்துள்ளது. அதே சமயம் தமிழின் வாசகர்களையும் நாம் குணத்து மதிப்பிடவும் முடியாது. பல விமர்சனங்களை, மதிப்பீடுகளை, புறக்கணிப்பையும் கவனமாகத் தாண்டி பல பிரமாண்ட ஆக்கங்கள் வெற்றி பெற்றதை பல்வேறு மொழிகளும் எழுத்தாளர்கள் மனதளவில் உணர்ந்தபடியே இருக்கிறார்கள்.

ஆனால் தமிழில் எந்தவொரு இலக்கியப் பாடப்புக்கும் அதன் விஸ்தரிப்பிற்கம், தோல்விக்கும் மதிப்பீடுகள் தான் முக்கியமான காரணம் என்பதையும் தாண்டியே நாம் பார்க்க வேண்டி உள்ளது, மாபெரும் ஆக்கங்களை உருவாக்குகிற மனித மனங்களின் கடும் உழைப்பு காலமும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அது வாசகர்களைச் சென்று சேர்ந்து தனக்கான ஒரு இடத்தை பெற்று அமர்ந்து விடுவதற்கும் மறுபடியும் காலம் தேவைப்படுகிறது. இந்த நாவலின் பரீசீலனையில் காலம் என்பதை மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய தேவை இருக்கிறது. நம்மில் உள்ள சராசரி பொதுப் புத்திகளோடு நம் இந்த நாவலை அணுகவே முடியாது என்பது தான் ஒரு தேர்ந்த வாசகன் அறிலது யதார்த்த, மாய யதார்த்த, பின் நவினத்துவ நாவல்களின் தோய்ந்த மனம், ஒரு காலம் பின்னோக்கி நகர்கிற இவ்புதினத்துடன் ஒப்புமையுடன் நகர்கிற இவ்புதினத்துடன் ஒப்புமையுடன் நகாவே சில நாட்கள் படிந்து விடும்.

தாண்டவராயன் கதை இராப்பத்து, பகல்பத்து எனும் திவரங்கக்கோவில் மார்கழி உற்சலம் போல முதல் பத்து மற்றும் இராண்டாம் மூன்றாம் பத்துக்களை தனக்குள் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு பத்து அத்தியாயமும் தனித்தனியாக மனித வாழ்வை, தனி மனிதர்களை நிலப்பரப்பை, மொழியை விவரிப்பதாகவே அமைந்துள்ளது, நாவலை விரிவுபடுத்துகிறது. மரங்களின் வேர்களைப்போல காண முடியாத நுட்பங்களைத் தன்னகத்தே வைத்து உள்ளது.

விமர்சனமாய் இந்நாவலின் கதைச்சுருக்கத்தை இங்கு கூறுவதில் எனக்கு விருப்பமில்லை, மாறாக இந்தப் படைப்பு நோக்கிய ஒருபார்வையாளராக கூற முடியும். எப்போதும் நான் ஓயாமல் விலாதிப்பவன். ஆதனாலேயே இந் நாவல் குறித்து யாரிடமாவது பேசினால், எப்படிப் பாடித்தீர்கள் இந்தத் தலைகாணியை என்ற கேள்வியை முன் வைத்ததை உணர்ந்ததேன், பெண்களால் நிறைந்த, பெண் ஓருத்தியின் காதலை உணர்ந்த ஒரு ஆணின் தீராத பயணத்தைப் பற்றியே எழுதப்பட்ட நாவலாய் எனக்கு இது பட்டதால் , பெண் என்கிற முறையில் என்னால் இந் நாவலை விருப்பமுடன் படிக்க முடிந்தது என்பதே விமர்சனமாய் என் பதில்.

துயிலார் எனும் பழங்குடி இனத்தவரின் ஆதி கடவுளான தாண்வராயன் கதை பெண்களைப் போன்றே நிலத்தின் சரித்திரத்தில் இருந்து, இருப்பிடத்தில் இருந்து துரத்தியடிக்கப்படுகிற பூர்விக நாடோடிகளாகவும், பகலில் மறைந்து திரிகிறவர்களாகவும், கடும் உழைப்பையே உடல் மொழியாக கொண்டிருப்பர்களான துயிலார் எனும் இனத்தின் மறந்து போன மனிர்களைப் பற்றிய கதையாக நீண்டு செல்கிறது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் குறையாமல் வளந்திருக்கிறது. இந்த நாவலின் பல்வேறு பகுதிகள் தமிழில் இதுவரை எழுதப்படாதவை கதை சொல்லி என்றே ஒரு அத்யாயத்தில் தலைப்பு இடம் பெற்றிருந்தாலும் கதை சொல்லி என்ற ஒருவராக யாரும் இந்த காலின் கதைகளை எளிதாக சுருக்கி விட முடியாதது. இதன் ஒரு அம்சமாக உள்ளது. கதைகளுக்குள் இருக்கிறோம் என்றே தெரியாமல் நாமும் கதைகளை மறந்து எதிரானவைகளை எழுதிக்கொண்டிருக்க முடியாது..

கதைநாயகியாக வரும் எலினார் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படும் பெண் தனது விரோதமான கிராமத்தில் உள்ள காட்டின் ஒளி ஒன்றினால் பார்வையிழந்து போவதும், அதை சாபம் என்றெண்ணி பலவருடங்கள் வாழ்வை மருந்துகளுக்காக தொலைப்பதும் இந்தியாவில் இல்லாமல் பிறிதொரு ஐரோப்பிய நாட்டில். ஆனால் ஆங்கிலேயர்களின் வரவு இந்தியாவிற்குள் நுழைவதும் அதன் சிகரம் மற்றும் வளமை மிகுந்த நிலப்பரப்பின் மீதுள்ள தீராத ஆசைகளும் தான் இது தவிர இந் நாவலின் மூலம் ஒடுக்கப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு மனிதனின் சந்ததியினரின் மறைக்கப்பட்ட வரலாறும் தான் என்பது புலனாகிறது.

இது எழுதப்பட்ட விதம், சொல்லப்படும் விதம் ஆகியவற்றின் மீதான மீதி சாகஸமே படிப்பதைத் தூண்டுகிறது. கதைகருக்குள் தீர்வுகளைத் தேடி அலைவதும், அதுவே கதைகளாகவும் ஆகிவிடுவதும் இதன் தனிச் சிறப்பு.

மேலும் பணிப்பெண் கொப்கம்மா அவளின் அபிமானம், குறைந்து விடாத அன்பும் காதலும் கூடலும் காமத்தின் பல்வேறு ரூபங்கள் நிறைந்துள்ளப் பகுதிகள் பல்வேறு பக்கங்களில் தவறாது இடம் பெறும் மெல்லிய முணுமுணுப்பாக விலியத்தின் சாமைசஸ்கள் புத்தர்கள்களை மௌனமாக்கும் கதாபத்திரம் என வியப்பின் அடையளங்களை நாம் தடயாமன பல இடங்களில் வைத்துச் செல்கிறோம். வர்ணாசிரம கொள்ளைகளின்படி பிரித்து வாழ்ந்தாலும் பெண்களின் தினமும் அன்பும, தியாகமும், ஆண்களின் மனப்போக்கும் எப்போதும் ஒரேபோல கலத்தால் அழிந்து போகாமல் கரைந்துவிடாமல் இருப்பதும் புலனாகிறது. நீலவேணி பாதையைப் பார்க்கும் போதும், பூக்காரி கதையை வாசிக்கும் போதும் நமக்கு அனுடபவமாக கிடைப்பது வழிகளை இழந்த பெண் ஒருத்தியின் உலகை எழுதிச் செல்வதும், அவ்வளவு எளிதான ஒன்றல்ல கலாலசி ரியரின் கற்பனை உலகு புலன்களால் உருவாக்கப் பட்டடுள்ளதை நல்வாசகன் உணர முடியும்.

நாவலின் முக்கிய கதாபாத்திரங்களாக அனைவருமே வருகிறார்கள் , பேய்களின் வகைகள் உட்பட கூத்துப்பகுதிகளாக வருபவை அதிகமாகும். இந்த கதைக்களன் நடக்கும் காலம் பதினாறாம் லூயி பிரான்ஸ்தேசத்தை ஆண்ட காலமாக இருக்கிறது முதற்பகுதியில், நாவலின் இரண்டாம் பகுதிகள் , மூன்றாம் பகுதிகள் இந்தியாவின் நிலப்பரப்பு கிழக்இந்திய கம்பெனிக்காரர்கள் வருகையினால் இந்தியா சிதைவுற ஆரபித்த நாட்களை கணக்கில் எடுத்துள்ளது. தென் பகுதியின் தமிழகம் மற்றும் சென்னை பட்டனத்தின் எல்லைகள் கேரளப்பகுதிகள் என பல்வேறு நிலப்பகுதிகள் அதன் வர்ணனைகள் அதன் மக்கள் இவர்களுடன் வரும் பழக்க வழக்கங்களும் கூடவே வருகின்றன. ஏன் இலையெல்லாம் ட்ரிஸ்ட்ராம் எனும் படித்த ஆங்கிலேயனுக்கும், சதுரப்பரப்பு வாசியான துரதிஷ்டம் பிடித்த தேவதையான இயந்திரவியல் படித்த மாணவியும் ,அவனது மனைவி ஆகிய எலினார் எனும் பெண்ணுடனும் இடைவிடாமல் தொடர்பு கொள்கின்றன என்ற கேள்விக்கான விடையே இந்த நாவலை படிக்க வைக்கிறது எனலாம்.

இந்நாவலின் ஆக்கத்தில் பா.வெங்கடேசனின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. மேலும் உருவாக்கத்தில் பங்கேற்ற பெண்களின் உழைப்பும் வணங்க வைக்கிறது. மொழியிலிருந்து எழுந்து விரிகிற கதைகள் வாசகனை புதுவெள்ளமென அபாயச் சுழலில் சிக்க வைக்கிற அபாயத்தை பல்வேறு சர்க்கஸ்களில் காண்பிப்பதும் ஒரு வாசிப்பில் தீராத நுட்பமும் இதன் பலமும் பலவீனமுமாகிறது எனலாம், இருப்பினும் வரலாற்றையும் அதோடு சேர்த்து புவியின் அமைப்பையும் கூர்ந்து அலதானிக்கும் வாசகர்களுக்கு தொன்மத்தின் உள்ளுணர்வுடன் கட்டமைத்த பல பகுதிகள் பெருமையுடன் நினைவு கொள்ளத்தக்க இடங்களாக அமைந்துவிடும் ஒரு யாத்ரீகனின் மனதுடன் நாவலில் பயணித்தால் நாவல் முடியும் போது நம் ஒரு வழிக்காட்டியாக மாறியிருப்பதை உணரமுடியும்.

தமிழின் எந்தவொரு படைப்பிலும் வெளிவராத பல பகுதிகள் இந்த நாவலில் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. இழு பெரும் தேசங்களின் செழுமையான கலாச்சராம் பேசப்படுகிறது. ஒன்றின் ஆள்வதற்கான திட்டமும் அதே சமயம் மற்றொன்றில் சுதா எதிர்ப்பும், மாயத்தன்மையும் அலைந்தவாறே உள்ளது. பாரிஸ் நகரத்தின் வறுமையை மீறி நடந்து முடிந்த நமது ஒரு புரட்சியை காட்சிப்படுத்துவதும், கூத்துக்கலையின் பல்வேறு உன்னத பராக்கிரமக்ளை உணர்ந்து எழுத்தில் வடிப்பதும் சாதாரணமான செயல்களல்ல இது எரிச்சலை உருவாக்கும் அளவுக்கும் சொற்களின் பின்னல் இருக்கிறது. ஆனாலும் நாம் உடனே எதிர்த்துப் பேசமுற்படுவது கூட ஒரு காட்டைப் பார்த்து நமக்கான சாலையை எங்கு அது வைத்திருக்கிறது என்று அபத்தமாக கேட்பது போல் உள்ளது. எழுத்து முறையை சிலர் கையாள்வதும் கூட தமிழில் ஒரு விதமான எதிர்வினையோ எனவும் எண்ண வைக்கிற படைப்பு இது கொங்கம்மா எனும் சேரிப்பெண் கூறவதாக இவர் எழுதியுள்ளதையே போல, இங்கு உடல்களுக்கு மதிப்பில்லை யார் வெற்றி பெற்றாலும் தொல்வியுற்றாலும் அடங்கிப் போகிற உடல்கள் போர்வெறியை எப்போதும் தீராக் காமத்தின் தீர்த்துக் கொள்ளப் போராடி தோற்றுக் கொண்டேயிருப்பவை. கிழக்கு வேதானங்களின் அசட்டு உனறல்களோடு கடக்கும் உடல்கள் இறுதியாக, காலத்தின் பெரும் திட்டமிடலும் கடும் உழைப்பும் வெளியீட்டு தினமும் சரிவர அமையப் பெற்றிருக்கிற பெரும் ஆக்கம் இது.

பெருமதங்களான சைவமும் சாக்தேயமும், வைணவமும், பௌத்தமும், சாத்தீரிகமும் ஊரு இழைகளாக செய்யப்பட்ட நிலப்பரப்பை கூறுகிறது. முற்பகுதியில் விலிவயத்தை துணைக்கு அழைத்து கொள்கிறது, அறிவியலையும், ஆன்மிகத்தையும் மனித மனமெனும் மெல்லிய சாகு கொண்டு பிணைத்திருக்கிறார் .





வாசகர் கருத்துக்கள் :





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<