Page last updated at Wednesday, July 05, 2010 at 11:57:28 PM IST

கவிதைகள் - வேல் கண்ணன்


1. மன வட்டம்

முதலுக்கும் முடிவிற்கும்
ஊசலாடிக்கொண்டியிருக்கும்
சிதறிய எண்ணத்தின்
தவிப்புகளைக் ஆதாரமின்றி
சுழலவிடும் வட்டப்பந்து.


உனதுயென எனதுயென
பிரித்தறிய முடியாதவைகளை
யாராலும் அடையாளம் காணமுடியவில்லை
விடுபடுதலின் விதிகளை
மனனம் செய்தும் பலனில்லை.


வனத்தின் ஏதேனும் ஒரு
முனையிலிருந்து ஊற்றெடுக்கும்
நீருற்று என்னை நோக்கி
....வரும் ... வருகிறது
எனவும் நினைத்துகொள்ளும் மனம்


2. நிர்வாணத்தை கவனித்தல்

சன்னலற்ற உள்தாழிடப்பட்ட அறையின்
கண்ணாடி முன் நிர்வாணமாய் நின்றிருந்தேன்.
உற்று கவனிக்கும் யாரோ
அருவெறுப்பான அழுகும்
என் நிர்வாணத்தைப்பற்றி பேசவும் கூடும்
அவர்களின் நிர்வாணத்தை மறைத்தபடி.
கேட்பவர்கள் தன் நிர்வாணத்தை
விடவும் பெரிதாக்கி கொள்ளலாம்
அவரவர்களின் அறையினுள் நுழையும் வரை.
கவனிக்க:
அவ்வறையை உற்று நோக்குபவனாகவும் நானிருக்கலாம்




வேல் கண்ணன்





வாசகர் கருத்துக்கள் :






இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<