மறுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை விட திருப்பித் தரப்பட்ட பரிசுப் பொருட்கள் கனம் மிகுந்து காண்கின்றன துணிகளுக்கடியில்... ஷோகேஸில்... புத்தகங்களுக்கிடையில்... எங்கு ஒளித்து வைப்பினும் அவ்வப்போதைய கண்படுதல்கள் தவிர்க்கக் கூடியவையாயில்லை பேனா, கைக்குட்டை, கீ செயின் போன்றவை பரிசளிக்க ராசியில்லாதவையாம் திரும்பி வந்த பட்டியலில் அப்புறப்படுத்த சிரமமில்லாதவையும் கூட எஞ்சியவற்றை சிக்னல் பிச்சைகளின் குளிருக்குக் கொடுத்துவிடலாம் நினைவின் மணலில் மீதமிருக்கும் சில தேதிகளும் வாழ்த்து அட்டைக் குறிப்புகளும் காலக்காற்றிலழியும் வரை....?