பரபரப்பான போக்கவரத்து நிறைந்த ப்ளாட்பார்மின் ஓரமாய் அமர்ந்து கவிதைகள் விற்றபடியிருக்கிறான் ஒருவன் ”விலை மலிவானது சார்” ”சிறப்புத் தள்ளுபடி சார்” என்று வேண்டுகிறான் இரு கைகளை ஏந்தியபடி எவரும் ஏற்க மறுத்த கவிகைகளை கையுட்டாய் பெற்ற இரு கவிதைகளை என்ன செய்வதென தெரியாமல் விழிக்கிறார் பிளாட்பாரக் காவலர் ஒருவர் பாதசாரிகள் நடமாட்டமில்லாத பொழுதொன்றில் சில கவிதைகளை தின்று பசி தீர்த்துக்கொள்கிறான் தனது குட்டிகளை தானே தின்னும் தாய்ப்பூனைப் போல் விலையேதும் பேசாமல் வேடிக்கை பார்த்த சிறுமியடம் கடைசிக் கவிதையைக் தந்துவிட்டு எழுந்து செல்லுமிவன் மறுநாளும் வருகிறான் மேலும் சில கவிதைகளுடன்.
உண்மை தான்
நல்ல கவிதை கணேசன். எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.