Page last updated at
Thursday, December 10, 2009 at 11:57:28 PM IST
"மாடாக் குழி"
-
இந்தி எதிர்ப்புப் போராட்டம்
மருது
அப்போது சன்டியர் போல் இருந்த என் மாமா முருகேசன், ஒவ்வொரு ஊராகத் தோழர்கள் அழைத்துச் செல்லும் போது உடன் வருவார். “மாப்பிள்ளைக்கு இதைக் கொடுங்கள், அதை வாங்கி கொடுங்கள் என்று என்னைச் சரியாக சாப்பிட வைத்து கவணித்துக் கொள்வார். பணமே வாங்கிக் கொள்ளாமல் ஆர்வமாக இரவு பகலாக படம் வரைந்து திரிந்த போது “உனக்கு இவ்வளவு பெரிய சுவர் எப்போது கிடைக்கபோகிறது. போய் வரைந்து பழகிக்கொள்” என்று என் தந்தையும் கூறுவார். இரவு வீடு திரும்பும் போது காங்கிரஸ்காரர்கள் வழி மறித்து “எங்களுக்கும் வந்து வரை, காசு தருகிறோம்” என்பார்கள். “இல்லை என் விட்டில் திட்டுவார்கள்” என்று மட்டும் சொல்லிவிட்டு ஓடி வந்து விடுவேன். அதற்கு மேல் அந்த நேரத்தில் எதுவும் சொல்லத் தெரியாது. இன்னும் 20x30 அளவில் நான் வரைந்த அரசியல் கார்டூன்களை வரிசையாக கோர்ப்பாளையத்தில் அமெரிக்கன் கல்லூரி எதிரில் காட்சிக்காகவே வைத்துவிட்டார்கள் அப்போது. அது இன்னும் அத்தோழர்களால் பேசப்படும்.
பிறகு தி.மு.க வெற்றி பெற்றபின் அப்போதைய பெரும் தலைவர்களிடம் சிறுவனான என்னை அறிமுகப்படுத்துவார்கள். அவர்களின் பாராட்டும் என்னை பெருமகிழ்ச்சிக்குள் ஆக்கிய ஒன்று.
ஆறு மாதங்கள் கழித்து முதல் முறையாக தி.மு.க அமைச்சர்களுடன் அண்ணா மதுரைக்கு தமுக்கம் மைதானத்திற்க்கு அழைத்துவரப்படுகிறார். அதே கோரிப்பாளையம் நிறம்ப கோரிப்பாளைய தோழர்களால் வளைவுகள் நிறுவப்பட்டது. ஒவ்வொரு வளைவின் மேலும் நான் வரைந்த அண்ணாவின் படத்தை வைத்து மகிழ்ந்தனர். ஒவ்வொரு வளைவின் வழியும் அண்ணா வருவது கண்ட எனக்கு அப்போது அளவில்லாத பெருமை. பின் நாளில் 90களில் திரு. கிள்ளிவளவன் அவர்கள் நடத்திய “அரங்கேற்றம்” பத்திரிக்கையில் நான் வரைந்த பல அண்ணா படங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த "அண்ணா" ஓவியம் அவருடைய நூற்றாண்டு நிறைவு மலருக்காக வரையப்பட்டது.
நண்பர்கள் “கேலிச்சித்திரத்தில் அண்ணா” என்கிற தொகுப்பு கொண்டு வர முயற்சி செய்து இப்போது வெளி வர இருப்பதுவும் மகிழ்வான செய்தி.
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :