பகுதி 2 [பாகம் 16] : சரவணன்
இரவு உணவை முடித்துக்கொண்டு வீட்டின் முற்றத்தில் வந்து படுத்த சரவணனுக்கு குழப்பமாக இருந்தது . அண்ணாந்து பார்த்தான் நிலவை கடந்து மேகங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன.வாழ்க்கை கடந்த சில மாதங்களாக மிகவும் மாறிவிட்டது.அதிலும் குறிப்பாக நீரூற்று பொறியாளன் நகருக்குள் தன் வாழ்க்கையினுள் பிரவேசிதத்திலிருந்தே நிறய்ய மாறுதல்கள் ஒவ்வொருநாளும் ஒவ்வொருகாட்சி. காற்று சன்னமாக வீசி உடலைதழுவியது.போர்வை எடுத்து தன் மேல் போட்டுக்கொண்டான்.மற்ற நேரமாக இருந்தால் இந்நேரம் அங்கயற்கண்ணி பற்றிய நினைப்பு இந்நேரம் அவனுள் எழுந்திருக்கும் .அவளை பற்றிய ஞாபகம் வந்தபிறகுதான் யோசனை வந்தவனாக போர்வைக்குளே அக்கம் பக்கம் பார்த்தபடி கால்களாலேயே ஜட்டியை உருவி கட்டிலுக்கு கீழே அப்படியே போட்டான் ..உடல் ஏதோ பரவசத்துக்குள் ஆட்பட்டார் போலிருந்தது சர்வ சுதந்திரம் போர்வைய்யை இழுத்து கழுத்துவரை போர்த்திக்கொண்டவனுக்கு மனதுள் எதையோ தீவிரமாக யோசித்துபாதியில் விட்டுவிட்டதவிப்புதுடித்துக்கொண்டிருப்பதை உணர் முடிந்தது. அதுவரை தான் தொடர்ச்சியாக தீவிரமாக யோசித்துவந்த பொருள் என்னவாக இருக்கும் என மனசுக்குள் அலைக்கழிந்தான். பின் சட்டென அது பொறியாளன் குறித்த நினைவுதான் என்பதை உணர்ந்த கணம் உடல் பெருத்த மகிழ்ச்சியை எதிர்கொண்டதைப்போல முழு நிறைவை அடைந்தது. உண்மையில் ஆச்சர்யமாகத்தான் இருகிறது. இப்படி நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா ..ஆனால் அவனுக்கு நிச்சயம் தெரியும் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் நேரில்பார்த்தாக சொன்னபிறகு இதை எப்படி நம்பாமல் இருப்பது என்ற ஐயம் அவனுக்குள் எழுந்தது. சரவணனின் இந்த ஞாபகத்துக்குகாரணமான விஷ்யம் இதுதான் இன்றுகாலை அவசரமாக அவன் வேலைக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் மணியாட்டி வந்திருந்தான் . இரவுதோறும் ஊரை மணியடித்தபடி வலம் வந்து காப்பவன் .குரைகும் நாய்களுக்கு வாய்கட்டு போடுவதில் திறமைசாலி.இரவில் நடக்கும் ஊர்விவகாரங்கள் அனைத்தும் அவனுக்குஅத்துபடி .ஆனாலும் அவன் தான் பார்க்கும் எதையும் யாரோடும் பகிர்ந்துகொள்வதில்லை. சிலவேளைகளில் மட்டும் ஊர்நன்மைக்காக அவன் தன் கடமையாக நினைத்து தான் பார்க்கும் ரகசியங்களை தகுந்தவர்களோடு பகிர்ந்துகொள்வான் அப்படி ஒருவிஷயத்தைத்தான் அன்று காலை மணீயாட்டி சரவணனிடம் சொன்னான் .பொறியாளன் பற்றிய இந்த மாதிரியான் தகவலை சரவணன் எதிர்பார்க்கவில்லை. யாரிடம் கேட்டால் விளக்கம் பெறலாம்.. கம்மாவதெருவில்தான் ஏகாம்பரம் இருக்கிறார்.அன்றுகூட அவர்தானே மீனாட்சியால் இன்று முறைமைக்கு கட்டுபட முடியாது என்ற தகவலை தன்னிடம் சொல்லி முறையை மாற்றசொன்னார். தானும் மாற்றி உணவும் அடுத்த ஜோசப்பின் வீட்டுக்குமாற்றப்பட்ட நிலையில் பொறியாளன் எதற்கு அவ்ள் வீட்டுக்கு செல்லவேண்டும் ?.. மீனாட்சியின் வீட்டுக்குசென்று இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என நினைத்த சரவணன் மறுநாள் காலை முதல் வேலையாக சரவணன் அலுவலகத்துக்கு போகும் வழியில் கம்மாவத்தெருவுக்கு சைக்கிளை மிதித்தான் . அப்படி அவன் செல்லும்போதெ பொறியாளன் குறித்த பல்வேறு மனஎழுச்சிகள் மனதை ஒரு வித ஆன்மிகபரவசத்துள் அழுந்த தள்ளியது.. அலுவலகத்தில் இப்போதெல்லாம் யாரும் தன்னை அதிகாரத்தால் அச்சுறுத்துவதில்லை.அதுதான் அவனுக்கு இப்போதைக்கு வாழ்வு கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு .கமிஷ்னர் தனக்கு அலுவலகத்தில் உண்டாக்கி கொடுத்திருக்கும் சுதந்திரம் எதன் பார்பட்டது. எதற்காக அவர் தன்னை மட்டும் மிகுந்த அக்கறையுடன் கவனமிக்கவராக நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற ஐயங்கள் எழுந்தன.இவை அனைத்துமே நீரூற்ரு இயந்திர பொறியாளன நிமித்தமாக என்பதுமட்டும் அவனால் உணர முடிந்தது. இன்னொருபக்கம் யோசித்தபோது தான் ஒரு அலுவலக ஊழியன் என்ற நிலையை கடந்து ஒருவித ஆத்ம உதவேகத்துடன் பொறியாளனை பார்த்துக்கொள்வது அவனது உணவு முறைமைகளை கண்கானிப்பது பூங்காகளை பராமரித்து பொறியாளனின் செயல்பாட்டுக்கும் அலுவகத்தும் பாலமக செயல்படுவது போன்றவைதான் தனக்கு இந்த நற்பெயரை உண்டாக்கி தந்திருக்கும் இதில் அதிசயமெதுவும் இல்லை என்றும் அவனது மனது கணக்கு போட்டது. இந்த உலகில் மிகபெரிய நன்மையை செய்ய தன் வாழ்க்கை அர்ப்பணிக்கப்படிருப்பதாக சிறுவயது தொட்டே எண்ணம் கொண்டிருக்கும் சரவணனுக்கு இது போன்ற உணர்ச்சிகளால மட்டுமே நாம் அதனை நோக்கி வழிநடத்த முடியும் என்பதை உணர்ந்தான்.மீனாட்சியிடம் ஏன் இதை விசாரிக்கவேண்டும் அப்படியே விட்டால் என்ன .என்றாவது ஒருநாள் உண்மை தெரியும் போது தெரியட்டுமே என்றபடி சைக்கிளை மீண்டும் நகராட்சி அலுவலகத்துக்கு திருப்பினான். ஒரே நாளில் பூங்காவை சீரமைக்கும் பணி நடந்தேறியது.கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் முனுசாமி தலைமையில் வேலை செய்தனர். பொறியாளன் வழ்க்கம் தனக்கு அளிக்கப்பட்ட அந்த கூடாரத்தில் கால்நீட்டி படுத்துக்கொண்டே அனைத்தையும் வேடிக்கை பார்த்தான்.அவ்வப்போது சிறுவாத்தியக்கருவிய்யை எடுத்து சரிபார்ப்பதும் அல்லாவிட்டால் புத்த்கம் ஒன்ற எடுத்து புரட்டுவதும் இல்லாவிட்டால் எத்னையோ தீவிரமாக் யோசிப்பதுமாக இருந்தான். முனுசாமி யின் ஆட்கள் ராசு சிவப்பி ஆகியோர் அடிக்கடி அவனை பர்ப்பதும் தங்களுக்குள்லாக எதையோ பேசி சிரிப்பதுமாக இருந்தனர். பொறியாளனின் அகவுலகத்தில் அவர்கள் குறித்த எதுவும் இல்லை. ஓரிருமுறை கூடாரத்தின் வாசலில் இருந்த மூன்றுகற்களின் மேலே அலுமனியபாத்திரத்தை வைத்து எதையோ காய்ச்சி குடித்தான் . கமிஷ்னர் வந்து பார்த்த போதுதான் கூடாரத்தைவிட்டு வெளியில் வந்தான். தனக்கு முழுமையாக உடல் நிலை தேறிவிட்டதாகவும். தான் சொல்லும் நேரத்தில் சொல்லும்விதமாக புதிய தோட்டங்கள் வடிவமைக்கும்படியும் தோட்டத்தில் என்னன்ன பூக்கள் எத்த்னை வகை எப்படியாக வடிவமைக்க படவேண்டும் என்பதை அவனே தன் பையிலிருந்து ஒரு நோட்டில் படம் வரைந்து காண்பித்து பூக்களின் பெயர்களையும் எழுதிக்கொடுத்தான். உடன் கமிஷ்னரிடம் குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள் நிமித்தம் நகராட்சி சில செலவுகளை நிச்சயம் செய்தேதீரவேண்டுமென கூறியவன் அதனை எங்கே பொருத்தலாம் என்பதையும் கமிஷ்னருக்கு காண்பித்தான். சரவணன் ஆட்களை வேலைவாங்குவதில் முழு கவனத்துடன் இருந்தாலும் அவ்வப்போது கமிஷனருடன் பொறியாளன் இத்த்னை தீவிரமாக பேசுவதை கண்டு ஆச்சர்யபட்டான். யாரிடமும் அவ்வளவாக உரையாட விரும்பாதவன் எப்படி கமிஷ்னரிடம் மட்டும் இவ்வளவு நெடுநேரம் சாதார்ணமனைத்னை போல பேசுகிறான என்பது பொறியாளனுக்கு ஆச்சர்யமாக் இருந்தது. உண்மையில் அவர்கள் பேசுகிறர்களா அல்லது எல்லோரையும் ஏமாற்ற நடிக்கிறார்களா என்று கூட அவனுக்கு ஐயம் ஏற்பட்டது. சட்டென சரவண்னை கமிஷ்னர் அழைக்க சரவணன் அவர்களின் அருகே ஓடினான். பொறியாளனிடம் சரவணன் குறித்த எந்த அபிப்ராயமும் இல்லாதது சரவனனுக்கு உண்மையில் வருத்தத்தை தந்தது. கமிஷ்னர் பொறியாளனிடம் அவனை பற்றி அவன் தான் முதன் முதலாக பொறியாளனை தலைவரிடம் அறிமுகப்படுத்தியதை சொல்லி இப்போது அவனது உணவு முறைமைகளை பராமரிப்பது வரை சொல்லி அறிமுகப்படுத்த பொறியாளனிடம் அதற்கு எந்த சலனமும்மில்லை. வெறுமனே தலையசைத்து கூட கமிஷனருக்கு ஆமோதிப்பதாக மட்டுமே இருந்தது. சரவணனுக்கு இது பெரும் ஏமாற்றம் தான் என்றாலும் அமைதியாக நின்றான் . கமிஷ்னர் பூங்காவை விட்டு வெளியேறும் போது சரவணனை தனியாக அழைத்தார். நாளைமுதல் பொறியாளன் தனது நீர்ருற்று இயந்திர பழுதுபார்க்கும் பணியை துவக்கபோவதாகவும்.தொடர்ந்து ஒருவாரங்கள் அந்த பணி நடக்குமென்றும் அதுவரை வேறு எவரும் இங்கு வராமல் பார்க்கும்படியும் பொறியாளன் தன்னிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கமிஷ்னர் கூறினார். சரவணன் அதற்குமேல் எதுவும் பேசவில்லை ...உள்ளுக்குள் மீனாட்சிவிவகாரம் உறுத்த்லாக இருந்தது . பொறியாளன குறித்து த்னது மதிப்பீடுகள் அதிகமோ என்று கூட பட்டது. .சாதரண மனிதனுக்கான சுபாவங்கள்தான் அவனுக்குமிருப்பதை சரவணனனால தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிகார பதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் முன் பணிவதும் அவர்களுக்குமட்டும் பொறியாளன் முன்னுரிமை கொடுப்பதும் அவனால் ஏற்க முடியவில்லை. வேலைகள் முடிந்தபின் பொறியாளனிடம் மாலையில் இதுகுறித்து தடாலடியாக கேட்டுவிடலாமா என்று கூட எண்னம் எழுந்தது. மீனாட்சி விவகாரத்தை கமிஷ்னரிடம் போட்டு உடைக்கலாமா என்றுகூட மனசு அவசரப்ப்ட்ட்டது மறுகணமே தலைவரை பொறியாளன் முழுவதுமாக புறக்கணீத்தது ஞாபகத்துகு வர சமாதான மாகிப்போனான் . சரவணன் இப்படியாக நிற்கும் போதே தோட்ட வாயிலில் ஒருபெண் முருகையனுடன் கெஞ்சிக்கொண்டிருந்தாள். முருகையன் அவளோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான் .சரவணன் சற்று அருகேசென்றதும்தான் அவள் ஒரு பெருவியாதிபெண் என்பதை கண்டு கொண்டான். வாசலில்லிருந்து தொடர்ந்து பொறியாளனின் கூடாரம் பக்கமாக கைக்கூப்பீ சாமி என அழுதவள் .முருகையனிடம் ஒரே முறை அவரை பார்க்க அனுமதிக்கும்படி கேட்டாள் .அவள் வேறுயாரும் இல்லை தனுதான். மகளை பார்க்க ஊருக்குசென்ற்வள் மகிழ்ச்சியுடன் திரும்பியிருந்தாள் . பொறியாளன் சொன்ன வாக்கு பலைத்திருப்பது அவளது முகத்து மகிழ்ச்சியிருந்தே தெரிந்தது. ஒருவித பரவசமாய் அவள் துடித்தாள் .அவளுக்குள் பல சேதிகள் இருப்பதை கண்கள் சொல்லியது. கைகளில் ஒரு ரொட்டித்துண்டு. ஆனால் சரவணன் அது தெரியாமல் அவளை எக்காரணம் கொண்டும் உள்ளேவிடக்கூடாது என முருகையனிடம் கடுமையாக எச்சரித்தான்.அவளோ முருகையனின் கைகளை தள்ளிவிட்டு உள்ளே ஓடிவர முயல சரவணன் அவளை பார்த்துவிட்டு கோபம் மிகுந்தவனாக ஓடிவந்து அவளை இடைமறித்தான் . ஏய் சொல்லிகிட்டே இருக்கேன் என சரவணன் கோபத்துடன் அவளை நோக்கி பல்லை கடிக்க ஆனால் அவனது விரித்த்கைகளை தாண்டி தனு பதட்டத்துடன் பொறியாளனை நோக்கி ஓட சுற்றியிருந்த முனுசாமியின் ஆட்களில் சிலர் க்கூச்சலிட்டனர். சரவண்னனுக்கு இது பெருத்த அவமானமாக இருந்தது ஒருசிலர் ஓடிவந்து தனுவை பிடிக்க முயல் அருகில் வந்தவர்கள் அவ்ள் தொழு நோய்ப்பெண் என்பதை அறிந்து பட்டென விலகி ஒதுங்கினர். சரவணன் கொஞ்சம் உணர்ச்சிவசப்ப்ட்டவனாக அர்ய்கில் இருந்த மரத்திலிருந்து அவசரமாக கிளை ஒன்றை ஒடித்துக்கொண்டு அவளை நோக்கிஓட அதற்குள் கூடாரத்திலிருந்து வெளிப்ப்ட்ட பொறியாளன் ”சரவணன் காயங்களுக்கு உங்களால் மருந்திட முடியாத நிலையில் காயங்கள் மேல் காயங்களை உண்டாக்குவதற்கு தகுதி உண்டா ” என உரக்க கூவ சரவணன் அதிர்ச்சியில் விக்கித்த்வனாக அப்படியே உறைந்து நின்றான். அத்ற்கு பலகாரணங்கல் இருந்தன முதலாவது அவன் பெயரை பொறியாளன் கூப்பிட்டது. இரண்டாவது அத்த்னை சத்தமாக பேசியது . மூன்றாவது அவன் பேசிய வார்த்தைகள் . அத்ற்குள்ளாக தனு ஓடிவந்து பொறியாளன் முகத்தை பார்த்து ஓரிரு நொடியில் கால்களில் வீழ பொறியாளன் அவளை தொட்டு தூக்கி தன்னோடு அணைத்துக்கொண்டான் . அதை த்னும் எதிர்பார்க்கவில்லை சர்வணன் உள்ளிட்ட அங்கிருந்த அனைவரும் எதிர்பார்க்கவில்லை .அனைவரும் அதிர்ச்சியில் விக்கித்து சிலைகளாக நின்றனர் (இரண்டாவது பகுதி இங்கு முடிவுற்று அடுத்த இதழில் மூன்றாம் பகுதி - முதல் பூங்கா நிகழ்வுகள் துவங்குக்கிறது ) [ அடுத்த அத்தியாயம் ] பகுதி 3 [பாகம் 1] : பொறியாளனின் கோடைக்கால பரச்னைகளுக்கான ககனவழி தீர்வு பயணம்