Page last updated at Thursday, February 10, 2010 at 11:57:28 PM IST

நீரூற்று இயந்திர பொறியாளன் - அஜயன்பாலா : ஓவியம் மருது




      Thadagam - Ajayan Bala - Neerutru Eyandara Poriyalaan - Novel
மருது




[ சென்ற அத்தியாயம் ] பகுதி 2 [பாகம் 16] : சரவணன்

பகுதி 3 [பாகம் 1] :பொறியாளனின் கோடைக்கால பிரச்னைகளுக்கான ககனவழி தீர்வு பயணம்



கோடைக்காலத்தின் நிழல் நகரத்தில் விழத்துவங்கியிருந்தது. சிறுவியாபாரிகள் மூட்டை முடிச்சுகளை மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டு அடுத்த ஊர் திருவிழக்களுக்காக இடம் பெயரதுவங்கியிருந்தனர். மேற்கு பக்கம் ஏரி வழியாக காட்டினை அறுத்துச்செல்லும் குறுக்குப்பாதையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். கொம்புகளில் அலுமனிய சாமான்களையும் மண் கலயங்களையும் கவிழ்த்துக்கொண்டு மூட்டைமுடிச்சுகளுடன் வண்டிகள் வரிசையாக நகர்ந்துசென்றன. ஒவ்வொரு கோடையின் போதும் இதர ஊர்களில் நடக்கும் திருவிழாவுக்காக சிறுவியாபாரிகள் ஊர்விட்டுசென்று பின் ஆடிமாதம் கழித்து ஊர்திரும்புவது வழக்கம் . இப்போதும் அது போல ஊரைவிட்டு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். சிறுவர்களை தோளிலும் இடுப்பிலும் தூக்கியபடி வியாபாரிகள் ஆன்களும் பெண்களுமாய் வண்டிகளின் இரண்டுபக்கமும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். மாடுகளின் கழுத்துமணி சத்தமும் வண்டிக்காரன் மாட்டை விரட்டும் சத்தமும் கேட்ட்படி இருந்தது. அவர்கள் வரிசையாக இப்படி ஊரைவிட்டுபுறப்படுவதை ஊரார் வேடிக்கை பார்த்தனர். அவர்கள் முகத்தில் பெரும் சோகம் . உடன் எரிந்து போன தேரும் தொலைந்து போன திருவிழாவும் அவர்களது ஞாபகங்களில் பழைய புகைப்படங்களாக அலைந்தன.

வண்டிகளின் ஊர்வலத்தை காக்கா மலையின் பூங்காவில் ஒரு பாறை மீதிருந்து பார்த்தான் பொறியாளன் . மிக மிக சன்னமாக கேட்ட வண்டிகளின் மணிசத்தம் அதனுள் ஒளிந்திருந்த நகரத்தின் துயரத்தை உணர்த்தியது கோடைக்காலம் என்றாலே அந்நகரத்தின் துயர காலம் என்பது எழுதப்படாத விதி. கோடைக்கால்ம் இந்த நகருக்குள் ஒவ்வொருவருடமும் சாபத்தோடு உள் நுழைவதை பற்றி ஏற்கனவே அறிந்திருந்தான்.. கோடைக்காலத்துக்கான பிரத்யோக பறவைகள் காக்கா மலையை கடந்து நகரத்துக்குள் ஊடுருவுவதை பார்த்தவன் சட்டென பாறையை விட்டு இறங்கி தன் கூடாரத்தை நோக்கி வேகமாய் சென்றான். இக்கோடைகாலங்களில் இறப்பு , நஷ்டம் பஞ்சம் ஆகியவை நகரை அல்வுக்கதிகமாக பீடிப்பதை முன் கூட்டியே அறிந்திருந்த பொறியாளன் தன்னுடைய காரியத்துக்காக தயாராக துவங்கினான்.எவருடைய துயரத்தையும் முழுமையாக தன்னால் நேரடியாக போக்கிவிட முடியாது என அவனுக்கு நன்குதெரியும். ஆனால் தன் இசையின் மூலம் வேத்னைக்கு ஆளனவர்களின் மனதில் ஒரு இனிய வருடலை உருவாக்க முடியும் என நம்பினான். அந்த வருடல் துயரங்களையெல்லாம் உள்ளிழுத்துக்கொண்டு நகரின் மேல் ஒரு மாயவசீகரபோர்வையை போர்த்துவதாக கற்பனை செய்து பார்த்தான். மேலும் தான் மேற்கொள்ள போகும் தீவிர உளச்சிந்தனையின் மூலம் நகரத்து மனிதர்களை அவர்களது துன்பங்களிலிருந்து முழுமையாக விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவனுக்குள் அழுத்தமாக மேலுழுந்தது.

ஒருகையில் மாண்டலினும் இன்னொரு கையில் ஓலைச் சுவடியுமாக பொறியாளன் கூடாரத்தின் வெளியில் வந்து நின்றான். மிகவும் உற்சாகத்துடன் பூங்காவை முழுவதுமாக பார்வையால் அலசினான். இடப்பக்கமாய் ஓங்கிவளர்ந்த நாகலிங்க மரத்தின் அடியில் சென்று அமர்ந்து மரத்தோடு முதுகுத்தண்டும் ஒட்டிக்கொள்வது போல சாய்ந்து அமர்ந்தான். இப்போது கையிலிருந்த பழைய ஓலைச்சுவடியை புரட்டினான்.அது அவனது குருநாதர் அவனுக்களித்த ரகசியங்கள் நிறைந்த ஓலைச்சுவடி

சிறு விளக்க குறிப்புகளும் ஓவியங்களும் அத்ன் ஒவ்வொரு ஏடுகளிலும் காணப்பட்டன.கிட்டதட்ட அவனுக்கும் அவனது ரகசியங்களுக்கும் இடயிலான் மிக நுண்மையான உறவு அந்த ஓலைச்சுவடி புதியதாக காரியங்களை நிகழ்த்துவதன் பொருட்டு மனதினூடாக செய்யப்போகும் அவனது ஒவ்வொரு நிச்சிந்தைக்கும் முன்பாக அத்ன் துவக்க நிலைகளை உருவாக்கும் பொருட்டு அந்த ஓலைச்சுவடியிலிருந்து செய்யுள்களை நூல் போட்டு தேர்ந்தெடுத்து மனனம் செய்வது வழக்கம். அது போலவே இம்முறை ஓலைச்சுவடிகளை வெகுநேரமாக புரட்டிய பொறியாளன் அதில் கோடைக்காலத்துக்கான பிரத்யோக செய்யுளை தேர்ந்தெடுத்து நன்றாக மனனம் செய்யதுவங்கினான். அதன் சாரத்தை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு அதற்கு கற்பனையில் ஒர் உருவத்தை வரைந்து பார்த்தான். கண்களை மூடினான். மனதை லேசாக்கிகொண்டான். மனதில் விரிந்த வெண் திரையில் ஒருபிம்பம் தோன்ற கவனங்களை குவித்தான்.

அது காற்றில் பழுத்த சருகாகிப்போன ஆல இலை. அது அப்படியே காற்றில் அசைவதாக கற்பனை செய்தான் . பின் அது அவனை திருப்தியுறசெய்யாததால் அந்த இலை ஒரு பகல்நேர வெளிர் நீல வானத்தின் பின்னால் அசைவதாகவும் கற்பனை செய்தவன் பின் வானத்தில் ஆங்காங்கே சில மேகங்கள் கடந்து செல்வதாகவும் யோசித்தான் . உடன் ஒரு குருவி ஒன்றும் கடந்து செல்வதாக கற்பனையில் சேர்த்துக்கொண்டான்.

இப்போது முழுமையாக அந்தகாட்சியை மனக்கண்ணில் ஓடவிட்டு ரசித்த பொறியாளன் அந்த இலை வானத்திலிருந்து கீழிறங்கி பரந்து கிடக்கும் பூமிபரப்பு நோக்கி கீழே சரிவதாகவும் கற்பனையை தொடர்ந்தான். மேகங்களின் பனிபுகைகளின் இடைவெளியில் எங்கிலுமாக தெரியும் நீலக்கடல்வெளி அவனுக்குள் மிகுந்தபரவசத்தை உண்டாக்கியது. அது கற்பனை என்பதையும் முழுமையாக மறந்து அவனே தலைகீழாக பறந்து பூமி நோக்கி பறப்பதாக எண்ணியவன் முகத்தில் குளிர்ச்சி நிரம்பிய காற்று அசுரவேகத்தில் மோதுவதை உணர்ந்தான். உடலின் மொத்த எடையையும் தோளில் தாங்கியவனாக பரவெளியை ஊடறுத்துபறப்பது போல உணர்ந்தான். கண்கள் குருடாவதுபோல காற்றின் அழுத்தம் காதை அடைக்க பூமியை நோக்கி அவன் தலைகீழாக பறந்துகொண்டிருந்தான். பின் கற்பனையில் திருத்தம் செய்து தன் உடலின் எடையை இலையின் எடையாக உணர்ந்தபடி பறந்தான். ஒருகட்டத்தில் மேகங்கள் இல்லாமல் எங்குமாய் விரிந்த கடல்வெளியும் சிறியதாக நிலப்பரப்பும் அவன் கண்களுக்கு புலப்பட்டது. நீல வெளிகளினூடே பச்சைசையாக விரிந்துகிடந்த வெளியில் தன் தேசத்தையும் அதன் நிலப்பரப்பையும் மனதில் கொண்டுவந்து அதனை நோக்கி உடலை திருப்பினான்.பூமியயை இலக்காக்கிய இந்த ஆகாயவழி பறத்தல் மனித வாழ்க்கையின் பெருந்துயரை நீக்க தான் புற வாழ்வில் மேற்கொண்டிருக்கும் பயணத்தை ஒத்திருப்பதாக எண்ணிய பொறியாளன் தன் உள்ளார்ந்த மன ஆற்றலை பயன்படுத்தி அதன் மூலம் அனைத்தையும் செய்விக்க முடியும் என்பதை உறுதியாக நம்பினான் .

துயரப்படுபவர்களுக்கான் ஆறுதலை தோற்று விக்கும்படியான தீவிர உளச்சிந்தை அவனுள் அவனை மேலும் மேலுமாக இயக்கியபடி இருந்தது. துயரமற்ற பெருவாழ்வை நோக்கிய நீண்ட பயணமாக அதனை மனதுள் கற்பனை செய்தான். பயணத்தினூடே தனது துவக்க நோக்கமான கோடைக்காலத்துக்கான இசைக்குறிப்புகளை தயாரிக்கும் பணியை பாதியில் மறந்துவிட்டது குறித்து யோசித்தவனுக்கு அப்போதுதான் தனது இருப்பு ஞாபகத்துக்கு வர உடலை முழுவதுமாய் உணர்ந்தான்.

அதுவரை இலையாக இருந்த உடல் இப்போது பெரும் பாரத்தோடு அவனுக்கு கனத்தது. மெல்ல இமைகளை விழிகளின் மீதிருந்து பிரித்தான். ஒருகையில் மேண்டலினும் இன்னொருகையில் ஓலைச்சுவடியும் இருப்பதை அப்போது அவனால் உணர முடிந்தது. தன் உடல் நாகலிங்கமரத்தில் சாய்ந்திருப்பதை அத்ன் பாரத்தின் மூலமாக உணர்ந்தவன் தான் ஒரு உடம்பினுள் இருப்பதை அப்போது அறிந்துகொண்டான். ஒருமுறை தன்னை சுற்றியும் பூங்காவிலும் வேரு யாருமில்லாததை கண்டறிந்த பின் மீண்டும் மெல்ல இமைகளை விழிகளின் மீது போர்த்திக்கொண்டான்.

இப்போது அவன் விழிகளை திறந்த போது பூமி சமீபத்திருந்தது. துவக்கத்தில் கண்களை திறக்க சிரமமாக இருந்தது. இப்போது காற்றுடன் தூசுகளும் சேர்ந்து கண்களை அடைக்க துவங்கின உடலையும் சேர்த்து தூசுகள் குத்ததுவங்கின. உடன் தன்னை நோக்கி அந்தரத்தில் பறந்து வந்த ஒருகாலி கோக் டின் ஒன்று தன் தலையில் மோதுவதை உணர்ந்த்வன் அது தன் உலகத்தை சேர்ந்ததல்ல என்பதையும் உணர்ந்தபடி சிரமத்துடன் கண்களை திறந்து பார்த்த்வாறு கீழே பரந்த நிலப்பரப்பை நோக்கி வந்துகொண்டிருந்தான். அதுவரை நிலப்பரப்பாக தெரிந்தது மிகப்பெரிய மலை என்பதையும் அதனை சுற்றி மேகம் போல இருந்தவை பனிச்சிகரங்கள் என்பதயும் உணர்ந்தவன் சற்று விலகிப்பறந்தான். கீழே அதளபாதாளத்தில் தெரிந்த நிலப்பரப்பில் தெற்கு எல்லை நோக்கி உடலில் விசையயை கூட்டினான். இருபக்கமும் கடல்களாக விரிந்த அந்த நிலப்பரப்பில் இடப்பக்கமாக உடலை நகர்த்திக்கொண்டவன் பச்சை வெளிசதுரங்களாக தன் நிலப்பரப்பை கண்டு அதில் இந்தவினோத நகரத்தை தேடத்துவங்கினான்.

மனதில் தான் இதுநாள் வரை வாழ்ந்த வாழ்வு சந்தித்த அவமானங்கள் எதிர்பாராதிருப்பங்கள் நடந்தேறிய அதிசயங்கள் ஆகிய அனைத்தையும் மனதில் வரிசைகூட்டி யோசித்தவன் முன்னும் பின்னுமாக விரிந்துகிடக்கும் மொத்தகாலத்தையும் தன்னை மையமாக கொண்டு விரிந்துகிடக்கும் மொத்தபிரபஞ்ச வெளியையும் கருதிக்கூட்டி அதில் அந்த நகரத்துமக்கள் மட்டும் துன்பத்தால் அவதிப்படுபவர்களாக ஆகாயத்தை நோக்கி கைகளை உயர்த்தி கதறுபவர்களகவும் தான் அவர்கள் வாழும் நிலத்தில் முழுமையாக இறங்கியவுடன் அவர்கள் மேல் ஒரு பைப்பிலிருந்து நீரை பீய்ச்சி அடிப்பதாகவும் அதில் நனையும் நகரமக்களின் மீதிருந்து துன்பங்களும் வலிகளும் உபாதைகளும் நீரோடு நீராக கரைந்து அப்படியே வழிந்து பெரும் வெள்ளமாக வடிந்து கால்வாய்களின் வழி கடல் நோக்கி ஓடுவதாகவும் கற்பனைக்குள் கற்பனை செய்தபடி பறந்தான். அது போலவே இலையாக பறந்த அவன் காக்கா மலையின் மேல் இறங்கியதும் .சுற்றியிருந்த நகரத்து மக்கள் அவனை நோக்கி கைகளை நீட்ட அவன் நகரம் முழுவதுக்ககுமாக நீரை பாய்ச்சுபவனை போல அருகிலிருந்த நீர்தொட்டியோடு பிணைக்கப்பட்ட பைப்பை அவர்களை நோக்கி திருப்ப

சட்டென தண்ணீர் வராமல் அவன் அதிசயத்தால் தத்தளித்தான் கற்பனையில் அவன் மோட்டாரை சரிபார்த்தான் .மீண்டும் அவன் பைப்பிலிருந்து நீர் வெளியேறுவதாக கற்பனை செய்தும் நீர் வரவில்லை

கூட்டத்திலிருந்து யாரோ சிலர் தன்னை வசை பாடுவது அவனுக்கு கேட்டது.

ஒருகல் ஒன்று அவனது தலையை நொக்கி பறந்து வந்தது.

கல்வந்த திசை நோக்கி கூட்டத்தாரை பொறியாளன் பார்த்தான் .

அது அவனுக்கு இது நாள் வரை உத்விகரமாக இருந்த சரவணன் முகம் அது

அது வரை நின்றிருந்த தண்ணீர் சட்டென பைப்பிலிருந்து பிய்த்துக்கொண்டு வெளியேறியது. அத்ன் இந்த திடீர்வேகம் தந்த அதிர்ச்சியில் தடுமாறினான். ஒருபக்கம் தலையில் அடிபட்ட இடத்தில் வலி தாளாத மயக்கத்துடன் இன்னொருபக்கம் வேகமாக இழுக்கும் பைப்பை கெட்டியாக பிடித்து நகர மக்கள் மீது பீய்ச்சி அடித்தான். மக்களின் துன்பங்கள் அனைத்தும் நீரால் கழுவப்பட்டது போன்ற ஒரு உணர்வு அவனுக்குள் வெளிச்சமாக இறங்கியது. அழுக்காக துன்பங்கள் நீராக வழிந்து ஓடியது .மக்கள் அனைவரும் உற்சாக கூச்சல் இடுவது இவனுக்கு கேட்டது.

பொறியாளன் இப்போது தன்னுடலின் பெரும்பாரத்தை உணர்ந்தவனாக மெல்ல மனதிலிருந்து கீழிறங்கி தன்னை முழுவதுமாக தன் உடலுக்குள் கொண்டுவந்து சாந்தபடுத்தினான். மெல்ல மனதிலிருந்து முழுவதுமாக பாரத்தை தளர்த்தி நனவு மனதுக்கு தன்னை கொண்டுவந்து உணர்வுகளை புருவங்களின் இடையில் குவித்து மனசு முழுவதும் அமைதியாக மாறியவுடன் மெதுவாக கண்களை திறந்தான். தலையில் கல்பட்ட இடத்தில் மட்டும் வலியை இப்பவும் அவனால் உணர முடிந்தது. நிதானமாக தன்னை சுற்றி யிருக்கும் பூங்காவை பார்த்தவன் இப்போது மாண்டலினையும் ஏட்டு சுவடிய்யையும் கீழே வைத்தான்.

பின் தன்னை மீறி குலுங்கி குலுங்கி அழத்துவங்கினான்.

[ அடுத்த அத்தியாயம் ] பகுதி 3 [பாகம் 2] : யானைக்கூட்டங்களின் பின்னால் பட்டாம்பூச்சிகள் ஏன் பறந்துசெல்கின்றன?





வாசகர் கருத்துக்கள் :





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT

இதையும் படிங்க !

பகுதி 1
மடங்கி விரியும் நகரத்தின் வீதிகள்.
சந்திர குணசேகரனின் வினோத அனுபவம்.
ஜி. ராம்பிரசாத்தின் ஒரு சனிக்கிழமை இரவு.
காதலர் கடந்து செல்லும் சரளாவின் ஜன்னல்.
எவரும் அறிய முடியாத அதிசயங்களின் நிழல்.
அன்புடன் ஜி.ராம்பிராசாத் அவர்களுக்கு உங்கள் நாவலை டைப் செய்த காயத்ரி எழுதுவது.
பீர் கோப்பைகளுடன் அரங்கேறியது எழுதப்படாத ஒப்பந்தம்.
திருப்பங்களில் லாரியுடன் வேகமாய் வரும் விபரீதங்கள்.
பகுதி 2
ஏகாம்பரத்தின் கதவு திறப்பும் வெளிச்சத்தின் முதல் பிரவேசமும்.
நகராட்சி மன்ற தலைவர் மா. நா.பெரியசாமிக்கு நெஞ்சுவலித்த பிரச்னை
மாலைகள் மயங்கி சரியும் ஆறுமுகம் டெய்லர் கடை வாசல்
மாமன்ற கூட்டமும் ம.நா.பெரியசாமியின்.பதட்டம் நிறைந்த பேச்சும்.
ராஜ நாகம் வெளியேறி சென்ற ஜன்னல்
அங்கயற்கண்ணியின் விசித்திர பிசாசு.
சரவணன் என்ற பெருமனிதன்
துயரம் விகசிக்கும் நகரத்தின் வீதிகள்
மீண்டும் அந்த பறவைகளின் வீதிவலம்
அவனது வருகையோடு சரவணனின் ஆனந்த நிலை
கோவிலுக்கு போய் பாருங்கள் கடவுள்கூட பணத்துக்காக அலைகிறார்.
இரண்டுமாதங்களும் சில நிகழ்வுகளும்
நகரை நிரப்பிய அந்த அற்புத இசை
முறைமை மீறும் மீனாட்சி.
மனதை மயக்கிய அந்த மெல்லிய இசை
சரவணன்
பகுதி 3
பொறியாளனின் கோடைக்கால பிரச்னைகளுக்கான ககனவழி தீர்வு பயணம்








ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<