Page last updated at Thursday, February 22, 2010 at 11:57:28 PM IST

நீரூற்று இயந்திர பொறியாளன் - அஜயன்பாலா : ஓவியம் மருது




      Thadagam - Ajayan Bala - Neerutru Eyandara Poriyalaan - Novel
மருது




[ சென்ற அத்தியாயம் ] பகுதி 3 [பாகம் 1] :பொறியாளனின் கோடைக்கால பிரச்னைகளுக்கான ககனவழி தீர்வு பயணம்

பகுதி 3 [பாகம் 2] : யானைக்கூட்டங்களின் பின்னால் பட்டாம்பூச்சிகள் ஏன் பறந்துசெல்கின்றன?



முதல் பூங்காவின் வேலை துரிதமாக நடைபெற துவங்கியது. .ஆரம்பகட்ட தோட்ட சீரமைப்புவேலைகள் முழுவதுமாக முடிந்துவிட அடுத்து பூங்காவின் மையத்திலிருந்த நீரூற்றை சரிபார்ப்பது மட்டுமே முக்கியவேலையாக மீதமிருந்தது. நீரூற்று இயந்திர குழாய்களின் அடைப்புகளை சுத்தப்படுத்தும் பணி அத்தனை சாதாரணமானதல்ல. அதுதான் மிக மிக முக்கியமான பணியும் கூட . அதில்தான் பொறியாளன் முழு ஆன்மபலத்துடன் ஈடுபடவேண்டியிருந்தது. . எனவே கடைசியாக பார்வையிடவந்தபோது கமிஷ்னரிடம் பொறியாளன் அடுத்த ஒருவாரத்திற்கு யாரும் தன்னை தொந்தரவு செய்யவேண்டாம் என்று கூறியிருந்தான்.

அத்னையொட்டி கமிஷ்னரும் அதனை பலருக்கும் வாய்மொழி எச்சரிக்கையாக அறிவித்தார்..குறிப்பாக சரவணனிடம் இதைக்கூறினார். ஏற்கனவே சரவணனுக்கு பொறியாளன் மேல் தோன்றியிருந்த அதிருப்தியுணர்வை இது அதிகப்படுத்துவதாக இருந்தது.

காக்காமலை பூங்காவின் வாயில்கதவு முழுமையாக சாத்தப்பட்டது. பூங்காவின் காவலாள் முருகையன் பொறியாளனுக்கு சேவை செய்வதை தன் பிறவிபயனாக கருதி பூங்காவுக்குள் யாரும் வராமல் பார்த்துக்கொண்டான் . தனு வந்தபோது கூட அவளை உள்ளேவிடாமல் விரட்டியடித்தான்.

முருகையனுக்கு பொறியாளனை வெறுமனே வேடிக்கை பார்ப்பதே ஒருவினோத அனுபவம். அவ்வப்போது எதையோசிந்திப்பவனாக காணப்படும் சுபாவம்,அத்ன் அழகு ,அவனது முகத்தின் காந்தம், சிரிப்பின் ஒளி ஆகியவை முருகையனுக்கு மெதுவாகத்தான் புலப்பட்டது. நீரூற்று குழாய்பணிகளின் துவக்க நாளின் போது நீர்த்தொட்டியை சுத்தம் செய்வதில் அவனும் கூட மாட வேலைசெய்தான் .பின் குழாய் சுத்தபணிகளுக்கான நேரம் வந்தபோது முருகையனை இனி தன் அருகில் வரவேண்டாம் என கேட்டுக்கொண்டான் . முருகையன் அப்போதைக்கு விலகிச்சென்றாலும் எதற்கு இத்தனை முஸ்தீபுகள் சாதாரண ப்ளம்பர் செய்யும் குழாய் சீரமைப்பு பணிதானே இதற்கு இப்படியெல்லாம் கட்டுபாடுகள் தடைகள் வேண்டுமா என தனக்குத்தானெ கேட்டுக்கொண்டான் . அன்று இரவே அவனுக்கான் முறைமை உணவு கொண்டுவந்து தரும்போது பொறியாளனிடம் வெளிப்படையாக கேட்கவும் செய்தான்.

துவக்கத்தில் பொறியாளனிடமிருந்த நீண்ட சிரிப்பொலி தோன்றியது. பின் எங்கோபார்த்தவனாக புனைவுகள் இல்லாமல் நேரடியாக குறைந்த சத்தத்தில் தொடர்ந்து முருகையனிடம் பேசத்துவங்கினான். அவன் பேச்சின் சாரம் இதுதான்.

வாழ்க்கை சில விசித்திர பிணைப்புகளால் நிர்பந்திக்க பட்டிருக்கிறது. மனிதன் தன் வாழ்க்கையை உணவு உற்க்கம் குடும்பம் என தொடர்செயல்பட்டுக்குள் சுருங்கிக்கொள்கிறான். ஆனால் தன்னை சுற்றி சுழலும் இயற்கையின் அதிசயங்களை அவன் பொருட்படுத்துவதில்லை. வீட்டுக்கு எதிரே ஓடும் பூனையை பற்றி அது ஏன் எதற்கு ஓடுகிறது என்ற கேள்வியில்லாமல் வாழ்கிறான்? நாய் ஏன் வாலை வயிற்றில் அழுத்திக்கொண்டு ஓடுகிறது.? குளத்தில் தத்துபூச்சி திடீர்பரபரப்பாவது ஏன்? மழை எப்போது வரும்? காலரா எப்போது வருகிறது? எலிகள் ஏன் அதிகமாகின்றன.?வெட்டுக்கிளிகள் சிலநாட்கள் ஏன் அதிகமாகிறது.?ஈசல்கள் ஏன் திடீரென் ஒருநாள்மட்டும் தோன்றிமறைகிறது? காட்டில் யானைக்கூட்டங்களின் பின்னால் பட்டாம்பூச்சிகள் ஏன் பறந்துசெல்கின்றன போன்ற கேள்விகளுக்குள் அவன் விழுவதில்லை.ஆனால் இதற்கும் அவன் வாழ்க்கைக்கும் தொடர்பிருக்கிறது..அவனது பஞ்சத்துக்கும் ஊரின் துயரத்துக்கும் இதுபோன்ற காரியங்களுக்குமிடையில் ஒரு கூட்டல்கழித்தல் கண்க்கு இருக்கிறது என தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தான்.

இந்தத்கவல்களை அவன் கூறும்போது சற்று முன்னும் பின்னுமாக கவித்துவமான நடையில் சொற்கள் பின்னி பின்னி அவனிடம் விவரித்தான் ஆனால் முருகையனோ தன் கேள்விக்கும் இந்தபதிலுக்கும் தொடர்பில்லையென்றே நினைத்தான். என்றாலும் மேலும் கேள்விகள் கேட்க துணிவில்லை. முருகையனை பொறுத்தவரை பொறியாளன் செய்யும் எதுவும் உன்னதமான காரியங்கள். நமக்கு விளங்காவிட்டாலும் அர்த்தம் நிறைந்தவை அவ்வளவுதான் .

சட்டென பொறியாளன் எழுந்துகொண்டான்..

தன் பேச்சை நிறுத்தி எதையோ கூர்ந்து கவனித்தான் முருகையன் பொறியாளனையே கவனித்தான்இதுபோல பொறியாளன் அடிக்கடி செய்வது வழக்கம் . முருகையனும் பொறியாளன் இப்படிசெய்வதற்கு ஏதோகரணம் இருக்கும் என விட்டுவிடுவான் ஆனால் இம்முறை அவனுக்க்குள் இதுகுறித்து கேட்கும் எண்ணம் எழுந்தது. ஆனால் அதற்கு முன் சட்டென பொறியாளன் முகம் திடீர்பரவசத்துக்கு மாறீயது ..முருகையனை பார்த்து “இதோ இன்னும் பத்துவினாடியில் அந்த இடதுபக்க மூலை மரத்திலிருந்து ஒரு தேங்காய் விழப்போகிறது என அத்திசை நோக்கி கைநீட்ட அந்த பக்கம் முருகையன் சட்டென த்லையை திருப்பினான் இருவரும் கூர்ந்து அங்குகவனிக்க சொல்லிவைத்தார்போல் சரியாக பத்தாவது வினாடியில் அதே அவர்களுக்கு இடப்பக்க மூலையோர மரத்தின் அருகே தொப் பென்ற சத்தம் கேட்கவே முருகையன் வியந்தான். இருட்டில் அது சரியாக தெரியாவிட்டாலும் தேங்காய் விழுந்த ஓசைதான் அது என்பதை முருகையன் நன்கு அறிவான். அவனுக்கு வியப்பு தாளவில்லை.

நான் ஒன்றும் மந்திரம் செய்யவில்லை இது முழுக்க இயற்கையின் நியதி.முழு கவனத்துடன் இயற்கையை உள்வாங்கும்போது அதன் ஒவ்வொரு அசைவையும் குறித்துநம்மால் மதிப்பிட்டுவிடமுடியும்.எனக்கூறி பொறியாளன் முருகையனை நோக்கி கண்சிமிட்ட அவனோ இன்னும் பிரமிப்பு கலையாதவனாக மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தான்.

தொடர்ந்து பொறியாளன் பேசியதன் சாரம் இப்படியாக இருந்தது. அவனது கவித்துவமான நடையை ஒருவேளை வாசகர்கள் முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும் எனும் காரணத்தினால் அதனை சுருக்கி சாரமாக அவன் குரலிலேயே த்ருகிறேன்

”இதன் அடிப்படையில்தான் இந்த நீரூற்ரு இயந்திரங்களை நான் பழுதுபார்ப்பதை எனது தொழிலாக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் .இத்னை சரிசெய்யும் போது அது நகரத்திற்கும் நகரமக்களின் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய மாற்றத்தை தரும் என நம்புகிறேன். இதுநாள்வரை நான் பழுது பார்த்த இயந்திரங்களின் போது பல அதிசயங்கள் நிகழ்ந்திருக்கின்ற்ன.அதேபோல உடன் ஒவ்வொருமுறையும் இத்னை செய்யவிடாமல் பல இடர்பாடுகளையும் சந்தித்திருக்கிறேன். இனி நான் பழுதுபார்க்க போகும் ஒவ்வொரு நீரூற்று இயந்திரமும் என் உயிரை மூலதனமாக வைத்தே பழுதுபார்க்கவிருப்பதாகவும் அக் காலங்களில் இயந்திரங்களின் அழுக்கோடு சேர்த்து நகரின் மாய அழுக்கையும் சுத்தபடுத்துவதால் பலம் கொண்ட தீயசக்திகளின் தொந்தரவுகாரணமாக தான் பலத்தபாதிப்புக்குள்ளாக நேரிடும் என்றும் இதுகிட்டத்ட்ட ஆயிரம்பேருடன் போர்புரியும் யுத்தத்துக்கு நிகரான காரியம் என்றும் பொறியாளன் கூற முருகையனுக்கு பொறியாளன் சொல்வது ஏதோபுரிந்தும் புரியாத மயக்கத்தை தருவதாக இருந்தது. ஆனாலும் இப்போது இந்தபூங்காவின் காவலாளாக பணிபுரிவதின் மூலம் வாழ்வில் ஏதோஒரு முக்கிய காரியத்தை செய்வதாகமட்டும் அவன் உணர்ந்தான் .

தனு மூலமாக மலையில் பதுங்கியிருந்த பல பிச்சைக்காரர்கள் மற்றும் தொழு நோயாளிகளுக்கு பொறியாளன் பற்றிய தகவல் பரவி தினமும் காலையில் பொறியாளனை பார்க்க ஆட்கள் கூடத்துவங்கினர் இரவில் விழித்திருந்து நள்ளிரவுக்குமேல் காற்றில் பரவும் அந்த தீனமான இசையயை உற்றுகேட்டனர். இரவு உறங்கும் போது தங்களுக்கு வந்த விபரீத கனவுகளுக்கு ஆளுக்கு ஒரு அர்த்ததை தங்களுக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டனர் .சிலர் தனுவைத்தேடிவந்து அதற்கான விளக்கங்கள் கேட்டனர்.

தனு கிட்டத்தட்ட பொறியாளனின் பிரச்சார துதுவராகவே செயல்பட்டாள். ஒரு நாள் இரவு அவள் கூடாரத்தின் முன் கூடிய பலரும் அவள் அதிசயத்துடன் பேசுவதற்கு பொறியாளன் அப்படி என்ன காரியம் செய்தார் அவரிடம் உண்மையில் ஏதெனும் ஆற்றல் இருக்கிறதா என்றும் துருவிதுருவி கேட்ட்னர்.

அப்படிகேட்டவுடன் சிலநிமிடம் அமைதியாக கண்களை மூடி அன்று நள்ளிரவில் அவள்கேட்ட இசையையும் அது தன் மனதில் உண்டாக்கிய பெரும் கருணையையும் மனதில் கொண்டுவந்தாள் .பின் அவர்களிடம் உணர்ச்சி பொங்க பேசதுவங்கினாள்’. அவள்முன் கூடியிருந்த அனைவரும் குத்துக்காலிட்டு ஆவலுடன் அவள்முகத்தையே கூர்ந்து கவனித்த்னர். குளிர்காற்றுக்கு உடல்முழுக்க தங்களது அழுக்கான உடைகளையே போர்த்திக்கொண்டு தலையில் முக்காடு போட்டுக்குண்டு ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். புண்களாகிப்போன இந்தமுகத்துடன் தன் மருமகன் வீட்டுக்கு, உண்டாகியிருக்கும் மகளை பார்க்க போகமுடியாமல் தவித்த தன் வேத்னையை முதலில் சொல்லிய அவள் அப்போது இரவில் கேட்ட இசை தன் மனதில் உண்டாக்கிய மாற்றங்களையும் தொடர்ந்து காம்பவௌண்ட் சுவற்றுக்கு அப்பால் உட்கார்ந்து அவரிடம் தன் குறைகளை கொட்டியதையும் தன் மீது வானத்திலிருந்து விழுந்த நீர்த்துளிகள் பற்றியும் கூறியவள் துணிந்து மகள் வீட்டுக்கு போகும்படி அவர் தனக்கு உத்தரவு இட்டதை கூறினாள் .அனைவரும் ஆவலுடன் நீ அங்கு போனாயே அங்கு என்ன ந்டந்தது உன் மகளை பார்த்தாயா மாமியார் வீட்டில் உன்னை பார்த்து முகத்தில் துப்பவில்லையா அருவருப்படையவில்லையா அது உன் மகளை பாதிக்கவில்லையா என தொடர்கேள்விகளாக கேட்டு தனுவை துளைத்து எடுத்த்னர்

தனு அவர்கள் முன் அமைதியாக ஒரு மாயசிரிப்பை உதிர்த்தாள்.அவர்கள் என்னை வீட்டுக்குள் அனுமதித்தார்கள். மகள் என்னை கட்டிக்கொண்டு அழுதபோது யாரும் அவளை தடை செய்யவில்லை. என் மகளின் மாமியார் என்னை வீட்டினுள் உட்காரவைத்து சாப்பிடச்சொல்லி வற்புறுத்தி சாப்பிட்டபின் வழியனுப்பினார்கள்.சுருக்கமாக சொன்னால் வீட்டிற்குவந்த ஒரு மகாலட்சுமியை போல வழி நடத்தினார்கள். நான் இதை எதிர்பார்க்கவில்லை.

அவள் இப்படி சொன்னதும் அங்கிருந்தபலரின் முகமும் வியப்பில் ஆழ்ந்தது. அப்படி நடக்க வாய்ப்பே இல்லை தனு பொய் சொல்கிறாள் என்றும் சிலர் கருதி எதற்கு இவள் இந்த ஈன பிழைப்பை செய்யவேண்டும் என்பது போல முகத்தை சுருக்கிக்கொண்டனர். ஆனால் தனு அதற்கெல்லாம் தளர்வடையாதவளாக தொடர்ந்து பேசினாள் இந்த உலகில் என்றாவது நம்மை யாராவாது ஒரு நொடியேனும் அவமானப்படுத்த்மால் ஒதுங்கி போயிருக்கிறார்களா? யார்பார்த்தாலும் முகத்தை கோணி எட்டி விலகித்தானே ஓடுகிறார்கள் அவர்கள் நம் முகத்தின் புண்ணை கண்டுதானே அருவருக்கிறார்கள் ஆனால் மகளின் வீட்டில் மட்டும் அப்படி எதுவும் நடக்கவில்லை. தனது மகள் தன்மேல்காட்டிய பரிவு கூட தாய்ப்பசம் காரணமாக என கூறிவிடலாம் ஆனால் முன்பின் பார்த்திராத அவளது மாமியாரும் கண்வனும் தன்மேல் எப்படி அன்பை பொழிய வைக்க முடியும்.

அவள் இப்படி சொன்னதும் கூடியிருந்தவர்களில் ஒருவன் அதிசயம் தான் என்றான் தொடர்ந்து அவன் தன் கண்ணீரை தோளின் துண்டால் துடைத்துக்கொண்டான் .அவனது மனைவியாக இருந்த பார்வையற்றவள் என்னை போன்ற குருடிகளுக்கு வித்தியாசமே இல்லை எல்லா மனிதர்களும் ஒன்றுதான் எனக்கூறியதும், அவள் அருகில் அமர்ந்திருந்த அவளது கணவன் சற்றுமுன் தன் கண்ணீரை துடைத்த்வன் அவளிடம் நல்லவேளை உனக்கு பார்வையில்லை இருந்தால் எப்பவோ என்னை வுட்டுட்டு ஓடிபோயிருப்ப எனகூற அவன் கூறீயதை ஆமோதிக்கும் விதமாக அனைவரும் சிரித்த்னர்.

சிரிப்பு முடிந்ததும் தனு தன் பேச்சை தொடர்ந்தாள் .

இப்படி அவர்கள் என்னை மதிக்க காரணம் பூங்காவிலிருக்கும் அந்த சாமி தான் அவர்தான் என் மகளின் மாமியார் மற்றும் கணவரின் மனதில் மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறார். அதனைக்காட்டிலும் அவர்கள் எனக்கு சோறு போட்டபோது காதில் எங்கிருந்தோ அன்று இரவு அவர் வாசித்த அந்த இசை என்னுள் கேட்டது. இதைவிட வேறேன்ன வேண்டும் தனு அவர்கள் முன் கூற உண்மைதான் பொறியாளன் உண்மையில் ஒரு சக்தி வாய்ந்தவனாகத்தான் இருக்கவேண்டும் என வாய்விட்டு கூறினர். ( தொடரும் )

தொடரும்..,





வாசகர் கருத்துக்கள் :





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT

இதையும் படிங்க !

பகுதி 1
மடங்கி விரியும் நகரத்தின் வீதிகள்.
சந்திர குணசேகரனின் வினோத அனுபவம்.
ஜி. ராம்பிரசாத்தின் ஒரு சனிக்கிழமை இரவு.
காதலர் கடந்து செல்லும் சரளாவின் ஜன்னல்.
எவரும் அறிய முடியாத அதிசயங்களின் நிழல்.
அன்புடன் ஜி.ராம்பிராசாத் அவர்களுக்கு உங்கள் நாவலை டைப் செய்த காயத்ரி எழுதுவது.
பீர் கோப்பைகளுடன் அரங்கேறியது எழுதப்படாத ஒப்பந்தம்.
திருப்பங்களில் லாரியுடன் வேகமாய் வரும் விபரீதங்கள்.
பகுதி 2
ஏகாம்பரத்தின் கதவு திறப்பும் வெளிச்சத்தின் முதல் பிரவேசமும்.
நகராட்சி மன்ற தலைவர் மா. நா.பெரியசாமிக்கு நெஞ்சுவலித்த பிரச்னை
மாலைகள் மயங்கி சரியும் ஆறுமுகம் டெய்லர் கடை வாசல்
மாமன்ற கூட்டமும் ம.நா.பெரியசாமியின்.பதட்டம் நிறைந்த பேச்சும்.
ராஜ நாகம் வெளியேறி சென்ற ஜன்னல்
அங்கயற்கண்ணியின் விசித்திர பிசாசு.
சரவணன் என்ற பெருமனிதன்
துயரம் விகசிக்கும் நகரத்தின் வீதிகள்
மீண்டும் அந்த பறவைகளின் வீதிவலம்
அவனது வருகையோடு சரவணனின் ஆனந்த நிலை
கோவிலுக்கு போய் பாருங்கள் கடவுள்கூட பணத்துக்காக அலைகிறார்.
இரண்டுமாதங்களும் சில நிகழ்வுகளும்
நகரை நிரப்பிய அந்த அற்புத இசை
முறைமை மீறும் மீனாட்சி.
மனதை மயக்கிய அந்த மெல்லிய இசை
சரவணன்
பகுதி 3
பொறியாளனின் கோடைக்கால பிரச்னைகளுக்கான ககனவழி தீர்வு பயணம்








ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<