Page last updated at Monday, September 21, 2009 at 11:57:28 PM IST

தி மோட்டர் சைக்கிள் டைரீஸ் (The Motor cycle Diaries) - Uma Shakthi




      Thadagam - Motor Cycle Dairies - Movie Review
Motor Cycle Dairies

சே என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம்..போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம். சே எனும் அற்புத போராளியின் புகழ் அவர் வாழ்ந்த நிலங்களை தாண்டி உலகின் திசையெங்கும் அறியப்பட்ட காரணம் அந்த மகத்தான் மனிதரின் வாழ்க்கையும் அதில் படிந்திருக்கும் ரத்தக் கறையுடனான உண்மைகளும்தான். லத்தீன் அமெரிக்க புரட்சியில் க்யூபாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோவின் தலைமையை உருவாக்க உருதுணையாக சே ஏந்திய துப்பாக்கியின் தோட்டாக்கள் புரட்சியின் வடிவமாக அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது.



எர்னெஸ்டோ ‘சே’ குவேரா - மனிதர்களை பெரும் துயர்களிலிருந்து விடுவிக்க ஆசைப்பட்ட ஒரு மனிதன் – அவனது வாழ்க்கை – அவனது தேடல் – அவனின் பயணம் இதுவே வால்டர் சாலஸ் இயக்கியிருக்கும் the Motorcycle Diaries’ திரைக்கதையின் ஒற்றைவரி. உலகின் முதன்மையான புரட்சியாளரின் ஆரம்பக் கட்ட நாள்களின் தொகுப்பே இத்திரைப்படம். உண்மையே புனைவாக்கம் செய்யப்பட்டு நிழலாக மட்டுமல்லாமல் திரையின் நிஜமாக காலத்தின் கரங்களில் ஆழமான பதிவு செய்யப்பட்டிருக்கும் திரைக்காவியம் இது எனலாம்.



1951 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்ட எர்னஸ்டோ குவேரா (ப்யூசர் எனும் செல்லப் பெயர் உண்டு) பயோ கெமிஸ்டான தன் நண்பன் ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு (ப்யூசரை விட நான்கைந்து வயது மூத்தவன்) புதிய நாடுகளை, வெவ்வேறு ஊர்களை, அதன் மனிதர்களை, குறிப்பாக பெண்களை பார்த்து பழக ஆசைப்பட்டு தங்களது அதர பழசான ஆனால் நல்ல நிலையில் ஓடக்கூடிய மோட்டார் சைக்கிளில் (அதன் பெயர் மைட்டி ஒன்) லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே நீண்ட நெடிய பயணத்தை துவக்குகிறார்கள். நண்பனின் பொறுப்பில் எர்னஸ்டோவை ஒப்படைத்த அவனின் குடும்பம் புன்னகையுடனும் கொஞ்சம் கண்ணீருடனும் அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்புகிறது.



துள்ளலுடன் துவங்கிய அவர்களின் அதி உற்சாகப் பயணம் மலைப்பாதைகளையும் ஆற்றோடைகளையும் நீண்ட புறவழிச் சாலைகளிலும் தங்கு தடையின்றி வழுக்கியோடியது. மைட்டி ஒன்னும் மின்னலெனவே அவர்களுக்காய் பறந்தது. இளமையின் உச்சத்திலும் சாகச மனோபாவத்திலும் திளைத்துக் கிடக்கும் அவ்விருவரும் பெரும் மனஉத்வேகத்துடன் தங்களது பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஓரிரு முறை அவர்கள் வண்டி மணற்பாதையில் சறுக்கி விழுந்தாலும் கலங்காமல் சரி செய்து பயணத்தை தொடர்கிறார்கள்.



தோழர்கள் இருவரும் தேர்ந்தெடுத்திருந்த வழி அபாயகரமானது மிகவும் கடினமானது. ஆனால் ஒரு போதும் அடைய முடியாதது அன்று. வடக்கு திசையில் ஆண்டெஸ் மலையை தாண்டி, சிலியின் கரைகளில் பயணித்து, அடகாமா பாலைவனத்தை கடந்து பெருவிற்குள் நுழைந்து இறுதியில் வெனின்சுலாவை அடைய வேண்டும், ஆல்பர்டோவின் சபதம் ஏப்ரல் இரண்டாம் தேதிக்குள் தனது முப்பதாவது வயது தொடக்கத்தில், தோழன் எர்னஸ்டோவுடன் அங்கு சென்று சேர்வதுதான். ஆனால் அவர்களின் அருமை நண்பன் மைட்டி ஒன் அடிக்கடி ரிப்பேர் ஆனதால் அவர்களின் பயணம் தடைப்பட்டு தடைப்பட்டு ஜூலை மாதம்தான் சென்றடைகிறார்கள். இடைப்பட்ட காலகட்டங்களில் அவர்களின் அனுபவங்களே எர்னஸ்டோவின் மொழியில் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களின் அவனது டைரிக் குறிப்புக்களாக பதிவாகிறது. இந்தப் பயணம்தான் ப்யூசர் புரட்சியாளராக மாறியதற்கான முதல் விதையை போட்டது பயணத்தின் ஆரம்பத்தில் எர்னஸ்டோ தன்னுடைய தோழி சின்சினாவை சந்திக்க விரும்பி அவளின் ஊருக்குச் செல்கிறான். சூதாட்டம், ஆட்டம் பாட்டத்திற்கு பிறகு அவர்கள் சிறுது நேரம் பேசுகிறார்கள். வெகு நாள் கழித்து அவனை சந்தித்த அவள் அவனுடைய பயணத்தை வாழ்த்தி முத்தமிட்டு பலமுத்தமிட்டு கொஞ்சி அதன் பின் அடுத்த நாள் அவன் கிளம்பும் தருவாயில் கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை அவனிடம் தந்து எக்காரணத்தை கொண்டும் செலவு செய்துவிடக்கூடாதென்ற அன்பான பந்தனையுடன் அவனுக்கு அளிக்கிறாள். புன்னகையுடன் விடைபெற்று பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். பல சோதனைகள் வரும்போதெலாம் அப்பணத்தை ஆல்பர்டோ கேட்கிறான், எவ்வளவு கெஞ்சியும் தர மறுக்கிறான் எர்னெஸ்டோ. ஒரு கட்டத்தில் தீவிர ஆஸ்மாவால் பாதிக்கப்பட்ட தன்னை காப்பாற்றிக்கொள்ளக் கூட அவன் அப்பணத்தை பயன்படுத்தவில்லை. மன உறுதியும் நேர்மையும் ஒருங்கே உள்ள் குணம் கொண்டவனாய் நம்முன் எர்னெஸ்டோ காட்சிப்படுத்தப்படுகிறான்.



அடுத்த பக்கம் >






வாசகர் கருத்துக்கள் :

Kathir

Wowwww....very nice review.


Hari

I havent read such a review anywhere .....very elaborative and informational...


கண்ணன்

"சே என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம்.." - தொடக்கமே அதிரடியாக இருக்கிறது .


Praveen

பயணம் என்பது ஒரு அதி அலாதி அனுபவம் என்பதை இப்படத்தை பார்த்தாலே உணரலாம். நமக்குள் பயணிக்க வேண்டும் என்ற வேட்கையை கண்டிப்பாய் இப்படம் தோற்றுவிக்கும்...சிறந்த படம் சிறப்பான விமர்சனம்




இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT








<