Page last updated at Thursday, March 09, 2009 at 11:57:28 PM IST

The Classic - Uma Shakthi




      Thadagam - The Classic - Movie Review - Uma Shakthi
ATONEMENT

கடந்த காலத்தில் நிகழ்ந்த அம்மாவின் காதலும் நிகழ்காலத்தின் மகளின் காதலையும் அக்காதல் அவர்களுள் ஏற்படுத்திய உணர்வுகளையும் துல்லியமாகச் சொல்லியிருக்கும் திரைப்படம் ‘தி க்ளாஸிக்’. காதல் எனும் உணர்வு வந்துவிட்டால் அந்த மனம் என்னவெல்லாம் பாடுபடும் எவ்வளவு நுட்பமாகும் எத்தகைய சந்தோஷங்களையும் துயரையும் அடையும் என்பதை அழகான மெல்லிய நூலிழையில் திரையில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

அழகான அந்த வீட்டில் தன் அறையில் ஜன்னலை திறந்து வெளியே பார்க்கிறாள் ஜி-ஹே (ஸன் எ ஜின்). மழை பொழியலாம் எனும்படியான வானிலை அவளை இனம் தெரியா பரவசத்துள் ஆழ்த்துகிறது. அவள் அம்மா மிகவும் ரசிக்கும் வானவில் வெகு தூரத்தில் தோன்றியிருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்கிறாள். தனக்குள் சிரித்தபடி வீட்டை ஒதுங்க வைக்கத் துவங்குகிறாள். புத்தகங்களை அடுக்கி வைக்கும் போது தனது அம்மாவின் அலமாரியை எதேச்சையாக திறக்கிறாள் ஜி-ஹே. அதில் அழகிய வேலைப்பாடுகளுடன் சிறிய பெட்டி ஒன்று இருப்பதைப் பார்த்து அதை திறந்துப் பார்க்கிறாள். பொக்கிஷமாக தன் அம்மா ஜுஹி (ஸன் எ ஜின்- மகளாகவும் தாயாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்) போற்றி பாதுகாத்துக்கொண்டிருக்கும் காதல் கடிதங்களும் டைரியும் அடங்கிய பெட்டி அது என்பதை அறிந்து அதை வாசிக்கலாம் என தயக்கத்துடன் முடிவு செய்கிறாள் ஜி.

அம்மாவின் கதையுடன் பின்னிப் பிணைந்து அவளுடைய வாழ்வின் நிகழ்வுகளாக பல்கலைக்கழகத்தில் உடன் படிக்கும் சாங்-மின்னுடனான ஆரம்ப கட்ட காதலும் ஜியின் நினைவுத் திரையில் மாறி மாறி வருகிறது. கல்லூரியில் நாடகத் துறைத் தலைவனாக இருக்கிற சாங்கை மனதார நேசிக்கிறாள் ஜி. அவளுடைய நெருங்கிய தோழி சூ கியாங்கும் சாங்கை விரும்புவதை அறிந்து தன் காதலை மனதிற்குள் மறைத்து வைத்திருக்கிறாள். சாங் யாரை விரும்புகிறான் என்பதை அறியாமல் குழப்பத்தில் அலைபாய்கிறாள். இச்சமயத்தில்தான் அம்மாவின் கடிதங்களை வாசிக்க ஆரம்பிக்கிறாள்.

ஜுஹி பள்ளி விடுமுறைக்கு கிராமத்தில் இருக்கும் தன் தாத்தா வீட்டிற்கு வந்திருக்கிறாள். அங்கு அவள் ஜுன் - ஹா (ஜோ சியும் வூ) எனும் அழகான இளைஞனை சந்திக்கிறாள். அவன் ராணுவ பயிற்சியில் விடுமுறைக்கு தன் மாமா வீட்டிற்கு வந்திருப்பவன். ஜுஹியைப் பார்த்தவுடன் அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அவன் நண்பன் அவள் அந்த ஊரிலேயே பெரும் பணக்காரி மேலும் முக்கியமான அரசியல்வாதியின் மகள் வேறு என அச்சுறுத்துகிறான். அதைப் பற்றியெல்லாம் ஜுனுக்கு கவலையில்லை. காணக் கிடைக்காத தேவதையை தரிசித்துவிட்டதாக மகிழ்கிறான். அவள் ஊருக்கு வெளியே இருக்கும் பாழடைந்த மண்ட்பத்திற்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டபோது தயங்காமல் ஒத்துக்கொள்கிறான்.



அடுத்த பக்கம் >






வாசகர் கருத்துக்கள் :






இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT








<