Page last updated at
Thursday, December 10, 2009 at 11:57:28 PM IST
தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல்
-
கணேசகுமரன்
Narikuravar(s)
ஏ எலினே எலி எலி .... ஏ எலினே எலி எலி ... மசாகா கின் மாராகே... மசாகாகின் மாராகே - விளக்கம் இறுதியில்.
சில வருடங்களுக்கு முன் சென்னையில் சக எழுத்தாளர் நண்பரொருவர் தன் சந்தேகத்தை என்னிடம் கேட்டார் நரிக்குறவர்கள் எனும் நாடோடி மனிதர்கள் நாம் கானும் இடங்களிலெல்லாம் தென்படுகிறார்கள். கிடைத்த இடத்தில் படுத்து உறங்குகிறார்கள். கிடைத்த சாப்பாடு சாப்பிடுகிறார்கள். ஓரு புடவை மறைப்பின் திருமணம் செய்து குழந்தைப்பெற்றுக்கொள்கிறார்கள் ஆனால் அவர்களில் யாராவது ஒருவர் இறந்தால் அவரை எங்கு புதைக்கிறார்கள் . அல்லது எரிக்கிறார்கள் வயதான குறவர்களை பார்க்கிறோம். இறந்த குறவர் பிணம் சுற்றி யாரும் அழுது நான் பார்த்ததில்லை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? தேசமே வீடாயிருக்கும் அவர்களது இடுகாடு உங்களுக்குத் தெரியுமா - என்றார்.
மரணம் பற்றி விசாரிக்கச் சென்ற எனக்கு ஒரு குறவப்பெண்ணின் பிரசவத்தினை நேரில் உணரும் கொடூரம் நேர்ந்தது. ஆமாம், அது கொடூரம்தான் புரியாத மொழியில் ஏதோ ஒரு வினோதமான சப்தம் அந்த இருட்டுக்குள்ளிருந்து கேட்டதும்தான் பேருந்து நிலையத்து மக்களுக்கு தங்கள் அன்றாட வழக்கமான பரபரப்புகளைத்தவிர வேறொன்றும் இந்நேரத்தில நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று புரிந்தது. பேருந்து நிலையம் நேர் எதிரில் அரசு மருத்துவமனை. அங்கு பிரசவத்திகென அனுமதிக்கப்பட்டிருந்த குறவப்பெண்ணொருத்தி எப்படியோ அங்கிருந்து கிளம்பி பேருந்து நிலைய கழிப்பறை கட்டிட ஒர் இருளில் தஞ்சமடைந்து விட்டாள். அவள் குறவப்பெண் என்பதற்கு அடையாளமாக அவள் கட்டியிருந்த தாவணியும் (புடவையின் பாதி ) கணுக்கால் ஏற்றிக் கட்டியிருந்த பாவாடை மட்டுமே சொன்னதே தவிர வேறெதுவும் குறிப்பிட்ட அடையாளம் இல்லை. காதிலோ மூக்கிலோ கழுத்திலோ எவ்வித அணிகலனு இல்லை புரிந்து கொண்டார்கள்.
ஏய்.. ஆஸ்பத்திரியிலேர்ந்து வந்திருக்குதுப்பா.. ஏம்மா என்னம்மா ஒனக்கு வேனும்.. ஏதாவது மறைவா துணி இருந்தா எடுத்துக்கிட்டு வாங்கப்பா ,, ஆச்சரியமாய் அங்கிருந்த ஆண்களுக்கு இருந்த அக்கறை பேருந்துக்கென காத்திருந்த ஒரு பெண்ணுக்குக் இல்லாமல் போயிற்று பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள் பேய் மட்டும் தான் இரங்கும் போலிருக்கிறது. லேசான வெளிச்சத்தில் தெரிந்த குறத்தியின் நிறைமேடான வயிறும் முகத்திலுறைந்த வலியும் மனதை என்னமோ செய்தது, வலி தாங்க முடியாமல் முனகி கத்தியவள் அடுத்து செய்த காரியம் பகீரென்றது.
தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல் : பகுதி 2
தொடரும்...
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :