Page last updated at Thursday, December 28, 2009 at 11:57:28 PM IST

தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல் : பகுதி 3 - கணேசகுமரன்




      Thadagam : Ganesakumara - About Narikuravar(s) community !
Narikuravar(s)

தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல் : பகுதி 1

தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல் : பகுதி 2

இவர்கள் பேசும் மொழிக்கு பெயர் கிடையாது. எழுத்துரு கிடையாது. அவர்களின் பாஷை தவிர தமிழ், தெலுங்கு பேசுகிறார்கள். முதன்முறையாக அவர்கள் மொழியாலே ஒரு பாடல் இயற்றப்பட்டு (பல்லவி சரணம் என்ற சம்பிரதாயங்கள் விலக்கி) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயக்குனர் மிஷ்கின் இயக்கும் "நந்தலாலா" திரைப்படத்திற்காக. இசைஞானி இளையராஜா இசையில் பதிவான இப்பாடலை ஒரு குறவ இனப்பெண்ணே பாடியுள்ளார். இப்பாடலின் பொதுவான அர்த்தமாய் அவர்கள் தெய்வத்திடம் வேண்டும் வேண்டுதல் பட்டியலாக விரியும். குறவர் இன மொழியின் முதல் பதிவான அப்பாடலே இக்கட்டுரையின் ஆரம்ப வரியான எலினே... எலி..எலி ஆகும்.

இக்கட்டுரைக்காக தகவல்கள் சேகரிக்க சென்ற இடங்களில் அவர்களின் வாழ்வினைப் போலவே பல கசப்பான அனுபவங்கள் - பொது நூலகத்திலோ குறவர் இனப்பதிவுகள் பற்றிய குறிப்புகள் எதுவுமில்லை, கூடாறம்மிட்டு தங்கியிருந்த குறவப் பெரியவரிடம் பேசியபோது பதில் பேச்சுக்கு பணம் வேண்டும் என்றால், மாறி வரும் உலகத்தில் மாற்றங்களுக்கு உட்பட்டுக்கொண்டிருப்பது ஹார்லிக்ஸ் மட்டுமல்ல என்பது தெளிவாக தெரிகிறது.

கடைசியாக... ...

தேவராய நேரி, துவாகுடிக்கு அருகில் உள்ள நரிக்குறவர்களின் நகரம், நாடோடிகளாய் திரியும் குறவர்கள் பற்றிய பிம்பங்களைச் சுமந்து இந்நகருக்குள் நாம் நுழைந்தால் அடைவது உச்ச பட்ச அதிர்ச்சியாகத்தானிருக்கும். அவர்கள் நம்மிடைய உருவாக்கிக்கொண்ட தகரடப்பா, பாசிமணி, நரிக்கொம்பு பிம்பங்களைக் கலைந்து நாகரீக உடையுடன் இருப்பார்கள். சுடிதார் அணிந்த பெண், பேண்ட் அணிந்த ஆண்கள் கையில் செல்போன் ககிதம் திரிவதைக் காணலாம். தங்களின் இறுதிக் காலத்தில் இங்கு வந்து சேர்ந்து விடும் வயதான குறவர்கள் தங்கள் தெய்வங்களான முனி, மற்றும் அம்மன் போன்ற சிறு தெய்வங்களை வணங்கியபடி உலா வருவார்கள் படித்து பட்டம் பெற்று வெளிநாடு சென்று வரும் இளைஞர்களும் உண்டு இவ்வூரில். இவர்களுக்கென தனியாய் இடுக்காடு உள்ளது. வாழ்நாள் முழுவதும் அலைந்து திரிந்து கால்கள் நிரந்தர ஓய்வு பூணுவது இங்குதான். இருந்தும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்தோ என்னவோ இன்னும் இவர்களிள் சிலர் நாடோடிகளாய் திரிந்த வண்ணமே உள்ளனர். செல்லும் வழியில் நிகழும் துர்மரணங்களைத் தொடர்ந்த நிலை மர்மமாகவே உள்ளது. செல்லும் வழியில் கொஞ்சம் ரகசியமாகவே இருக்கட்டும் அல்லது அவர்களுடனே அலையும் சிறுதெய்வங்கள் அம்மரணங்களிலிருந்து அவர்களைக் காப்பற்றட்டும்.

பின் குறிப்பு :

இக்கட்டுரை சில சுய அனுபவங்கள் மற்றும் செவி வழித் தகவல்களுடன் மட்டுமே எழுதப்பட்டது . புதிர் அவிழ்ப்பவர்கள் அவிழ்க்கலாம்.

கணேசகுமரன்
நாகப்பட்டினம்







வாசகர் கருத்துக்கள் :





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல்



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<