Page last updated at Monday, March 16, 2009 at 11:57:28 PM IST

அண்ணல் அம்பேட்கரும் தந்தை சிவராஜீம் - பேராசிரியர் ஜெயபாலன்




      Thadagam : Ambedkar and Shivran - Prof. Jayabalan
Ambedkar

செப்டம்பர் மாதம் என்றதும் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, வா.ஊ.சிதம்பரனார், டாக்டர் ராதா கிருஷ்ணன், பகத்சிங் ஆகியோரின் பிறந்த நாட்கள் வரலாற்றுணர்வுடைய பலருக்கும் நினைவுக்கு வரும். மேலும் திரு.வி.க. வின் நினைவு நாளும் நினைவுக்கு வரும்.இவ்வகையில் நினைவில் வைக்கத்தக்க இணையற்ற மாமனிதரான தந்தை ந. சிவாராஜின் பிறந்த நாளும் இறந்த நாளுமான செப்டம்பர் 29ஆம் நாளும் மிக முக்கியமான ஒன்றே ஆகும்

தந்தை சிவராஜீம் மாமனிதர்களும்

1892- ஆம் ஆண்டில் தோன்றிய தந்தை ந.சிவராஜ் 1964ஆம் ஆண்டில் காலமானார். அவர் வாழ்ந்த காலப் பின்புலத்தைக் கொண்டு ஒப்பிட நினைத்தால் தந்தை பெரியார், சுவாமி சகஜானந்தா, இராஜாஜி, பாவேந்தர் பாரதிதாசன், டபிள்யூ.பி.ஏ. சௌந்திர பாண்டியனார், பி.டி. ராசன் உள்ளிட்டச் சிறப்பு வாய்ந்த தலைவர்களோடு ஒப்பிடலாம். தந்தை சிவராஜூம் அன்னை மீனாம்பாளும் மேற்கொண்ட சமூக வாழ்க்கை அர்ப்ணிப்பேரடு ஒப்பிட வேண்மானால் இந்திய அளவில் ஜோதிபாபுலே தம்பதியினரையும் ஒப்பிடலாம். இவைகளை விடவும் ஒரு மாமனிதனின் ஆளுமை என்பது அம்மாமனிதரின் இலட்சியங்களினால், கோட்பாடுகளால் உணரப்படுவதாகும். அவ்வகையில் தந்தை சிவராஜ் அவர்கள் வாழ்ந்த காலத்தால் மட்டுமின்றிக் கொள்கையால், கோட்பாட்டால், செயல்பாட்டால் முழுமையாக அண்ணல் அம்பேட்கரோடு நினறவர், போராட்டக்களங்களில் புன்னகை முகத்தோடு. பூரித்த மார்போடு, வைர நெஞ்சத்தோடு புதுவையம் படைத்திடும் உணர்போடு ஒன்றிணைந்து நின்றவர். மேதகு ஆ,பத்மநாபன் இதுபற்றி எழுதுவதாவது,

"டாக்டர் பி.ஆர்.அம்பட்கர் அவர்களுக்கும், தமிழக ஒடுக்கப்பட்டோர் இயக்கத் தலைவர்களுக்கும் ஏற்பட்ட நெருங்கிய தொடர்புகளின் விளைவாக இந்திய நாட்டில் அங்கும் இங்குமாகப் பலவாகச் செயல்பட்டு வந்த தாழ்த்தப் பட்டோர் சம்மேளனம்' ஏற்பட்டது. சம்மேளனத்தின் தலைவராக டாக்டர் அம்பேட்கர் அவர்களே இருக்க வேண்டுமென திரு.சிவாராஜ், அன்னை மீனாம்பாளும் விரும்பினர், டாக்டர் அம்பேட்கர் அவர்களோ, தந்தை சிவராஜ் அவர்களை அகில இந்திய தாழ்த்தப் பட்டோர் சம்மேளனத்தின் தலைவராக நியமித்து நாக்பூரில் 1942 இல் தாம் கூட்டிய மாநாட்டில் முறையாக அறிவித்தார். தமிழ் நாட்டுத் தலைவர் அகில இந்திய இயக்கத்தின் தலைவரான வரலாறு அன்று நிகழ்ந்தது."

அதே ஆண்டில் அமேரிக்க நாட்டுக் கியூபெக்கில் நடந்த பசிபிக் நாடுகள் மாநாட்டில், இந்தியாவில் தீண்டாதாரின் பிரச்சனை என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை டாக்டர் அம்பேட்கர் அவர்களின் சர்ர்பில் சிவராஜ் படித்தளித்தார். அளிப்பது பற்றிய வேவல் திட்டம் பற்றி விவாதிக்க சிம்லாவில் நடந்த கூட்டத்தில் செட்யூல்டு மக்களின் பிரதிநிதியாக திரு.ந. சிவராஜ் கலந்து கொண்டார். டாக்டர் அம்பேட்கரும், தந்தை ந.சிவராஜ் அவர்களும் தம் இறுதி காலம் வரை இணைந்து நின்று .,



தொடரும்...



வாசகர் கருத்துக்கள் :




இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல்



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<