Page last updated at Thursday, March 16, 2009 at 11:57:28 PM IST

ஒரே ஒரு மரக்கன்று - பரமேஸ்வரி




      Thadagam : The Green Belt Movement by Wangari Maathai - Parameshwari
Wangari Maathai

1999-ஆம் ஆண்டில், ஜனவரி மாதத்தின் ஒரு அழகான அதிகாலைப் பொழுதில் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்ட கரூரா காட்டின் நடுவே ஒரு பெண்கள் குழு மெல்ல மெல்ல முன்னேறியது. தங்கள் பயணத்தின் ஆபத்தை அவர்கள் அறிந்தேயிருந்தனர். காட்டில் மிகுந்த கவனத்துடன் அமைதியாக வேலையைக் துவங்கினர். ஆனால் அதிகாலை இருட்டில் நிழல் உருவங்களாக அருகில் நெருங்கிய குண்டர் படை அவர்களைத் தலையில் அடித்தனர் கால்களால் உதைத்தனர். அப்படிப்ட்ட ஆபத்தான வேலை என்ன ? ஒன்று மில்லை. அவர்கள் ஒரே ஒரு மரக்கன்றை நட்டனர். அது , கோல்ப் மைதானம் அமைப்பதற்காக அழிக்கப்பட்ட வனப்பகுதி. காட்டின் ஒரு பகுதியை அழித்ததற்குத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவே பசுமை மண்டல இயக்கத்தார். (Green Belt Movement ) ஒரு மரக்கன்றை அங்கே நட்டனர். இந்த அமைப்பின் தலைவு வங்காரி மாத்தாய், இது போன்ற தாக்குதல் ஆபத்துகளும் அவருக்குப் புதிதல்ல. இத்தகையதெரு கொடூரமான தாக்குதலை முன்னர் பெற்றிருந்த அனுபவங்களால் எதிர்பார்த்திருந்த இயக்கத்தார், இம்முறை தாக்குதலைப் படம் பிடித்து, நடந்த மோசமான நிகழ்வை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினர்.

1992- இல் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி அரசுக்கு எதிராக நடந்த உண்ணா நிலைப் போராட்டத்தின் நான்காம் நாளில் மாத்தாய் காவல்களால் மிக மூர்க்கமாகத் தாக்கப்ட்டு, மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார், அரசின் இத்தகைய அராஜகப் போக்குக்கு வருந்தாமல் அவரைப் பைத்தியம் என்றும் நாட்டின் ஓழுங்கிற்கும் பாதுகாப்பிற்கும் ஊறு விளைக்கும் தீய சக்தி என்றும் குறிப்பிட்டார் அன்றைய ஜனாதிபதி டேனியல் அரப் மோயால்.

1989 இல் நைரோபியில் உள்ள உஹுரு பூங்காவில் அறுபது மாடி வணிக வளாகம் கட்டும் முயற்சியை அந்திய முதலீட்டாளர்கள் தொடங்கிளர். பூங்காவில் உள்ள மரங்களை இதற்காக அழிப்பது சுற்றுச் சூழலைச் சீர்குலைக்கும் என்று எண்ணிய மாத்தாய் , தன் ஆதரவாளர்களுடன் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார். அதன் காரணமாக அரசின் அடக்குமுறைக்கு ஆளானதோடு அவருடைய அலுவலகத்தை விட்டும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்ட்டார். பாராளுமன்றத்திலும் இதன் காரணமாகவே அவர் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டார், ஆனாலும் எதைக் கண்டும் அஞ்சாமல் தன் தொடந்த எதிர்ப்பை வெளிப்படுத்திய மாத்தாயின் முயற்சி காரணமாக அந்த அந்நிய முதலீட்டு வணிக வளாகத்திட்டம் கைவிடப்பட்டது.

ஏப்ரல் 1940 ஆம் ஆண்டு கென்யாவில் நியோ மாவட்டத்தில் தேத்து என்னும் பகுதியில் அகிதே என்னும் கிராமத்தில் பிறந்த வங்காரி முதா மாத்தாய், பசுமைப் போராளியும் அரசியல் புரட்சியாளரும் ஆவார், பள்ளிப் படிப்பைக் கென்யாவில் முடித்த மாத்தாய் உயிரியல் துறையில் மேற்படிப்புகளை அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் படித்தார். 1971 இல் நைரோபியில் அவர் உடற் கூற்றியலில் முனைவர் பட்டம் பெற்றபோது கிழக்காப்பிரிக்காவில் இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் . 19976 இல் நைரோபி பல்கலைக்கழகத்திலேயே விலங்குகளின் உடற் கூற்றியல் துறையில் முதன்மைப் பொநுப்பினைப் பெற்ற போதும் 1977 இல் இணைப் பேராசிரையராக உயர்ந்த போதும் அதனைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமை அவரைப் பின் தொடர்ந்தது.



தொடரும்...



வாசகர் கருத்துக்கள் :


balavelan


egathipatiya suradalil siki ulagam pankararkalai melum pankarar kalaka uruwakum sulalil athu than labathirku ulagai melum melum surandi puviwebamayamaka karanam akirathu. pathivu sirupu





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல்



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<